28 ஜூன் 2010

அதிகாரியும்... அரசியல்வாதியும்.

நேத்து சாயங்காலம் வீட்ல இருந்து கோவில்பட்டி போகும் போது (முகிலன பாட்டு கிளாஸ்ல விட போனேன்) பை பாஸ் பால எறக்கத்துல, போலிஸ்காரங்க கொஞ்ச பேரு நின்னு போற வர்ற வண்டிகள நிப்பாட்டி லைசன்ஸ், மத்த டாகுமென்ட்ஸ் எல்லாம் இருக்குதான்னு செக் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அதுல ஒரு வண்டிய நிப்பாட்டி வழக்கமான விசாரணைகள் நடத்த ஆரம்பிச்சாங்க. அந்த வண்டிக்கு சொந்தகாரர், அந்த ஏரியா கிராம பஞ்சாயத்து தலைவர். போலீஸ்காரங்கல எகிற ஆரம்பிச்சார் பாருங்க... நான் யாருன்னு தெரியுமா...ஆள் தெரியாம வண்டிய நிப்பாட்டிடிங்க...என்கிட்டயே லைசன்ஸ் கேக்குறிங்களா...நான் ஒரு கட்சிக்காரன் (ஆளுங்கட்சி) என்னையே நிப்பாட்டுறிங்கலான்னு ஒரே சத்தம் போட்டார். அங்க டூட்டில இருந்தது, அந்த வண்டிய நிப்பாட்டினது ஒரு லேடி போலிஸ். அவுங்களும் விடல... நீங்க யாரு என்னனு பாத்து வண்டிய நிப்பாட்டல. எல்லா வண்டிய நிப்பாட்டுன மாதிரிதான் உங்க வண்டியையும் நிப்பாட்டினேன். ஒரு டாக்குமெண்டும் இல்லாம என்னென்னமோ பேசுறிங்க...அப்படி இப்படின்னு இவுங்களும் வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாங்க.
உண்மையிலயே, அந்த லேடி போலிஸ் ரொம்ப ஸ்ட்ரிக்டாதான் இருந்தாங்க. ஆனா அந்த பஞ்சாயத்து தலைவர் (கட்சிகாரர்)தான் அவரோட பவர ரொம்பவே மிஸ் யூஸ் பண்ண ஆரம்பிச்சாரு.
ஒரு விசயத்த நல்லா கவனிச்சு பாத்தோம்னா ஒரு நெடு நாளைய உண்மை இங்க புரியும். என்னானா, வேல செய்யற அதிகரிங்கள வேல செய்ய விடாம தடுக்குறது... இந்த மாதிரி அரசியல் வாதிகள்தான். என்ன செஞ்சு இதையெல்லாம் சரி பண்ணுறதுன்னு தெரியல.
ஒரு பக்கம் பயமா இருக்கு. இன்னொரு பக்கம் அவுங்கள அடிக்கனும்னு ஆத்திரமாவும் இருக்கு. இந்த மாதிரியான விசயங்களுக்கு ஒரு நல்லா தீர்ப்பு கெடச்சா எல்லாருக்கும் சந்தோசம்தான். பாப்போம், என்னைக்காவது ஒரு நாள் விடியாமலா போயிரும்...?

22 ஜூன் 2010

உனக்கு...?

முன் சென்ற உன்னை
பின் வளைத்து நான் தந்த
முத்தத் தருணங்கள்...
அதில்
நீ காட்டிய
கோபச் சிரிப்புகள்...
என் கவனம் ஈர்க்க
எனக்காக மட்டும்
வெளியே தலை காட்டிய
உன் உள்ளாடைகள்...
என்னைத் திரும்பிப் பார்க்கச்
செய்ய
இசையாக நடந்த
உன் கொலுசுக் கால்கள்...
வெட்கமாய்
நீ உதிர்த்த
ச்சீ ... போடா... க்கள் ...
காதலை காதலுடன்
பேசிய
உன் கண்கள்...
அத்துனையும்
ஈரம் காயாமல்
இன்னும் என்னுள்.
நீ...
உனக்கு...?

என் காதல்!

இதமாய் வருடி
சுகம் தரும்
நாணல்
என் காதல்.
நீ தென்றலா
சூறாவளியா...?

நான் கடவுள்!

மையத்தில் அமர்ந்திருந்தேன்.

மதிஎங்கும் அலைகழிப்புகள்.

இரு புறமும் என்னை அமர்த்திப் பார்த்தேன்.

இருபுறமும் மாறி மாறி

தங்களை நிரூபித்தன.

அகமும் புறமும்

கருப்பும் வெள்ளையுமாகவே இயங்கின.

வளத்தின் மீதான அலட்சியம்

சில நிகழ்வுகளால்

அதன் மேல் பயத்தைத் தந்தது.

சிந்தை சிதறி

எதுவும் சிறை படவில்லை.

ஆனாலும்

என் மனம் அரற்றிக் கொண்டேஇருந்தது...

நான் கடவுள்!

17 ஜூன் 2010

நானும் ஆடும்

உன்னையும்
நீ இருக்கும் கொட்டிலையும்
நான் பார்க்கத் தவறுவதில்லை...
ஒவ்வொரு முறையும்
அந்த வீட்டை நான்
கடக்கும்பொழுதும்
நீயும்
என் மீதான
உன் பார்வையை
முடிந்த வரை தவிர்ப்பதில்லை.
சில சமயங்களில்
நான் பார்த்திருக்கிறேன்...
உன்னை ஆட்கொண்டிருக்கும்
பசி
அடங்குமலவுக்கு மட்டும்
சிறு புல் கட்டோ
இல்லை தழைகளோ
உன் முன் பரப்பப்பட்டிருக்கும்.
மிக மகிழ்ச்சியோடு
நீ உண்ணத் தொடங்கியிருப்பாய் .
பல வேலைகளில்
உன் முன்
உன் பசி தேவைக்கும்
அதிகமான
மாமிசப் படையல்
படைக்கப்பட்டிருக்கும்.
நீ
அதனை வெறுத்து
மறு நாள் உனக்கு
அளிக்கப்படவிருக்கும்
புல் கட்டுக்காய்
காத்துக்கொண்டிருப்பாய்.
நான் வெட்கி சிறுத்து
தலை குனிந்து
உன்னைக்
கடந்துவிடுவேன்.
என்னை
சிந்திக்கத் தொடங்கிவிடுவேன்.
நானும் பசித்திருந்திருக்கின்றேன்
எனக்கும் உன்னைப் போலவே
உணவு வழங்கப்பட்டிருக்கிறது
சில சமயம்
என் உடலுக்கு
உகந்த உணவு.
பல வேளைகளில்
எனக்கு சிறிதும் ஒவ்வாத
மலமும் சிறுநீரும்.
உன்னைப் போல
எதுவும் உண்ணாமல்
பசியை வெல்ல
என்னால் இயலாது.
மலத்தை வழித்து
தின்றுவிடுவேன்.
சிறுநீரை மண்டியிட்டு
நக்கி குடித்துவிடுவேன்.
பசியை தனித்துக் கொள்வேன்
இப்போதெல்லாம்
முன்னைப் போலில்லை.
மலம் மணக்கத் தொடங்கிவிட்டது
சிறுநீர்
சர்க்கரைப் பாகாகிவிட்டது.
இச் சில நாட்களாகதான்
நான் உன்னைக் கண்டு
வெட்கிச் சிறுத்து விடுகிறேன்.
உன் மேல் பொறாமையும் கூட.
நானும் ஆடாகப் பிறந்திருக்க வேண்டும்.
பரவயில்லை.
இப்பிறவியை
மணக்கும் மலத்துடனும்
இனிக்கும் சிறுநீருடனும்
மனிதனாகவே
கழித்துவிடுகின்றேன்.
என்
அடுத்த பிறவி
ஆடாக
அமைய
நீயும் வேண்டிக்கொள்.



16 ஜூன் 2010

மலரும் மோகப் பூக்கள்

மலரும் மோகப் பூக்கள்
உன்னைக் கண்டு
என் கண்களில் மோகப்
பூக்கள் பூக்கும்.
உன் உதடுகளில்
மோகனப் புன்னகை மலரும்.
உச்சி முதல் பாதம் வரை
உள்ளபடியே உன்னை
உள்வாங்கிக் கொள்வேன்.
என் கண்களின்
பயணத்தில்
உன் உடல் சிலிர்க்கும்.
உன் உதட்டுப் புன்னகை
உதிரத் தொடங்கும்.
அதை நான்
என் இதழ்களில் ஏந்துவேன்.
வேறெந்த தித்திப்பும்
என் புத்திக்கு எட்டாது.
உனக்கும்.
இரு சோடி கால்கள்
தரையில் அலையும்
இரு சோடி கைகள்
சுவரில் அலையும்.
விரல்கள் விரைந்து அலைந்து
விளக்கை விலக்கும்.
இருளில்
உன் முகம் மூடியிருக்கும்
கரங்கள் பிரிக்கின்றேன்.
என் கண்கள் கூசுகின்றன.
நீ இதழ் பிரித்து சிரிக்கின்றாய்.
நான் என் கண்கள் மூடி
உன் இதழ்கள் மறைக்கின்றேன்.
இரண்டே நொடியில்
இரு சோடி இதழ்கள் வழியே
இதயம் இடம் மாறுகிறது.
அனைத்துக்கும் நடுவே
அணைப்பும் அரங்கேறுகிறது.
உடைகள் கசங்கி
உடல் பிதுங்கி
உதறி பிரியும்போது
ஏதோவொரு உன்னதம்.
இரு உடல்களும்
உடைகள் துறக்கின்றன.
கதவுகள் திறக்கின்றன.
உடல் பிசைந்து
இறுகத் தழுவி
இதயம் நொறுங்க இயங்கி
இவ்வுலகைக் கடந்து....
இரண்டாம் முறை
உடல் பிரிந்து
போர்வைக்குள் உடல் மறைத்து
உள்ளங்களை உடைத்து
வார்த்தைகளை உதிர்க்கின்றோம்.
உனக்குப் பேச்சும்
எனக்கு செயல்களும் நிறைய
போர்வைக்குள் சில நேரம்
என் கரங்கள்
மலைகள் மூடுகின்றன
பள்ளம் மறைக்கின்றன.
உன் வெட்கப் புன்னகை...
காதல் பார்வை...
என்னை கிறங்கச் செய்கிறது.
இருவரும் மல்லார்ந்து பார்த்தால்
காற்றாடி சுழன்று கொண்டிருக்கிறது.
சுழற்சி தொடங்கிய
இடத்திலேயே முடிகிறது
முடிந்த இடத்திலேயே தொடங்குகிறது.
மீண்டும் மீண்டும்....


15 ஜூன் 2010

முயன்றுதான் பார்ப்போமே...

முயன்றுதான் பார்ப்போமே...

  • ஆள் இல்லாத இடங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் மின்சார உபகரணங்களை (பேன், லைட்) அணைத்துவிடுவோம்.
  • பயன்பாடு இல்லாமல் தண்ணீர் வீணாவதை முழுவதுமாகத் தவிர்ப்போம்.
  • குறைந்தபட்சம் வீட்டிற்கு ஒரு மரக்கன்று ஒவ்வொரு வருடமும் நட்டு வளர்ப்போம்.
  • நடந்து செல்ல முடிகின்ற இடங்களுக்கு நடந்தே செல்வோம் - பெட்ரோல், டீசல், கேஸ் போன்ற எரிபொருள்களை சிக்கனமாகப் பயன்படுத்துவோம்.
  • சமையல் எரிபொருள்களை சிக்கனமாகப் பயன்படுத்துவோம்.
  • பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் காகிதங்கள், பிளாஸ்டிக் தம்ளர்கள் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்ப்போம்.
  • பொது இடங்களில் எச்சில் துப்புவதை, குப்பைகள் போடுவதை நிறுத்துவோம்.
  • சுத்தமாக இல்லாத பொது கழிப்பிடங்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்போம் - அதிகாரிகளிடம் தெரிவிப்போம்.
  • வயதில் மூத்தவர்களை எல்லா சமயங்களிலும் மரியாதையாக பேசுவோம், மரியாதையாக நடத்துவோம்.
  • வயதில் சிறியவர்களுக்கு நல்லா விசயங்களை மட்டும் சொல்லிக் கொடுப்போம். அவர்களிடம் அன்பாக அணுகுவோம்.
  • பெரியோரை மதிப்போம், சிறியோரை அன்பாய் அணைப்போம், இயற்கையை பாதுகாப்போம், மனித நேயம் வளர்ப்போம். நல்லா சமுதாயம் படைப்போம். வலிமையான நாட்டை உருவாக்குவோம்.

ஒரு மரத்துப் பழம்

ஒரு மரத்துப்
பழங்களிலேயே சுவை மாறுமோ?
உன் வீட்டில்
நீ மட்டும் தனி அழகு...?

வார்த்தைகள்

வார்த்தைகள்
ஏதேதோ எழுத நினைத்து
வார்த்தைகளை மனதில்
சேர்த்து
பேனா தேடி பேப்பர் எடுத்து
வார்த்தைகளுக்காய்
வாசல் திறந்து
வருகைக்காய் நோக்கினால்...
வக்கனையாய் அமர்ந்துகொண்டு
வர மறுக்கின்றன!

எட்டாக் கனி

எட்டாக் கனி!
விண்தாண்டி
விண்மீன் பிடிக்க
கை நீட்டி கால்கள் எக்கி... எக்கி....
முடியவில்லை.
நீ எனக்கு
என்றும் எட்டாக் கனிதான்.

05 ஜூன் 2010

என் திருமண அழைப்பிதழ்

"அன்பே மனிதம்"
காதலொருவனை(ளை)க் கைப்பிடித்தே அவன்(ள்) காரியம் யாவினும் கைகொடுத்து.
-பாரதியார்.
திருமண அழைப்பிதழ்
உள்ளன்புடையீர்,
வணக்கம்.
வள்ளுவராண்டின் (2032)
இவ்வினிய நாளில் (04-11-2001)
வாழ்க்கைப் புத்தகத்தின்
ஓர் புதிய அத்தியாயத்திற்கு
நாங்கள்
அகரம் இடுகிறோம்.
இதில்
sangeetha(a) ஸ்வரங்கள்
sanka(r) மம் ஆகின்றன.
எங்கள் இலட்சியங்கள்
வெற்றிக்காக
சீர் செய்யப்படுகின்றன.
இவ்வினிய நாளில்
உங்கள் வருகையை
மறுப்பின்றி
எங்கள் புத்தகத்தின் பக்கங்களில்
பதிவாக்குங்கள்.
அத்தியாயம் பிழையின்றி
வெளிவர வாழ்த்துங்கள்.
என்றும் அன்புடன்
கி.சங்கர்
கோ. சங்கீதா
காலை 10.45 - 11.45
மலேசியா மஹால் திருமண மண்டபம்,
இந்திரா நகர், கோ.புதூர், மதுரை - 7

"மறுப்புகள் மறுக்கப்படுகின்றன"

அழகான தவறுகள்.

அழகான தவறுகள்.
அழுகைச் சத்தம்!
உணர்ந்து கொண்டேன்.
நான் பிறந்து விட்டேன்.
உடல் சொல்லுமாமே...?
நான் இவனென்று.
இனிப்புகள் சுவைக்கப்பட்டன.
குழந்தையில்
கலந்தே கிடைக்கப்பெற்றன.
இவனதும் இவளதும்
வளர் பருவத்தில்
பல்லாங்குழியும் தாயமும்
மனதுக்குப் பிடித்தன.
கிட்டயும் பம்பரமும்
கரங்களில் திணிக்கப்பட்டன.
பின்புறம் இடுப்பு வரை
பாவாடையை தூக்கி
முன்புறம் முட்டியைப்
பாவாடையால் மூடி
சிறுநீர் கழிக்க ஆசை.
அரைக்கால் டவுசருக்குள்
அம்மணம் அமுக்கப்பட்டது.
மனம் மஞ்சளை நாடியது
உடல் சவரக்கடைக்குள் தள்ளப்பட்டது.
பூ தாகத்தால்
தலை முடி வறண்டு போனது.
கைகள் கல் சாமிகளுக்குப்
பூக்களை மாலையாக்கியது.
உடல்
நான் இவன் என்றது
மனம்
நான் இவள் என்றது.
அவர்கள் புறம் பார்த்தார்கள்
நான் அகம் பார்த்தேன்.
என் வெளி அழகானது.
இறைவனின்
அழகான தவறுகளில்
நானும் ஒன்று.

உன்னைப் பிடிக்கும்

உன்னைப் பிடிக்கும்
என்
முறுக்கு மீசை
முள் தாடி
முழங்கை வரை மடிக்கப்பட்ட
முழுக்கைச் சட்டை
தும்பை வண்ண வேட்டி
எதுவும் ஒவ்வாது உனக்கு.
எனக்கு
உன்னைப் பிடிக்கும்.

நானும் தமிழும்.

நானும் தமிழும்.

நானும் அவளும்

முப்பது வருட

நண்பர்கள்!

நான் அவ்வப்போது

அவளைக் கொல்வேன்.

அவள் எப்பொழுதும்

சிரித்திருப்பாள்.

அவள் சாகாவரம்

பெற்றவள்.

நான் அவளைக்

கொல்லும் வரம் பெற்றவன்.

கொலைகள் தொடரும்.

04 ஜூன் 2010

வாங்கடா வாங்க 2010

Å¡í¸¼¡ Å¡í¸ 2010

þó¾ ÅÕºõ “Å¡í¸¼¡ Å¡í¸” ¿¢¸ú º¢ÈôÀ¡¸ ¿¼óÐ ÓÊó¾Ð. þó¾ ÅÕ¼ò¾¢ü¸¡É “Å¡í¸¼¡ Å¡í¸” ¿¢¸ú¨Â ¿¼òОüìÌ «Õû ¦ºó¾¢Ä¢ý ÀíÌ þýȢ¨Á¡¾Ð. «Åý¾¡ý ӾĢø þ¾¨Éô ÀüȢ §À¨É ¬ÃõÀ¢ò¾Ð. À¢ýÉ÷ «Ð ¦ÁÐÅ¡¸ ÝÎ À¢ÊòÐ, ¦Àí¸ÖÕÅ¢ø ¿¼òÐÅÐ ±É ÓÊ× ¦ºöÂôÀð¼Ð. ¦ƒÀ¢, ¸¡÷ ÁüÚõ ƒí¸¢ø «¾ü¸¡É ²üÀ¡Î¸¨Ç ¦ºö §¸ðÎ즸¡ûûôÀð¼¡÷¸û. ²üÀ¡Î¸û ¿¼óЦ¸¡ñÊÕìÌõ §À¡§¾, þ¨¼Â¢ø ¸¡÷ ¸ÆñΦ¸¡ñ¼¡Öõ (¸¡÷ ¦ºý¨ÉìÌ Á¡üÈÄ¡¸¢ ¦ºýÚÅ¢ð¼¡ý) ¦ƒÀ¢ ÁüÚõ ƒí¸¢ø þÕÅÕõ «¨ÉòÐ ²üÀ¡Î¸¨ÇÔõ º¢ÈôÀ¡¸ ¦ºö¾¢Õó¾É÷. ¦Ãº¡÷ð ²üÀ¡Î ¦ºöž¢Ä¢ÕóÐ §À¡ìÌÅÃòÐ ²üÀ¡Î¸û Ũà «¨ÉòÐ ²üÀ¡Î¸¨ÇÔõ º¢ÈôÀ¡¸ ¦ºö¾¢Õó¾É÷. Åó¾¢Õó¾Å¡÷¸ÙìÌ “Ê º÷ð” (¬ñ¸ÙìÌ), ÁÉ¢À÷Š (¦Àñ¸ÙìÌ), ¦Àýº¢ø ¼ôÀ¡ì¸û, Äïî ¼ôÀ¡ì¸û (º¢ÚÅ÷ º¢ÚÁ¢¸ÙìÌ) ¦¸¡ÎòÐ «ºò¾¢Å¢ð¼É÷.

¿£í¸û «¨ÉÅÕõ ·§À¡ð§¼¡¸û «¨Éò¨¾Ôõ À¡÷ò¾¢ÕôÀ£÷¸û ±É ¿¢¨É츢§Èý. ¿¡ý ÁüÚõ ºÃŽý ·§À¡ð§¼¡ì¸¨Ç «ô§Ä¡ð ¦ºöÐŢ𧼡õ. áƒý, Á¢É¢ ƒí¸¢ø þÕÅÕõ ·§À¡ð§¼¡ì¸¨Ç «ô§Ä¡ð ¦ºö§ÅñÎõ.

þó¾ ÅÕ¼õ Àí§¸ü§È¡÷ :

1. ¦ƒÂÀ¢Ã¸¡‰ (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ ¸¡¨Ä)

2. ¦ºó¾¢ø ÓÕ¸ý, Á½¢¦Á¡Æ¢, ô¡¢ò¾¢¸¡, º÷§Å‰ÅÃý (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ ¸¡¨Ä)

3. ¦Ãí¸Ã¡ƒý (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ ¸¡¨Ä)

4. À¢Â¡¡¢ À¡Ò (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ ¸¡¨Ä)

5. ¦ºó¾¢ø §ÅÄý (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ À¸ø)

6. ¸¡÷¾¢§¸Âý, ÍÁÉ¡, º¢ò¾¡÷ò (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ ¸¡¨Ä)

7. À¢Ãº¡óò (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ þÃ×)

8. ¸¡÷ÅÇÅý (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ À¸ø)

9. ºÃŽý (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ À¸ø)

10. †À¢ÒøÄ¡ (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ À¸ø)

11. «Õû ¦ºó¾¢ø (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ À¸ø)

12. áƒý (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ À¸ø)

13. ·ôáýº¢Š (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ Á¡¨Ä)

14. ÌÕ À¡Š¸÷ (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ ¸¡¨Ä)

15. ºí¸÷, ºí¸£¾¡, Ó¸¢Äý, ¦ºó¾¢Õ (ÅÕ¨¸ - þÃñÎ ¿¡û¸û Óýɾ¡¸§Å ÅóÐÅ¢ð¼É÷)

16. Á½¢¸ñ¼ý, ¯Á¡, ¬¾¢ (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ þÃ× 2:30 Á½¢ «ÇÅ¢ø ÅóÐ §º÷ó¾É÷ - Á¢¸×õ ¸Š¼ôÀðÎ)

17. ·¦ÀÄ¢ìŠ (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ Á¡¨Ä)

18. ¬÷,±Š.¸¡÷¾¢§¸Âý (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ þÃ×)

ÁüÚõ ¦¾¡¨Ä àÃò¾¢Ä¢ÕóÐ ¦¾¡¨Ä§Àº¢ ãÄõ Àí§¸ü§È¡÷ (§¾Å¡Éóò, Á†¡Ã¡ƒý, þÇí§¸¡, ÓòÐÌÁ¡÷, ͧÉ, º¢ÅáÁý)

¦ƒÂÀ¢Ã¸¡‰, ¸¡÷ÅÇÅý, †À¢ÒøÄ¡, «Õû ¦ºó¾¢ø, ÌÕ À¡Š¸÷ ¬¸¢§Â¡÷ ÌÎõÀòмý ÅÕÅ¡÷¸û ±É ±¾¢÷À¡÷ì¸ôÀð¼Öõ, þó¾ Ó¨ÈÔõ «øÅ¡ ¦¸¡Îò¾É÷.

ÓòÐÌÁ¡÷, ͧÉ, ƒ¡ý, «õÀ¡ §ƒÀ¢, «Õñ¸ñ½ý §À¡ýÈÅ÷¸Ùõ þõÓ¨È «øÅ¡ ¦¸¡Îò¾É÷. «¾¢Öõ, ÓòÐÌÁ¡÷ ¸¢ñÊ ¦¸¡Îò¾ «øÅ¡ Á¢¸ þÉ¢ôÀ¡¸ þÕó¾Ð. «¾üÌ «Åý ¦º¡ýÉ ¸¡Ã½õ Á¢¸ ¸¢Ù ¸¢ÙôÀ¡¸ ¸Õ¾ôÀð¼Ð - «ÅÛìÌ ±Ã‡ý ôáôÇÁ¡õ - ¸õ¦Àɢ¢ø.

«¾¢¸Á¡É ÌÎõÀò¾¢É÷ ¸ÄóЦ¸¡ñ¼ Ó¾ø Å¢ Å¢ þÐÅ¡¸ þÕó¾¡Öõ, ¿ÁÐ Óó¨¾Â Å¢ Å¢ ì¸Ç¢ø ¿¡õ ¦ºöÅÐ §À¡ýÈ þÃ× ¸ÄóШá¼ø þõÓ¨È Á¢Š…¢í - ¸¡Ã½õ ¡÷ «È¢Å¡§È¡ ...? ¬É¡ø, þÃ× ¬ð¼õ º¢ÈôÀ¡¸ þÕó¾Ð - þó¾ ¬ð¼ò¨¾ º¢ÚÅ÷¸û ¬ÃõÀ¢ì¸, ºÃŽý ±ÎòÐ ¦ºøÄ «¨ÉÅÕõ ´ýÚ ÜÊ ÓÊò¾É÷.

§ÁÖõ, þõÓ¨È ÌÊÔõ ¦¸¡ïºõ ¦¸¡Èîºø¾¡ý. ¬É¡ø, ±ô§À¡Ðõ §À¡Ä «Õû ¦ºó¾¢ø, ºÃŽý ÁüÚõ ÌÕ þõÓ¨ÈÔõ ¦Á¢ý¨¼ý ¦ºö¾É÷.

22õ §¾¾¢ ¸¡¨Ä ´Õ 10 Á½¢ «ÇÅ¢ø Á¢É¢ ƒí¸¢ø ÁüÚõ «Åý ÌÎÁôò¾¢É÷ ±ý¨ÉÔõ ±ý ÌÎõÀò¾¢É¨ÃÔõ «ÅÉ¢ý ¸¡¡¢ø «¨ÆòЦ¸¡ñÎ ÎÄ¢ô ¦Ãº¡÷ðÊüÌ ¦ºýÈÉ÷.

¦ƒÀ¢, «ÅÉÐ ¸¡¡¢ø ƒí¸¢ø ÁüÚõ «Åý ÌÎÁôò¾¢É¨Ã «¨ÆòЦ¸¡ñÎ ¦Ãº¡÷ðÊüÌ Åó¾¡ý.

¦Ãí¸Ã¡ƒý «ÅÉÐ ŠÜðÊ¢ø (ÒÐ ŠÜðÊ) ÌÕÀ¡Š¸¨Ã «¨ÆòЦ¸¡ñÎ ¦Ãº¡÷ðÊüÌ ÅóÐÅ¢ð¼¡ý.

¦ºý¨É¢ø þÕóÐ ¸¡÷ÅÇÅý, ºÃŽý, †À¢ÒøÄ¡, «Õû ¦ºó¾¢ø ÁüÚõ áƒý ¬¸¢§Â¡÷ ¸¡¡¢ø ÅóÐ ÅóÐ ÅóÐ ÅóÐ ÅóÐ .... . . . . . . . . §º÷ó¾É÷.(§Åæ÷ ºÃŽ¡ ÀÅý ÅƢ¡¸)

§ÁüÌÈ¢ôÀ¢ð¼Å÷¸û ÁðΧÁ ¦Ãº¡÷ðÊø 22õ §¾¾¢ Á¾¢Â ¯½× º¡ôÀ¢ð§¼¡õ.

·ôáýº¢Š Å¢Á¡Éò¾¢ø ¦ºý¨É¢ĢÕóÐ ´Õ Á½¢ §¿Ãõ À½õ ¦ºöÐ Àí¸ÖÕ ÅóÐ §º÷óÐ, Àí¸ÖÕ Å¢Á¡É ¿¢ÄÂò¾¢Ä¢ÕóÐ 2 Á½¢ §¿Ãõ À½õ ¦ºöÐ ¦Ãº¡÷ðÊüÌ ÅóÐ §º÷ó¾¡ý.

À¢Š…¢¼õ ÌÕ ÌõÀÁ¡ö Åó¾¢Õô§À¡¨Ãô ÀüÈ¢ ÜÈ, ¯¼§É À¢Š “¿¡Ûõ ÌÎõÀò¨¾ ²üÀ¡Î ¦ºöÐ «¨ÆòÐ ÅÃÅ¡” ±É ÜÈ¢ ÌÕ¨ÅÔõ «¨ÉŨÃÔõ «¾¢Ã ¨Åò¾¡ý. À¢ýÉ÷ ´Õ ÅƢ¡¸ Á¡¨ÄìÌ Óýɾ¡¸§Å ÅóÐ §º÷ó¾¡ý.

«¾ý À¢ýÉ÷ ôú¡óò, ·¦ÀÄ¢ìŠ, ¬÷.±Š.¸¡÷ò¾¢§¸Âý ¬¸¢§Â¡÷ ÅóÐ §º÷ó¾É÷.

22õ §¾¾¢ ¸¡¨Ä 10 Á½¢ÂÇÅ¢ø §¸¡ÂõÀòà¡¢ø þÕóÐ ¸¢ÇÁÀ¢Â Á½¢ ÁüÚõ ÌÎõÀ¾¡÷ 23õ §¾¾¢ «¾¢¸¡¨Ä 2:30 Á½¢ìÌ §ƒôÀ¢, ¬÷.±Š.§¸., ¸¡÷, À¢Š, À¢Ãº¡ó¾¢ý ¦ÀÕ ÓÂüº¢ìÌô À¢ÈÌ ÅóÐ §º÷ó¾É÷. þÅ÷¸¨Ç «¨ÆòÐ Åà ¦ºýÈ À¢Š, «Å¨É ¦Ãº¡÷ðÊø þÕó§¾ þÂ츢 À¢Ãº¡óò þÕÅÕõ Á½¢¨Â ´Õ ÌÆôÒ ÌÆôÀ¢ ´Õ ÅƢ¡¸ «¨ÆòÐ Åó¾É÷. Á½¢ ÅóÐ §º÷ó¾ À¢ýÉ÷, Á½¢, À¢Š, ¸¡÷, §ƒôÀ¢, ¬÷.±Š.§¸. ¬¸¢§Â¡÷ ¸¡·À¢ ÌÊì¸ À¢Š Å£ðÊüÌ ¦ºýȾ¡¸, ÁÚ ¿¡û ¸¡¨Ä¢ø ¦¾¡¢Â Åó¾Ð.

¿¡í¸û «¨ÉÅÕõ ¸¢¡¢ì¦¸ð Å¢¨Ç¡ʧɡõ. þ¾¢ø ôú¡óò, ·¦ÀÄ¢ìŠ, ¬÷.±Š.¸¡÷ò¾¢§¸Âý, À¢Š, ·ôáýº¢Š ¸ÄóЦ¸¡ûÇÅ¢ø¨Ä. «Å÷¸û ÅóÐ §ºÃ§Å þø¨Ä (¬½¢§Â ÒÎí¸Ä...). þó¾ ¯Ä¸ Ò¸ú ¦ÀüÈ, º¡¢ò¾¢Ã Ó츢ÂÐÅõ Å¡öó¾ ¸¢¡¢ì¦¸ð §À¡ðÊ¢ý ţʧ¡ À¾¢× áƒý źõ ¯ûÇÐ. (áƒý ... «¾¨É ¾ÂצºöÐ «¨ÉÅÕìÌõ ´Ç¢ ÀÃôÀ¢ ¸¡ñÀ¢ì¸×õ). Á¡¨Ä¢ø Å¡Ä¢À¡ø Å¢¨Ç¡ÊÉ÷.

¿£îºø ÌÇõ þÕó¾Ð. Ó¸¢Äý, ô¡¢ò¾¢¸¡, º÷§Å‰ÅÃý, ¦ºó¾¢Õ, º¢ò¾¡÷ò ¬¸¢§Â¡÷ ÌиÄÁ¡ö ÌÇ¢òÐ Á¸¢úó¾É÷.

áƒý, ƒí¸¢ø, Á¢É¢ ƒí¸¢ø, †À¢, ¦Ãí¸¡, ÌÕ, ¿¡ý, «Õ:û ¬¸¢§Â¡÷ ̾¢òÐ ÌÇ¢òÐ Á¸¢úó¾É÷. þÅ÷¸û ÌÇ¢òÐ즸¡ñÎ þÕìÌõ §À¡Ð ÌÇò¾¢ø þÕó¾ ¾ñ½£¡¢ý ¦ÅôÀõ ºü§È ¯Â÷󾨾 þí§¸ ÌÈ¢ôÀ¢¼ §ÅñÎõ.

Ó¸¢Äý, ô¡¢ò¾¢¸¡, º÷§Å‰ÅÃý, ¦ºó¾¢Õ, º¢ò¾¡÷ò ¬¸¢§Â¡÷ ¦Ãº¡÷ðÊø þÕó¾ ÁüÈ Å¢¨Ç¡ðÊÖõ ¾í¸û ¬¾¢ì¸ò¨¾ ¸¡ðÊÉ÷. «õÁ¡ì¸û «¨ÉÅÕõ «Å÷¸ÙìÌ ¯¾Å¢É÷.

¦Ãí¸¡, ·¦ÀÄ¢ìŠ, ¬÷.±Š.§¸. ¬¸¢§Â¡÷ þ犦ºýÚÅ¢ð¼É÷. ·ôáýº¢Š ¸¡¨Ä¢ø º£ì¸¢ÃÁ¡¸§Å Å¢Á¡Éò¨¾ô À¢Êì¸ ¦ºýÚÅ¢ð¼¡ý.

Á£¾õ þÕó¾ «¨ÉÅÕõ 11 Á½¢ «ÇÅ¢ø ¸¢ÇõÀ¢ À¢Â¡¡¢ Å£ðÊüÌ ¦ºýÚ Å¢ðÎ «í¸¢ÕóÐ À¢¡¢óÐ ¦ºý§È¡õ. À¢Â¡¡¢ Å£ðÊø «¨ÉÅÕìÌõ Š¿¡ìŠ ÁüÚõ ÌÇ¢÷ À¡Éí¸û ¸¢¨¼ò¾Ð. ÌÆ󨾸ÙìÌ ³Š ¸¢¡¢õ ¸¢¨¼ò¾Ð. À¢Â¡¡¢Ôõ, À¢Â¡¡¢ Á¨ÉÅ¢Ôõ «¨ÉŨÃÔõ º¢ÈôÀ¡¸ ÅçÅüÚ ¯Àº¡¢ò¾É÷.

Óýɾ¡¸, ¦Ãº¡÷𨼠ŢðÎì ¸¢ÇõÒõ Óý, ´Õ º¢Ú ¸ÄóШá¼ø ¿¼ó¾Ð. «¾¢ø, þÉ¢ ÅÕõ ÅÕ¼í¸Ç¢ø ¿¨¼¦ÀÈ þÕìÌõ “Å¢ Å¢” 츨Ç, «Ð ¿¨¼¦ÀÈ þÕìÌõ þ¼ò¨¾ §º÷ó¾ ¿ñÀ÷¸û ŠÀ¡ýº÷ ¦ºöÂÄ¡§Á ±ýÈ ¸ÕòÐ Óý ¨Åì¸ôÀð¼Ð. ¯¾¡Ã½Á¡¸, Å¢ Å¢ 2011 ÌüÈ¡Äõ À̾¢Â¢ø ¿¨¼¦ÀÚõ ±ýÚ ÓʦÅÎò¾¡ø, «ôÀ̾¢Â¢ø ¯ûÇ ¿õ ¿ñÀ÷¸û (ÓòÐÌÁ¡÷, ºí¸÷, «Õû ¦ºó¾¢ø, ¾Á¢ú, ƒ¡ý ...) «¾ü¸¡É ¦ºÄ¨Å ²üÚ¦¸¡ûÇ §ÅñÎõ. þÅ÷¸Ç¡ø ÓبÁ¡¸ ²üÚ¦¸¡ûÇ ÓÊ¡¾ Àîºò¾¢ø, ÁüÈ ¿ñÀ÷¸Ç¢¼Á¢ÕóÐõ ¯¾Å¢¸û ²üÚ¦¸¡ûÇôÀÎõ. þ¾üÌ Á¡üÈ¡¸, Áü¦È¡Õ ¸ÕòÐõ ÜÈôÀð¼Ð. «¾ý ÀÊ, ´Õ ¦À¡ÐÅ¡É Åí¸¢ ¸½ìÌ ÐÅí¸¢, «¾¢ø ´ù¦Å¡Õ Á¡¾Óõ «¨ÉÅÕõ ´Õ ÌÈ¢ôÀ¢ð¼ ¦¾¡¨¸¨Â ¦ºÖò¾¢ ÅçÅñÎõ. «ùÅ¡Ú §ºÕõ À½õ, «ùÅÕ¼ Å¢ Å¢ ìÌô ÀÂýÀÎõ. §ÁÖõ «¾¨É ²§¾Ûõ ´Õ º¢Ä ¿øÄ ¸¡¡¢Âí¸ÙìÌô ÀÂý À¼ ²üÀ¡Î ¦ºö §ÅñÎõ ±Éì ÜÈôÀð¼Ð. þÐ ¦¾¡¼÷À¡¸, «¨ÉÅÕõ ¸ÄóÐ §Àº¢ ´Õ ÓʦÅÎò¾¡ø ¿Äõ §ºÕõ.

þùÅÈ¡¸ þó¾ ÅÕ¼ “Å¡í¸¼¡ Å¡í¸” º¢ÈôÀ¡¸ ÓÊó¾Ð.

வாங்கடா வாங்க

வாங்கடா வாங்க
இது எங்கள் கல்லூரி (அருள்மிகு கலசலிங்கம் பொறியியல் கல்லூரி கிருஷ்ணன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) நண்பர்களின் வருட சந்திப்பு நிகழ்ச்சி. ஒவ்வொரு வருடமும் மே மாதம் நண்பர்கள் அனைவரும் ஏதாவது ஒரு ஊரில் சந்தித்து கொள்வது வழக்கம். இந்த நிகழ்வை, நாங்கள் எங்கள் கல்லூரி இறுதிஆண்டு முதல் இப்பொழுது வரை ஒவ்வொரு வருடமும் ஏற்பாடு செய்து வருகிறோம். முதல் நிகழ்வு 1998 ல் கல்லூரியில் நடந்தது. அதனைத் தொடர்ந்து மதுரையில் இரண்டு வருடங்கள், பெங்களுருவில் இரண்டு வருடங்கள், கொடைக்கானலில் ஒரு வருடம், கோயம்புத்தூர் ல் ஒரு வருடம், சென்னை ல் ஒரு வருடம், மற்றும் இந்த வருடம் (2010) மூன்றாவது முறையாக மீண்டும் பெங்களுருவில் நடைபெற்றது. இந்த ஒன்பது தடவையும் குறைந்த பட்சம் 15 பேர் அதிகபட்சம் 25 பேர் கலந்து கொண்டிருகின்றனர். இவ்வருடத்தோடு நாங்கள் கல்லூரி படிப்பை முடித்து 12 வருடங்கள் முடிந்துவிட்ட நிலையில் நாங்கள் ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு ஊரில் திட்டமிட்டு சந்தித்தும் (ஒன்பது முறை) மீதம் உள்ள மூன்று வருடங்கள் ஏதாவது நண்பர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து சந்தித்து கொண்டுள்ளோம். அவ்வாறாக, மகாராஜன், சுரேஷ் (பொள்ளாச்சி) மற்றும் ராஜன் கல்யாணத்தில் சந்தித்து கொண்டோம். இவ்வாறு திருமணத்தில் சந்தித்து கொள்வது குறைந்த பட்சம் மூன்றில் இருந்து அதிகபட்சம் எட்டு பேர் வரை அமையும்.
இங்கு நான் நண்பர்கள் என்று கூறுவது, எங்கள் கல்லூரியின் ஒரே வகுப்பில் உள்ள நண்பர்களையோ அல்லது ஒரே வருடத்தில் உள்ள நண்பர்களையோ மட்டும் குறிக்காது. இந்த நண்பர்கள் குழுவில், அனைத்து துறையை சார்ந்த நண்பர்களும், எங்களுக்கு அடுத்த வருடம் படித்து முடித்த நண்பர்களும் அடங்குவர்.
இது விளையாட்டாக ஆரம்பித்த ஒன்றுதான். வேறு சிறப்பு நோக்கம் எதுவும் இன்றி, வருடா வருடம் சந்தித்து கொள்வது என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான். ஆனால் அடுத்த அடுத்த வருடங்களில் இவ்வாறு சந்தித்து கொள்வது என்பது வேறு சில நல்ல நோக்கங்களை உருவாக்கி தந்தது. மிக முக்கியமாக, ஆரம்பத்தில் வேலை இல்லாமல் இருந்த நண்பர்களுக்கு சிறு வேலைகள் சில கிடைப்பதற்கு உதவியது. அலுவலக மற்றும் சொந்த விசயங்களை பகிர்ந்து கொள்ள உதவியது. இன்று வரை உதவி வருகிறது.
இதன் வாயிலாக ஒரு பலமான நட்பு பாலம் கட்டப்பட்டுவருகிறது என்றே நான் நம்புகிறேன்.
எங்களின் இந்த சந்திப்பை பற்றி நான் வேலை பார்க்கும் இடத்திலும், உறவினர்களிடமும் மற்றும் வேறு இடங்களிலும் சொல்லும் போது "12 வருடங்களாக தொடர்ந்து சந்தித்து வருகிறீர்களா" என்று ஆச்சரியப்பட்டுகிறார்கள். நான் அறிந்து, வேறு எந்த நண்பர்கள் குழுவும், இவ்வாறு வருடா வருடம் சந்தித்து கொள்வது இல்லை என்றே கூறுவேன். அவ்வாறு எந்த குழுவாவது இருப்பின், எங்களுக்கு தெரியபடுத்துங்கள். நாங்களும் அவர்களை தொடர்பு கொண்டு இவ்வாறான சந்திப்பின் நோக்கங்களை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்கிறோம்.