05 செப்டம்பர் 2010

ஏர் டெல்லா... ஏமாத்து டெல்லா...?

ஏர் டெல்லா... ஏமாத்து டெல்லா...?
நானும் என் மனைவியும் ஏறக்குறைய ஒரு 5 வருசமா ஏர் டெல் சிம் கார்டு பயன்படுத்திக்கிட்டு வர்றோம். போன வாரத்துல ஒரு நாள், என் மனைவியோட சிம் கார்டோட சேவை திடீர்னு நிறுத்தப்பட்டது. சிக்னல் இல்ல, கால் பண்ண முடியல, கால் ரிசீவ் பண்ண முடியல. மொத்ததுல, மொபைல் போன் வேலை செய்யுது...ஆனா சிம் கார்டு வேலை செய்யல. ஏர் டெல் கஸ்டமர் கேர் நம்பருக்கு (121,198) போன் பண்ணி கேட்டப்போ, நீங்க உங்களோட அட்ரஸ் பரூப் மற்றும் போட்டோ குடுத்து இருக்க மாட்டிங்க இல்லேன்னா நீங்க குடுத்த டாகுமென்ட்ஸ் எங்கையாவது மிஸ் ஆகியிருக்கும், அதுனால நீங்க அருகில் இருக்கும் ஏர் டெல் டீலர்கிட்ட போயி தேவையான டாகுமென்ட்ஸ் குடுத்திங்கனா இந்த பிரச்சினை சரி ஆகியிரும்னு சொன்னங்க. (சிம் கார்டு வாங்கும் போதே இந்த எல்லா டாகுமெண்ட்சும் கொடுத்தாதான் சர்விஸ் ஆக்டிவேட் பண்ணுவாங்க...இது நம்ம எல்லாருக்கும் நல்லாவே தெரியும்னு நெனைக்கிறேன்). நானும், கோவில்பட்டியில இருக்கிற டீலர்கிட்ட போயி இந்த பிரச்சினைய சொன்னேன். அவுங்க என்னோட நம்பர அடிச்சு பாத்துட்டு இந்த நம்பரே இல்லைன்னு சொன்னாங்க. உங்களோட சிம் கார்டு ரிஜக்ட் ஆகிருச்சுன்னு சொன்னங்க. எப்படிங்கன்னு கேட்டேன். அது எங்களுக்கு தெரியாது, நீங்க வேணா ஏர் டெல்லுக்கே போன் பண்ணி கேளுங்கன்னு சொல்லிட்டாங்க. இதே நம்பர்ல வேற ஒரு டூப்ளிகட் சிம் கார்டு வாங்கிகிரலாமான்னு கேட்டேன். நம்பரே இல்லாதப்ப, அந்த நம்பர்ல எப்படிங்க இன்னொரு சிம் கார்டு தரமுடியும்ன்னுட்டாங்க. அப்ப என்னங்க பண்ணுறதுன்னு கேட்டப்போ, நீங்க கேஸ் போடுங்கன்னாங்க. கொஞ்சம் பொறுமையா விசாரிச்சப்பத்தான் தெரியுது... ஏமாந்த சோணகிரி நான் மட்டும் இல்ல... என்னைய மாதிரி இன்னும் நெறைய பேர் இருக்காங்கன்னு.
திரும்பவும், கஸ்டமர் கேர் நம்பருக்கு போன் பண்ணி, இந்த விசயத்த சொன்னேன். அவுங்களும் இந்த தடவை செக் பண்ணிட்டு, ஆமா ஆமா உங்க சிம் கார்டு ரிஜக்ட் ஆகிருச்சுன்னு சொன்னாங்க. ஏன்னு கேட்டா அவுங்கள்ட்டையும் பதில் இல்ல. உண்மைய சொன்னா, என்னோட அந்த கால் ல அட்டென் பண்ணுனவுங்களுக்கு (அது ஆணா... பொண்ணானு குரலை வச்சு கண்டுபிடிக்க முடியல) பதில் தெரியல. அப்போ அவுங்க என்ன சொன்னங்கன்னா, உங்களுக்கு ஒரு எஸ் எம் எஸ் இப்போ வரும் அதுல சொல்லியிருக்கிற படி நீங்க செய்யுங்க அப்படின்னு சொன்னாங்க. அந்த எஸ் எம் எஸ்ல *121# காண்டக்ட் பண்ண சொல்லியிருந்தாங்க. (இது ஒன்னும் நம்ம யாருக்கும் தெரியாத புது விஷயம் இல்ல). இந்த பதிலும் என்னோட பிரச்சினைக்கு சரியான தீர்வ சொல்லல. திரும்பவும், எங்க ஏரியா டீலர்கிட்ட போயி இந்த பிரச்சினைய சொன்னேன். அவுங்களும், சார் இந்த பிரச்சினைக்கு நாங்க ஒன்னும் செய்ய முடியாது. நீங்க வேணா மதுரை ஏர் டெல் ஆபிஸ்ல இத பத்தி கம்ப்ளைன்ட் பண்ணுங்கன்னு சொன்னாங்க. இல்லைனா, திரும்பவும் கஸ்டமர் கேர் நம்பர்லயே பேசுங்கன்னு சொன்னாங்க.
நானும் சளைக்காம, திரும்பவும் கஸ்டமர் கேர் நம்பருக்கு பேசுனேன். இந்த தடவ அவுங்க என்னோட அட்ரஸ் டீடைல், எந்த வருஷம் சிம் கார்டு வாங்குனேன், எவ்வளவு நாள் பயன்படுத்தாம வச்சு இருந்தேன்னு எல்லா விபரங்களும் கேட்டாங்க. நானும் எல்லாம் சொன்னேன். இந்த சிம் கார்ட ரொம்ப நாளா பயன் படுத்தாம வச்சு இருந்திங்களான்னு கேட்டாங்க. நான் இந்த சிம் கார்ட ஏறக்குறைய 5 வருசமா தொடர்ந்து பயன் படுத்திகிட்டு வர்ரேன். சர்விஸ் கட் ஆன நாளைக்கு மொத நாள் ராத்திரி வரைக்கும் இந்த சிம் கார்ட பயன் படுத்திக்கிட்டு வந்து இருக்கேன்னு சொன்னேன். அப்புறம், என்னோட அட்ரஸ் டாகுமெண்ட செக் பண்ணிட்டு... நீங்க சொன்ன அட்ரஸ் தப்பா இருக்குன்னாங்க. உணமையில, இந்த சிம் கார்ட நான், பாளையங்கோட்டைல இருக்கும் பொது வாங்குனேன். இப்போ கோவில்பட்டில இருக்கோம். இடையில ஒரு 3... 4... மாசத்துக்கு முன்னாடி, என் மனைவியோட மொபைல் போன் தொலஞ்சு போனப்ப... டூப்ளிகட் சிம் கார்டு பழைய நம்பர்லயே வாங்குனோம். அப்போ கொடுத்த அட்ரஸ் ப்ரூப் டாகுமேன்ட்ல இப்ப இருக்குற கோவில்பட்டி அட்ரஸ் இருக்குது. இதுதான் பிரச்சினையே. மொத தடவ சிம் கார்டு வாங்குனப்பவும், டூப்ளிகட் சிம் கார்டு வாங்குனப்போ கொடுத்த அட்ரஸ் பரூப் டாகுமேன்ட்ல வேற வேற அட்ரஸ் இருந்ததுனால எங்க சிம் கார்ட ரிஜக்ட் பண்ணிட்டாங்களாம். இதையும் ஏர் டெல் பண்ணலாம். டிராய் (TRAI) தான் செஞ்சாங்களாம். இதுக்கு நாங்க ஒன்னும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க.
நான் அவுங்ககிட்ட திரும்ப கேட்டேன், என்னாங்க இது.... வீடு மாறுனா மாறுன அட்ரசதான கொடுக்க முடியும். இதுக்காக, நாங்க பொய்யான அட்ரசயா கொடுக்க முடியும்... அப்படின்னு கேட்டேன். உண்மையிலே ரொம்ப கஷ்டமா இருக்குதுங்கன்னு சொன்னேன். இந்த மாதிரி ஒரு பதிலா ஏர் டெல்ல்கிட்ட இருந்து நான் எதிர் பாக்கல்ல்ன்னு சொன்னேன். அதுக்கு அந்த பக்கம் இருந்து பேசுனவரு (இந்த தடவ பேசுனது ஆம்பள ஆள் தான்), சார் இதுக்கும் ஏர் டெல்லுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எந்த சர்விஸ் புரவைடரும், அவுங்ககிட்ட இருக்கிற கஸ்டமர லூஸ் பண்ணனும்னு நெனைக்க மாட்டாங்க சார்ன்னு சொன்னாரு.
எனக்கு இன்ன ஒரு சந்தேகம் வந்து, அப்படினா இப்போ நான் வச்சு இருக்கிற இன்னொரு ஏர் டெல் நம்பரும் இதே மாதிரி ஒரு நாள் ரிஜக்ட் ஆகிருமான்னு கேட்டேன். அவரும் அதுக்கு நேரடியா பதில் சொல்லாம, டிராய் அமைப்பு பழைய நம்பர்ல இருந்து கொஞ்சம் கொஞ்சமா இத வெரிபை பண்ணிக்கிட்டு இருக்காங்க சார்... உங்களோட இன்னொரு நம்பருக்கும் அட்ரஸ் பரூப் கேப்பாங்க... அப்போ நீங்க உங்கள் அருகில் உள்ள டீலர்கிட்ட இத பத்தி பேசுனிங்கனா உங்களுக்கு ஏதாவது ஏற்பாடு செயுவாங்கன்னு சொன்னாரு. உடனே நான் கேட்டேன், என்னைய கூடிய சீக்கிரம் வேற ஒரு நல்லா சர்விஸ் புரவைடர்க்கு மாற சொல்லி நீங்க இப்பவே வார்னிங் பண்ணுரிங்களா ன்னு கேட்டேன். அவரு அவசர அவசரமா.... அத நான் சொல்ல முடியாது சார்னு சொல்லிட்டாரு.
இந்த தடவ அந்த கஸ்டமர் சர்விஸ் ஆளு ரொம்ப பொறுமையா சரியான தகவலை சொன்னாரு. நான் அவர்கிட்ட என்னோட வருத்தத்தையும் சங்கடத்தையும் அவுங்களோட மேல் அதிகாரிகள்ட்ட சொல்ல சொன்னேன். அவுங்களோட மெயில் டி யும் கேட்டு வாங்கிகிட்டேன். அவர்கிட்டயே.... நான் இத பத்தி, என்னோட எல்லா நண்பர்கள்கிட்டையும் முடிஞ்ச வரைக்கும் சொல்லுவேன்... அதோட என்னோட ப்ளாக் ளையும் எழுதுவேன்னு சொன்னேன்.
அவர்கிட்ட இருந்து ஒரு 'சோகமான சரி' பதிலா வந்தது.
எனக்கு என்ன புரியலைனா நண்பர்களே...
* சொந்த வீடு வச்சு இருக்குறவங்க மட்டும் தான் மொபைல் போன் சர்விஸ் பயன் படுத்த முடியுமோ...?
* சொந்த வீடோ... வாடகை வீடோ.... வீட்ட மாத்திட்டோம்னா வச்சு இருந்த சிம் கார்ட தூக்கி போட்டுற வேண்டியது தானா...? அதுல எவ்வளவு பேலன்ஸ் வச்சுருந்தாலும்.... (கடைசியா, எங்க சிம் கார்ட்ல 120 ரூபா பேலன்ஸ் இருந்தது)
* எல்லா சர்விஸ் புரைவைடருக்கும் இந்த மாதிரி பிரச்சனை டிராய் அமைப்புக்கிட்ட இருந்து வரும் தானே. அப்படினா, இன்னமும் எல்லாரும் சேர்ந்து ஏன் இதுக்கு ஒரு நல்லா முடிவ எடுக்க மாட்டேங்குறாங்க....?
* ஒரு வேளை, இது ஏர் டெல்லே தவறுதலா செஞ்சுட்ட ஒரு காரியமோ...? அந்த தவற மறைக்கிறதுக்கு, டிராய் மேல பழிய போடுறாங்களோ...?
எது என்னமோங்க... கடைசியா பாதிக்கபடுறது நம்மள மாதிரி (உங்களையும் சேத்துகிரலாம்ல...) சாதரனமானவங்கதான... என்ன பண்ணுறதுன்னு தெரியல...
ஏதாவது செய்யணும்ங்க...
நான் ஏதாவது செஞ்சேன்னா உங்களுக்கு சொல்லுறேன். நீங்க ஏதாவது செஞ்சிங்கனா என்கிட்டே சொல்லுங்க. நாம எல்லாரும் சேந்து செய்யுவோம்.
எல்லாரும் நல்லா இருக்கணும். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கணும். அதுக்கு யாரு என்ன செஞ்சாலும் அவுங்களோட சேந்துக்கிற வேண்டியதுதானே...
செய்வோங்க.... வாங்க...

9 கருத்துகள்:

Ŝ₤Ω..™ சொன்னது…

சங்கர்.. இது போல எனக்கும் நடந்து இருக்கு.. நான் சொந்தமா தொழில் செய்யறேன்.. என் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்காக 2 வருடம் முன் ஏர்டெலில் 6 நம்பர் எடுத்தோம். அதில் 1 வாங்கி ஆக்டிவேட் செய்து 2 மாதத்திலேயே வேலை செய்யவில்லை.. கேட்டதுக்கு அட்ரஸ் வெரிபிகேஷன் டிக்லைன் ஆயிடுச்சுன்னு சொன்னாங்க.. அதெப்படிங்க 6 நம்பர்ல 1 மட்டும் டிக்லைன் ஆகும்ன்னு கேட்டதுக்கு சரியான பதில் இல்ல.. எங்களுக்கும் அப்போது அது பெரிய விஷயமா படல.. விட்டுட்டோம்..

1 வருடம் களித்து, மீதி இருந்த 5ல் 3 நம்பர் வேலை செய்யல.. கேட்டதுக்கு அதே பதில்.. அட்ரஸ் வெரிபிகேஷன் டிக்லைன்.. புடிச்சி ஒரு ஏறு ஏறினோம்.. அப்பொ மறுபடியும் அட்ரஸ் புரூஃப் குடுங்க 24 மணி நேரத்துல ஆக்டிவேட் ஆகிவிடும்ன்னு சொன்னாங்க.. ஆனா, புது சிம் கார்டு வாங்கனும்ன்னு சொன்னாங்க.. அதே மாதிரி செய்தவுடனே, மறுநாள் வேலை செஞ்சது..

இப்போ சமீபத்தில ஒரு நாள், ஒரே ஒரு நம்பர் மட்டும் வேலை செய்யல.. செம டென்ஷன்.. அந்த நம்பர் என் நிறுவனத்தின் மிக முக்கிய நம்பர்.. கஸ்டமர் கேரில் கேட்கவே இல்ல.. நேரா நாங்களே போய் சிம் கார்டு மாத்தினோம்.. இப்போ நல்லா வேலை செய்யுது..

இது என்ன காரணம்னு தெரியல..

என் தனிப்பட்ட உபயோகத்திற்கும் ஏர்டெல் தான் கடந்த 6 வருடமா பயன் படுத்தறேன்.. அது போஸ்டு பெய்டு.. 6 வருஷத்தில நான் 3 வேடு மாறிட்டேன்.. இது வரை அந்த நம்பருக்கு ஒன்னுமே ஆனதில்லை..

சோ.. இவனுங்க பிரீ பெய்டு கார்டுகளுக்கு மட்டும் தான் இப்படி பிரச்சினை செய்யறாங்கன்னு நல்லாத் தெரியுது..

Ŝ₤Ω..™ சொன்னது…

ஏர்டெல்ல இது மட்டும் பிரச்சினை இல்ல.. ஏர்டெல் டிஜிடல் டிவியிலயும், பிராட்பேண்டுலயும் நிறைய பிரச்சினைகள்..

இது போல கஸ்டமர் கேர் பிரச்சினைகளைத் தீர்க்க Nodal Officer, Appeleate Authority எல்லாரும் இருக்காங்க.. ஆனா அவங்க கிட்ட போனாலும் ஒன்னும் சொல்லிக்கொள்ளும் படியா நடக்கறது இல்ல..

ஒரு முறை டிஜிடல் டிவி பிரச்சினைக்கு ஒரு நோடல் ஆபீஸர் உண்மையிலேயே நல்ல உதவி செய்தார்.. அவருக்கு நன்றி..

kaviswa சொன்னது…

2 nalaikku munnadi daily danthiyil entha mettar padithen.maduraiyil ore naalil 100kkum athikamana number cut aanatha pottirunthaanga.

ப.கந்தசாமி சொன்னது…

ஏர்டெல் நான் 6 வருடங்களுக்கு முன் கொஞ்சநாள் வைத்திருந்தேன். ஒரு தடவை டூர் போகும்போது ரோமிங் வேண்டுமென்று கேட்டேன். என்னமோ செய்து விட்டு ரோமிங் கொடுத்துவிட்டோம் என்றார்கள். டூர் போகும்போது ரோமிங் வேலை செய்யவில்லை. திரும்பி வந்து கேட்டால் சரியான பதில் இல்லை.

BSNL ல் அடுத்த மாதம் பிரிபெய்டு கனெக்ஷ்ன் கொடுத்தார்கள். உடனே மாறிவிட்டேன். இன்று வரை எந்த தொல்லையும் இல்லை. இப்போது விநாடிக்கு ஒரு பைசா. சில சமயம் 10 பைசாவில் பேசி முடித்திருக்கிறேன்.

KATHIR = RAY சொன்னது…

இதுக்கு ஒரே தீர்வு தான்
நீங்கள் முதலில் சிம் எடுத்த அட்ரஸ் ப்ரூப் copy எப்போதும் ஒன்னு கூட காபி எடுத்து வெச்சுக்கணும்
எந்த அட்ரஸ் நீங்க மாறினாலும் முந்தைய அட்ரஸ் நீங்க வெரிபிகேசன் பண்ணும் பொது சொல்லணும் அதே அட்ரஸ் ப்ரூப் பயன் படுத்தனும் ஒரு பிரச்சனியும் வராது
கூடவே இன்னொரு நெட்வொர்க் சிம் வெச்சுக்கணும் அதையும் மத்தவங்ககிட்ட தெரிவிக்கணும் அப்போதான் பிரச்சன சரி செய்யற வர சமாளிக்க முடியும்

ravikumar சொன்னது…

Lot of people had thee type of problem i heard. Hence
Airtel grows

theerppavan சொன்னது…

செல்வம்... (உங்க பேர் அதுதானே... Ŝ₤Ω..™ ),
உங்கள கம்பேர் பண்ணும்போது... என்னோட பிரச்சினை ரொம்ப சாதரனமானதுதான் போல... இப்படிலாம் நடந்ததுனா எப்படிங்க பிசினெஸ் பண்ணமுடியும்?
ஒன்னு தெரியுமா... இந்த இடுகைக்கு அப்புறம் நெறையா பேரு ஏர்டெல் நால அவுங்க அவுங்க சந்திச்ச பிரச்சினைய வெளிய சொல்ல ஆரம்பிச்சு இருக்காங்க.
ஒங்க பின்னூட்டத்துக்கு அடுத்ததா வந்திருக்கிற பின்னூட்டத்த பாருங்க... மதுரைல ஒரே நாள்ல நூறு சிம் கார்ட ரிஜக்ட் பண்ணிருக்காங்களாம். அதுல எத்தன பேரு உங்கள மாதிரி பிசினஸ் மேனோ...?

theerppavan சொன்னது…

கதிர்,
உங்க ஐடியா சூப்பர்! ஓரளவுக்குத்தான் நாமளும் ஏமாற முடியும். அதுக்கப்புறம் நாமளும் ஏமாத்த வேண்டியதுதான்...ஹா ஹா ஹா.....
நீங்க சொல்லுறதுல இருந்து ஒன்னு தெரியுதுங்க.... மைனஸ் x மைனஸ் = ப்ளஸ்....

theerppavan சொன்னது…

PK சார்,
எதுக்கு வம்பு..... முள்ளு மேல சேலை விழுந்தாலும்.... சேலை முள்ளு மேல விழுந்தாலும்.... கிழிய போறது எனாமோ சேலைதானே.... னு சொல்லுறிங்க...?