28 செப்டம்பர் 2010

கோ - மூ - கொ - விலே - கோ - 2

கோ - மூ - கொ - விலே - கோ - 2

இது, எங்களோட வீகா லேன்ட் ட்ரிப் பத்தின என்னோட பதிவு.
எங்களோட ஓட்டுனர் முதல் நாள் இரவே எங்க எல்லாத்தையும் காலையில கொஞ்சம் சீக்கிரமாவே (ஒரு 6... 6.30 மணிக்கு) கெளம்பி இருக்க சொல்லிட்டாரு. ஏன்னா, கொச்சின்ல இருந்து காலைல லேட்டா கெளம்புனா, அதிகமான போக்குவரத்து நெரிசல்ல மாட்டிக்கிட்டு, நகரத்த (city) வெளியேர்றதுக்கே ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆகிரும். அதுனால நாங்களும் அடுத்த நாள் காலையில 6.30 மணிக்கெலாம் கிளம்பிட்டோம். ஏற்கனவே எங்க பிளான்ல, சோட்டனிக்கரை அம்மன் கோயில் போகணும்னு இருந்ததுனால, அன்னைக்கு காலைல கொச்சின்ல இருந்து கெளம்பி சோட்டனிக்கரை போயிட்டோம். சோட்டானிக்கரை, கொச்சின்ல இருந்து ஒரு 20 கிலோமீட்டர் குள்ள தான் இருக்கும். இது புகழ் பெற்ற அம்மன் கோயில்கள்ல ஒன்னு. நாங்க போன அன்னைக்கு புரட்டாசி மாதம் முதல் சனிக்கிளமைங்குரதுனால கோயில்ல நல்லக் கூட்டம். பசங்க பொண்ணுங்கல்லாம் கோயிலுக்குள்ள போனாங்க. மேடமும் போனாங்க. அந்த கோயிலுக்குள்ள போகணும்னா ஆம்பளை ஆளுங்க எல்லாரும், மேல் சட்டைய கழட்டிட்டுதான் போகணும். இந்த கட்டுப்பாடு, இந்த கோயில்ல மட்டும் இல்ல; கேரளால இருக்குற எல்லா கோயில்கள்லயும் இப்படி ஒரு காட்டுப்பாடு இருக்கு. இந்த முறையில எனக்கு உடன்பாடு இல்லைங்குறதுனால, நான் உள்ள (சந்நிதானத்துக்குள்ள) போகல. (இப்படி ஒரு காட்டுப்பாடு எதுக்குனா... 1. நாம என்ன ஜாதின்னு தெரிஞ்சுக்கிறதுக்காக (அந்த காலத்துல, தாழ்த்தப்பட்டவங்கள கோயிலுக்குள்ள விட மாட்டாங்க) 2. சாமிக்கு முன்னாடி எல்லாரும் சமம்னு உணர்த்துரதுக்காக; பள்ளிக்கூடத்துல யூனிபார்ம் போடுறது மாதிரின்னு வச்சுக்கோங்களேன். அங்க ஒரே மாதிரி கலர்ல சட்டத் துணி போட்டுருப்போம், இங்க... சாமிக்கு முன்னாடி எல்லாரும் எவ்வளவு விலை வுயர்ந்த துணிமணி போட்டுருந்தாலும் அத கழட்டிட்டு வெத்து உடம்போட இருக்கணும். (பொம்பள பிள்ளைகளுக்கெல்லாம் சாமிக்கு முன்னாடி எல்லாரும் சமம்ங்குற மாதிரியான கட்டுப்பாடெல்லாம் இல்லையானு குதர்க்கமாலாம் கேக்கக்கூடாது.) நான், முதல் காரணத்துக்காக இந்த கட்டுப்பாடுங்குரதுனால, உள்ள போகல.) ஆனா, நான் ஸ்டுடன்ட்டா இருந்தப்ப போன டூர்ல, குருவாயூர் கோயிலுக்கெல்லாம் உள்ள போயிருக்கிறேன்.
எல்லாரும் சாமி கும்பிட்டு வந்த பின்னாடி, அங்கையே காலை சாப்பாட முடிச்சிட்டோம். முடிச்சிட்டு, நேரா வீகா லேன்ட் க்கு கெளம்பிட்டோம். ஒரு 10 மணி சுமாருக்கு, வீகா லேன்ட் வந்துட்டோம். எங்களுக்கு முன்னாடியே, அங்க நல்ல கூட்டம் இருந்துச்சு. அது ஒரு சனிக் கிளமைங்க்ரதுனால நல்ல கூட்டம். பத்தரை மணிக்குதான் டிக்கட் கவுண்டர் திறந்தாங்க. எல்லாருக்கும் டிக்கட் வாங்கிட்டு, உள்ள போனோம். நாங்க உள்ள போகுறதுக்கு முன்னாடியே, பஸ்ல வச்சு, எல்லா பசங்க பிள்ளைங்ககிட்டையும் நாங்க ரெண்டு பேருமே உள்ள எப்படி நடந்துக்கிரனும், எப்படி இருக்கணும் அப்படிங்கறதெல்லாம் சொல்லிட்டோம். அது படியே எல்லாரும் நடந்துகிட்டாங்க (ஒரு சில விசயத்தைத் தவிர) ங்கறது ஆச்சரியமான விசயம்தான். எல்லாரும் ஒன்னாவே போயிட்டு வரணும்ங்க்றது மனசுல இருந்தாலும்... உள்ள அது படி இருக்க முடியல. அப்படி இருக்க முடியாதுங்க்ரதுதான் நடைமுறை உண்மை. எல்லாரும் அங்க அங்க பிரிஞ்சு போயி விளையாட ஆரம்பிச்சுட்டாங்க. முதல்ல எல்லாரும் தண்ணி இல்லாத விளையாட்டுக்குத்தான் போனாங்க. அதுதான் சரியும் கூட.
"ட்வின் பிலிப் மான்ஸ்டர்" ன்னு ஒரு விளையாட்டு... சான்சே இல்ல.... செம த்ரில்லிங். அந்த விளையாட்டுக்கு போகாம வெளிய இருந்து பாத்துக்கிட்டு இருந்த எனக்கே அவ்வளவு த்ரில்லிங்கா இருந்துச்சுனா... அதுல சுத்துனவுங்களுக்கு எப்படி இருந்திருக்கும். அப்படியே தலைகீழா ரெண்டு நொடி நிக்கிது. நாம சேர்ல உக்காந்த நெலமைல ஒரு ரெண்டு நொடி தலைகீழா அப்படியே இருப்போம். அது மட்டும் இல்லாம நாம உக்காந்து இருக்குற சேர் எல்லாப் பக்கமும் ரொம்ப வேகமா சுத்துது. அதுல உக்காந்து சுத்துனவுங்க எல்லாம் ஒரே கூக்குரல்... அது சந்தோசக் குரலா இல்ல பயத்துல கத்துராங்கலான்னு தெரியல. பயத்த வெளிய காட்டக் கூடாதுங்குரதுக்காகவும் கத்தி இருக்கலாம்... தெரியல. ஒரு பைய்யன்லாம் அதுல சுத்திட்டு வந்ததுக்கு அப்புறம் கீழ வந்து வாந்தி பண்ணிட்டான். தல சுத்தும்ல. எப்படி இருந்தாலும், அந்த விளையாட்டு பசங்களுக்கெல்லாம் ஒரு வித்தியாசமான அனுபவம்தான். அத மாதிரி இன்னும் நெறைய விளையாட்டுக இருந்துச்சு. அநேகமா பசங்க பொண்ணுங்க எல்லாரும் எல்லா விளயாட்டுளையும் விளையாண்டு இருப்பாங்க. எல்லா விளயாட்டுகள்ளையும், நோயாளிகளுக்கான எச்சரிக்கை வச்சு இருக்காங்க. ரொம்ப நல்ல விஷயம். அது போக, அந்த விளையாட்டுக்கல்ல ஏதாவது அசம்பாவிதம் நடந்துச்சுனா, அத சரி பன்னுரதுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் தயாரா வச்சு இருக்காங்க. அந்த ஏரியாவையே ரொம்ப சுத்தமா வச்சு இருக்காங்க. இதுக்குத் தனி கவனம் செலுத்துறாங்க.
இந்த மாதிரி, தீம் பார்க்ல இருக்குற ட்ரை கேம்ஸ்ல பாதுகாப்பு முக்கியம்னா... தண்ணீர் (வாட்டர் கேம்ஸ்)பாதுகாப்போட உடை கவனமும் ரொம்ப முக்கியம். இதுலதான், அதிகமான பொண்ணுங்க கவனக் குறைவா இருந்துர்றாங்க. அது அவுங்களுக்கு ரொம்ப பெரிய பிரச்சனையக் குடுத்துருது. அதுலயும், இங்க ஒரு நல்ல விஷயம் செஞ்சுருந்தாங்க... என்னான்னா... வாட்டர் கேம்ஸ் எதுலயும் யாரும் போட்டோ எடுக்கக்கூடாதுன்னு அறிவிப்பு செஞ்சுருந்தாங்க. இது ஒரு நல்ல விஷயம். இந்த மாதிரி எடத்துல போட்டோ எடுக்குறது தான பொண்ணுங்களுக்கு ரொம்ப அதிகமானத் தொந்தரவக் குடுக்குது.
இந்த விசயத்துல நெறைய பொண்ணுங்க ரொம்ப ஜாக்கிரதையா இருந்தாங்க. அவுங்க உடை உடுத்தி இருக்குற விதத்துல எந்த குறையும் இல்லாம, ரொம்ப சரியா பண்ணி இருந்தாங்க. நன்று.
இவ்வாராகத்தானே... எல்லா கேம்சுலையும் விளையாண்டுட்டு, எல்லாரையும் நாலு மணிக்கெல்லாம் வரச் சொல்லி இருந்தோம். ஆனா, எல்லாருமே "பங்க்சுவாலிட்டி புலி" ங்கறதுனால யாருமே நாலு மணிக்கு வரல. பசங்கன்னா அப்படிதான் இருப்பாங்கன்னாலும், கொஞ்சமாவது நேரத்தைக் கடைப்பிடிக்கலாம். இவங்க எல்லாரும் சரியான நேரத்துக்கு வரலைன்னதும், நானும் மேடமும் உள்ள விளையாண்டுகிட்டு இருந்தவங்க எல்லாத்தையும் போயி வர சொல்லிட்டு வந்தோம். அந்தா இந்தான்னு எல்லாரும் ஒரு வழியா வர ஆரம்பிச்சாங்க. கடைசியா எத்தனை மணிக்கு வந்திருப்பாங்கன்னு நெனைக்கிறிங்க.... ஆறு மணிக்கு வந்தாங்க. அப்பாவும் கொஞ்ச பேரு வரல. அந்த குரூப் எதுனா... ஏற்க்கனவே வந்து ரெடி ஆகி, அப்பாவும் வராதவன்கலப் போயி கூப்பிட போனது. இந்த நேரத்துல, மொதல்லயே வந்து காத்துகிட்டு இருந்த க்ரூப்ல கொஞ்ச பொண்ணுங்களுக்கு பசிக்க ஆரம்பிச்ச உடனே அவுங்க சாப்பிட போயிட்டாங்க. நியாயமான ஒண்ணுதான். கடைசியா ஒரு ஆறரை மணிக்கு வீகா லேண்ட விட்டு கிளம்பினோம். நைட் சாப்பாட போற வழியில எங்கயாவது முடிச்சுக்கிரலாம்னு நினைச்சுகிட்டு கிளம்பினோம். எல்லாரும் நல்லா பசில இருந்தோம். அதுனால, உடனடியா வர்ற ஒரு நல்லா ஹோட்டல்ல சாப்புடலாம்னு நெனச்சா... சோதனைக்குன்னு ஒரு நல்லா ஹோட்டல் கூட இல்லைங்க. நாங்க கூட நெனைச்சோம்... பார்டர்லதான் (செங்கோட்டைல தமிழ்நாடு கேரளா பார்டர்ல இருக்குற ஒரு பிரியாணி புரோட்டா கடை) போயி சாப்பிடுவோம்னு. நல்லா வேலையா அதுக்கு முன்னாடியே ஒரு ஊர்ல ஒரு நல்லா ஹோட்டல்ல சாப்பிட்டோம். அப்படியே கிளம்பி ஒரு வழியா 19 ஆம் தேதி அதி காலைல 4.30 மணிக்கு காலேஜ் வந்து சேந்தோம்.
ஒரு நல்ல டூர். சந்தோசமான பயணம். நல்ல படியா முடிஞ்சது.
அப்புறம்... கடைசியா... இந்த இடுகையோட முதல் பாகத்துல முதல் பத்தியில இந்த கட்டுரையோட தலைப்ப பத்தி எழுதியிருன்தேன்ல...? அத கண்டுபிடிச்சீங்களா....?
அது வேற ஒன்னும் இல்லங்க ... கோவில்பட்டி - மூனாறு - கொச்சின் - வீகா லேன்ட் - கோவில்பட்டி. அவ்வளவுதான்.

19 செப்டம்பர் 2010

கோ - மூ - கொ - வீ லே - கோ. - 1

கோ - மூ - கொ - வீ லே - கோ. -1

தலைப்பு வித்தியாசமா இருக்கனுமேன்னு நெனச்சேன். (இல்லைனா படிக்க மாட்டேங்குரிங்கள்ள... எல்லாத்துலயும் வித்தியாசத்த எதிர் பாக்குறிங்க.) அதான், இந்த மாதிரி முதல் எழுத்துகள தலைப்பா வச்சுட்டேன்.

இந்த இடுகை, ஒரு பயணக் கட்டுரை. ஜாலியான பயணக் கட்டுரை. தலைப்ப கடைசில விரிச்சு எழுதுறேன். (நீங்க முடிஞ்சா கண்டுபிடிங்க...)

எங்க டிபார்ட்மென்ட் மூணாவது வருஷ மாணவர்களோட இந்த வருஷம் நான் ஐ வி (தொழிற்சாலை சந்திப்பு (சுத்தமா தமிழ்படுத்தினா... இப்படிதான் வருது - அதாங்க... Industrial Visit) போயிருந்தேன். மொத்தம் நாங்க 55 பேரு (53 பசங்களும் நாங்க 2 வாத்தியாருங்களும்) போயிருந்தோம். மொத்தம் 3 நாளு. முறைப்படி பாத்தோம்னா... ஒவ்வொரு நாளும் ஒரு இண்டஸ்ட்ரி பாக்கணும். ஆனா, நாங்க மொத ரெண்டு நாள் தான் இண்டஸ்ட்ரி பாத்தோம். மொத நாளு மூனார்ல ஒரு டீ இண்டஸ்ட்ரி (கண்ணன் தேவன் டீ இண்டஸ்ட்ரி) ரெண்டாவது நாளு கொச்சின்ல ஒரு இண்டஸ்ட்ரி (கேரளா எலெக்ட்ரிகல்ஸ் அன்டு அலைடு சர்விசஸ் லிமிடட் - KEL) மூணாவது நாளு பாக்கவேண்டிய இண்டஸ்ட்ரி என்னான்னு தெரியுமா....? அதுதான் வீகா லேன்ட் (காமெடியா இல்ல....?).

செப்டம்பர் 15 ஆம் தேதி நைட்டு ஒரு பத்தரை மணி வாக்குல காலேஜ்ல இருந்து கெளம்பினோம். பஸ் காலேஜா விட்டு வெளிய வந்ததுதான் தாமதம்.... பசங்க ஒரே ஆட்டம் தான் (பசங்கிகளும்தான்). அது என்னானே தெரியலங்க... டூர் அப்படினாலே பஸ்ல ஆட்டம் போடணும்... கத்தணும் ங்கறது ஒரு சம்பிரதாயமா ஆகிருச்சு போல. (இப்போலாம் பஸ்சுக்கு உள்ளதான் பசங்க ஆடுறாங்க.... நாங்க டூர் போகும்போதுல்லாம் பஸ்சுக்கு வெளியவும் ஆடுவோம். - இது ஒரு தொட்டு தொடரும் ஆட்டம் அமர்க்களம் போல...). ஆனா இவ்வளவு ஆட்டத்துலயும், ஒரு க்ரூப் ஒரு ரியாக்சனும் காட்டா சும்மா ஒக்காந்து இருப்பாங்க. அவுங்களுக்கு எல்லாம் ஆடத் தெரியாதா.... இல்லைனா ஆடத் தெரியுமா... இந்த எடத்துல ஆடக்கூடாதுன்னு நெனைக்கிராங்களா.... ஆடுறது தப்புன்னு நெனைக்கிராங்களா...? ஒன்னும் புரியாது. அது அவுங்க அவுங்க சொந்த விருப்பத்த பொறுத்தது. நாம ஒன்னும் சொல்லக் கூடாது.

அன்னைக்கு நைட்டு முழுசும் தூங்க முடியல. காலைல ஒரு 6.30 மணி வாக்குல மூனாறு போயி சேந்தோம். நாங்க போயிதான் லாட்ஜ் காரங்களையே எழுப்பினோம். இந்த பசங்க தங்குறதுக்கு எல்லாம் நல்லா ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. ஒரு ரூமுக்கு நாளு பேரு ங்கற கணக்குல 14 ரூம் புக் பண்ணிருந்தாங்க. என்னோட ரூம்ல என்கூட ஒரு மூணு பசங்க தங்கி இருந்தாங்க. (இந்த பிளான் எல்லாம் நல்லாத்தான் பண்ணுறாங்க. ஆனா, குடுக்குற காசுக்கு சரியான வசதி கெடைக்குதான்னு பாக்க மாட்டேங்குராங்கலோன்னு தோணுது. - பொதுவா இந்த மாதிரி லாட்ஜ் ல எல்லாம் துண்டு, சோப்பு, எண்ணெய் லாம் தருவாங்க. ஆனா, இந்த லாட்ஜ்ல அந்த மாதிரி எதுவும் தரள. - லாட்ஜ் காரங்க தர மறந்துட்டாங்களா.... மறந்துட்ட மாதிரி இருந்துட்டாங்களா... பசங்க கேக்கலையா... கேட்டு தர மாட்டேன்னு சொல்லிட்டாங்களா.... பசங்க இந்த விசயத்துல இன்னும் கொஞ்சம் கவனமா இருந்தா நல்லதுன்னு தோணுது - ஒரு வேள அவுங்க சம்பளம் வாங்கும் போது அதிக கவனமா இருப்பாங்களோ...?). அந்த லாட்ஜ்லயே ரேச்ட்டாரன்ட்டும் இருந்துச்சு. அன்னைக்கு ( 16.09.2010) காலைல அங்கையே சாப்டுட்டோம். நல்லாதான் இருந்துச்சு. கொஞ்சம் அதிக விலையோன்னு தோணுச்சு. அப்புறம் பேசிகிட்டு இருக்கும் போது, கீதா மேடம் சொன்னப்பதான் புரிஞ்சது - கோவில்பட்டிலயே ஒரு தோசை 20 ரூபா க்கு விக்கும்போது... ஒரு டூரிஸ்ட் இடத்துல 25 ரூபாங்குறது ஒன்னும் அதிகம் இல்ல னு.

அப்புறம் அன்னைக்கு காலைல டீ இண்டஸ்ட்ரி பாத்துட்டு, அதுக்கு அப்புறம் சாயந்தரம் நாலு மணி வரைக்கும் மூனாருல இருக்குற இடத்த எல்லாம் சுத்திப் பார்த்தோம். அப்படியுமே, எல்லா இடத்தையும் பார்க்க முடியல. பொதுவா என்னைய பொறுத்த வரைக்கும், மூனாருங்குறது, கேரளா ல இருக்குற ஒரு குட்டி தமிழ்நாடு. அந்த அளவுக்கு அங்க தமிழ் ஆளுங்க இருக்குறாங்க. தமிழ் பேசுறவுங்க இருக்குறாங்க. அப்புறம், மூனாருல அங்க இருக்குற டீ எஸ்டேட்டும், கிளைமேட்டையும் தவுர ஒன்னும் இல்ல. அந்த கிளைமேட்டுதான் அவ்வளவு பேர அங்க இழுக்குது. உண்மைலேயே மூனாறு கிளைமேட் அவ்வளவு சூப்பர். அன்னைக்கு நைட்டு வேற எங்கயாவது போயி சாப்பிடலாம்னு நெனச்சு வெளிய கெளம்புனா... ஒரே மழை. வேற வழி இல்லாம அங்கையே சாப்ப்டுட்டோம். அன்னைக்கு நைட்டு "முகாம் தீ" ( அதாங்க... camp fire) ஏற்பாடு பண்ணிருந்தாங்க. மழை வேற பேஞ்சுகிட்டு இருந்துச்சு. ஆனாலும் விடல... முகாம் தீ ய பத்த வச்சு... ஆட ஆரம்பிச்சுட்டாங்க.

இந்த மாதிரியான முகாம் தீ நிகழ்ச்சி, மழை வாசச்தலங்கள் மட்டும் தான் நடக்குது. இதுக்கு ஒரு காரணம் இருக்குதுன்னு நினைக்கிறேன். என்னான்னா... நைட்டு தூங்கும் போது, குளிர் அதிகமா நம்மக்கிட்ட பிரச்சன பன்னக்கூடாதுங்குரதுக்காக, தீய்ய சுத்தி நின்னு ஆடி உடம்புல உஸ்ணத்த ஏத்திக்கிறது. அந்த தீ ஒரு வெப்பத்தைக் கொடுக்கும். ஆடுரதுனால, நம்ம உடம்புல இருந்து வெளியேர்ற சக்தி ஒரு விதமான உச்னத்தக் கொடுக்கும். இது, குளிர் பிரதேசங்கள்ள, நல்லா ராத்திரி உறக்கத்தைக் கொடுக்கும்.
பசங்க நல்லா என்ஜாய் பண்ணுனாங்க. பொண்ணுங்களும் ஒரு லிமிட்டோட நல்லா என்ஜாய் பண்ணுனாங்க. ஒரு சில பசங்க... அவுங்க சந்தோசத்தைத் தாண்டி, சுத்தி இருக்குரவுங்கள இம்ப்ரஸ் பன்னனுங்குரதுக்காக மட்டுமே ஆடுனாங்க. முக்கியமா, பொண்ணுங்கள இம்ப்ரஸ் பண்ணுறதுக்காக. விழுந்து விழுந்தெல்லாம் ஆடுனாங்க. இவ்வளவு வெறித்தனமா அவுங்க ஆடுனாலும், சுத்தி நின்னு பாத்துக்கிட்டு இருந்தவுங்களுக்கு அது ஒரு காமெடியாத்தான் இருந்துச்சு.

புதையல் வேட்டை மாதிரி ஒரு கேமும் வச்சிருந்தாங்க (அந்த கேம்... ஊத்திக்கிச்சு...). அப்புறம் என்ன... ஒரு பத்தரை மணி வாக்குல தூங்க போயிட்டோம். அடுத்த நாளு காலைல சீக்கிரமா எந்திரிச்சு கொச்சின் கிளம்பனும்னுட்டு.
அடுத்த நாளு (17.09.2010) காலைல சீக்கிரமா எந்திருச்சு, ஒரு 6.15 மணிக்கெல்லாம் மூணார விட்டுக் கெளம்பிட்டோம். இடைல, கொஞ்ச நேரம் நிப்பாட்டி டீ குடிச்சிட்டு கெளம்பினோம். காலை சாப்பாடுக்கு, இடமலி னு ஒரு ஊருல வண்டிய நிப்பாட்டி சாப்ப்டுட்டு கெளம்பிட்டோம். எங்கள 1.30 மணிக்கு KEL க்கு வர சொல்லி இருந்தாங்க. நாங்க கொசின்குள்ள போகுறதுக்கே 11.45 க்கு மேல ஆகிருச்சு. அதுனால நேர லாட்ஜுக்கு போகாம, பக்கத்துல மலை அரண்மனை க்குப் (Hill Palace) போயிட்டு அப்புறமா இன்டஸ்ட்ரிக்கு போனோம். அந்த மலை அரண்மனை, கொச்சின் ராஜ குடும்பத்துக்கு சொந்தமா இருந்ததாம். இப்போ அத அரசாங்கம் எடுத்துக்கிட்டு, அருங்காட்சியகமா மாத்தி இருக்காங்க. நல்ல வேலைப்பாடுள்ள நெறையா பொருள்கள் வச்சு இருந்ந்தாங்க. ஒன்னே முக்கால் கிலோல ஒரு தங்க கிரீடம் வச்சு இருந்தாங்க. அந்த தங்க காட்சியகத்துக்கு மட்டும் தனியான போலீஸ் பாதுகாப்பு குடுத்து இருந்தாங்க.

அப்புறம், இண்டஸ்ட்ரி (மின் மாற்றி தயாரிப்பு கம்பெனி) பாத்துட்டு, லாட்ஜுக்கு போக அந்த இந்தான்னு, ஒரு ஆறு மணி ஆகிருச்சு. லாட்ஜுக்கு வர்ற வழியிலயே மதிய சாப்பாட ஒரு சுமாரான ஹோட்டல்ல முடிச்சுட்டோம். லாட்ஜுக்கு வந்து ரெப்ரெஷ் ஆகிட்டு, கடைத்தெருவுக்கு கெளம்புனோம். எல்லாரும் அவுங்க அவுங்களுக்கு தேவையான, விருப்பமான பொருள்கள வாங்குனாங்க. கொச்சின்ல, காலணிகள் (சூ, செருப்பு), பைகள் விலை குறைவா கிடைக்கும் போல. இங்க காலேஜ்ல... கான்பரன்ஸ், செமினார், வொர்க்ஷாப் நடத்துரப்ப பார்டிசிபன்ட்சக்கு தர்றதுக்காக வாங்குற பேக் 200 ரூபாக்கு மேல ஆகுது. ஆனா, இதே பேக் கொச்சின்ல 130 ரூபாக்கு கெடைக்குது.

நான், முகிக்கு ஒரு சூ வாங்கினேன். செந்திக்கு ஒரு டிரஸ் வாங்கினேன். நைட்டு சாப்பாட ஆர்ய பவன் ல முடிச்சுட்டு வந்துட்டோம். கடை தெருவுல எங்க க்ரூப்ல ஒரு பொண்ணு, அவளோட மொபைல ஒரு கடைல வச்சுத் தொலைச்சுட்டா. நல்ல வேலையா அந்த மொபைல் அதே கடைலயே இருந்துச்சு. அடுத்த நாள் வீகா லேன்ட் போகணும்ன்னு பிளானோட எல்லாரும் தூங்க போயிட்டோம்.
வீகா லேன்ட் அனுபவத்த, அடுத்த இடுகைல எழுதுறேன்.

13 செப்டம்பர் 2010

கீழ முடி மன்னார் கோட்டை

கீழ முடி மன்னார் கோட்டை

கீழ முடி மன்னார் கோட்டை தான் எங்க சொந்த ஊரு. எங்க அப்பா அம்மா பிறந்த ஊரு. இந்த ஊரு, ராமநாதபுரம் மாவட்டத்துல கமுதி தாலுகால இருக்குற ஒரு கிராமம். ரொம்ப நாளுக்கு அப்புறம் அந்த ஊருக்கு போயிருந்தோம். ரொம்ப நாளுன்னா, ஒரு ஆறு வருசத்துக்கு மேல ஆயிருச்சு. கடைசியா, எங்க அப்பா தாத்தா இறந்ததுக்கு போனது. அப்போ எங்க மகனுக்கு (முகிலன்) ஒன்னே முக்கால் வயசு இருக்கும். அப்ப போனது.
இப்போ, ஊரு ரொம்ப மாறி போயிருச்சு. மண் தெருவெல்லாம் சிமென்ட் தெருவாகிருச்சு. கணிசமான எண்ணிக்கையில மாடி வீடுகள் வந்திருச்சு. எல்லாரும் படிக்க ஆரம்பிச்சுட்டாங்க. முக்கியமா.... எல்லாருமே டீச்சர் ட்ரைனிங் படிக்க ஆரம்பிச்சுட்டாங்க. எங்க ஊருல பெரும்பாலும் டீச்சர் வேலை பாக்குரவுங்கதான் ரொம்ப அதிகம்.
ரொம்ப வருசத்துக்கு அப்புறம் ஊருக்கு போனது சந்தோசமா இருந்துச்சு. நாங்க எல்லாரும், நான், சங்கீதா, முகி, செந்தி, அம்மா, இங்க கோவில்பட்டில இருந்து போனோம். அப்பா மதுரைல இருந்து வந்துட்டாரு. சேசு சித்தப்பா திருச்சில இருந்து வந்திருந்தாரு. செலிமா சித்திதான் வர்ரேன்னு சொல்லிட்டு வரல.
இந்த தடவ போனதுக்கான நோக்கம் என்னானா... ஊருல எங்களுக்கு கொஞ்சம் வீடு நெலம்லாம் இருக்கு. எங்களுக்கு ரெண்டு வீடு இருந்துச்சு. ஒன்னு பெரிய கார வீடு. இன்னொன்னு ஒட்டு வீடு. அந்த கார வீடு உண்மைலயே பெரிய வீடுதான். அநேகமா, அது எங்க பாட்டி இறக்குறதுக்கு முன்னாடியே கொஞ்சம் கொஞ்சமா இடிய ஆரம்பிச்சிருச்சு. எங்க பாட்டி இறக்கும் போதெல்லாம் அந்த வீட்ல பிரேதத்த வைக் முடியல. ஒட்டு வீட்லதான் வச்சு இருந்தோம். எங்க தாத்தா இறந்த போது அவரு பிரேதத்த வைக்க அந்த ஒட்டு வீடு கூட இல்ல. அதுவும் இடிஞ்சு போயிருச்சு. கார வீடு இருந்த இடத்துல, மரத்தடியில தான் வச்சு இருந்தோம்.
இப்போ, அந்த வீட்டு இடம் அது போக இன்னும் கொஞ்சம் இடமெல்லாம் என்ன நிலைமைல இருக்குதுன்னு பாத்துட்டு அத யாராருக்கு எந்த எந்த இடம்னு பிருசுக்கிரலாம்னு போயிருந்தோம். எல்லா இடத்தையும் அளந்து பாத்துட்டு குறிச்சுகிட்டு வந்துருக்கிறோம். ஓரளவுக்கு யாராருக்கு எந்த எந்த இடம்னு முடிவு பண்ணியாச்சு. அந்த இடத்துகெல்லாம் பட்டாவோ, பத்திரமோ எனக்கு தெரிஞ்சு ஒன்னும் இல்ல. இனிமேதான் அதெல்லாம் ரெடி பண்ணனும். இனிகோ அக்கா மாப்பிள்ளைகிட்ட (கருப்பசாமி மாமா) அத பத்தி விசாரிச்சுட்டு வந்தோம். அவரு வீ ஏ ஓ வா இருக்காரு.
இந்த தடவை போனப்ப சாரதா அக்கா ஊருல இல்ல. பெரியம்மா மட்டும் தான் இருந்தாங்க. அங்க போயிதான், நாங்க கொண்டு போன சாப்பாட்ட சாப்பிட்டுட்டு அங்க கொஞ்ச நேரம் இருந்து பேசிட்டு வந்தோம். பெரியம்மா வீட்ல பிள்ளைங்க ரெண்டு பேரும் நல்லா விளையாண்டாங்க. கெளம்பும் போது, ரெண்டும் நல்லா குளிச்சுட்டு குதியாட்டம் போட்டுட்டு வந்தாங்க. சங்கீதாவும் நல்லா பிரீயாதான் இருந்தா. அவளுக்கு அந்த வீடு புது வீடுதான. எங்க கல்யாணத்துக்கு அப்புறம் எங்க தாத்தா இறந்ததுக்கு போனப்போ பெரியம்மா வீட்டுக்கு போனது. அதுக்கப்புறம் இப்பதான். எங்க பெரியப்பா (சாரதா அக்கா அப்பா) இறந்ததுக்கு கூட போகல.
இந்த பயணத்துல யாருக்குமே நோ ஹார்ட் பீலிங்க்ஸ் னு நான் நினைக்கிறேன்.
இனிகோ அக்கா வீடு வந்து ஒரு தொட்ட வீடு. சுத்திலும் தோட்டம் இருக்கும் நடுவுல வீடு இருக்கும். ஒரு நல்ல இடம். கொஞ்ச நேரம் அங்கயும் இருந்தோம். முகிக்கும் செந்திக்கும் அது நிச்சயமா ஒரு வித்தியாசமான அனுபவம்தான். முகி, அங்க ஒரு சின்ன நாய் குட்டி இருந்துச்சு. அதை தூக்கிகிட்டே திரிஞ்சான். நல்லா என்ஜாய் பண்ணுநாங்க.
கொஞ்சம் போட்டோலாம் எடுத்தோம். முக்கியமா நாங்க திரும்பி வரும்போது அருப்புகோட்டைக்கு அப்புறம் நல்ல மழை. அந்த மழையில ரோட்டையும் அதுல வர்ற வண்டிகளையும், கார் கண்ணாடில பட்ட மழை துளிகளையும் அந்த மழை துளிகளை காரோட வைப்பர் துடைக்கிரதையும் போட்டோ எடுத்தோம். அத நீங்களும் பாருங்களேன்.

07 செப்டம்பர் 2010

தமிழ்நாடு அரசு குளிர் சாதனவசதிப் பேருந்து... கடைசி வரிசை இருக்கைகள்...

தமிழ்நாடு அரசு குளிர் சாதனவசதிப் பேருந்து...

கடைசி வரிசை இருக்கைகள்...

நானும் என்னோட நண்பர்கள் 2 பேரும், திருநெல்வேலியில இருந்து கோவில்பட்டி வர்றதுக்காக திருநெல்வேலி புது பஸ் ஸ்டாண்ட்ல நின்னுக்கிட்டு இருந்தோம். இங்க எப்படினா, வாரக் கடைசி நாட்கள்ல கோவில்பட்டிய கடந்து போற பஸ்ல கோவில்பட்டி டிக்கெட் ஏத்தமாட்டாங்க. மத்த நாட்கள்ல, கூவி கூவி டிக்கெட் ஏத்துவாங்க. நாங்க நின்னுக் கிட்டு இருந்ததும் ஒரு வாரக் கடைசி நாள்தான். அந்த நேரத்துல, ஒரு தமிழ்நாடு அரசு குளிர் சாதனவசதிப் பேருந்து சென்னைக்கு கிளம்பிகிட்டு இருந்தது. எங்களுக்கும், அதுல பயணம் செய்யலாம்னு ஆசை வந்து, அந்த கண்டக்டர்கிட்ட கேட்டோம். அவரும் ஏரிக்க சொல்லிட்டாரு. ஆனா, பயண சீட்டு கேட்ட உடனே, கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சிட்டோம். திருநெல்வேலியில இருந்து கோவில்பட்டிக்கு அந்த பஸ்ல பயண சீட்டு விலை 60 ரூபா. சாதாரண பஸ்ல 21 ரூபா தான். நாங்க யோசிச்சுகிட்டு இருக்கும் போதே, பஸ் நகர்ந்துகிட்டு இருந்துச்சு. ஒரு வழியா மனச தீத்திகிட்டு, அந்த பஸ்லயே ஏறிட்டோம். அந்த பஸ்குள்ள, நாங்க மூணு பேரு மட்டும் தான் மாணவர்களா இல்லாத பயணிகள். மொத்தமே, 36 இருக்கைகள் உள்ள அந்த பஸ்ல, ஒரு இருபதுல இருந்து இருபத்தஞ்சு பேரு இருந்திருப்போம். எங்க மூணு பெற தவிர மத்த எல்லாரும் அநேகமா கல்லூரி மாணவர்கள்தான்.

சரி.... இப்போ நமக்கு அதுவா முக்கியம்... விசயத்துக்கு வருவோம்... அதுதான் முக்கியம்....

நாங்க மூணு பெரும், கடைசி வரிசை இருக்கைக்கு (2 இருக்கைகள் + ஒரு பெட்டி + 2 இருக்கைகள்) முன்னாடி இருந்த 2 வது இருக்கைல வலப்பக்கம் ரெண்டு பெரும், இடப்பக்கம் நானும் உக்காந்தோம். கடைசி வரிசை இருக்கைலதான் ரெண்டு பேரு உக்காந்து இருந்தாங்க. (உக்காந்து இருந்துச்சுங்க....?) அந்த ரெண்டு பெரும் மாணவர்கள்.... ஆணும் பெண்ணும்.....

பஸ்ல, ஏ சி எபெக்ட் உண்மைலயே சூப்பரா இருந்தச்சு. எங்களுக்கு பின்னாடி உக்காந்து இருந்த அந்த ரெண்டு பெரும் பண்ணுன அசிங்கத்த என்னான்னு சொல்ல...

(இப்போ டைம் ஆச்சு........ மிச்சத்த அப்புறம் எழுதுறேன்....)

இங்க திரும்பவும் தொடர்றேன்.....

என்ன என்னமோ பண்ணுறானுங்க... (இத எல்லாம் நீ என்ன ......க்கு பாக்குற... ஒன்னோட வேலை ..... ர பாத்துகிட்டு போக வேண்டியதுதான... அப்படின்னு நீங்க கேப்பிங்க..?) முடியலங்க. ஏன்னா... நாங்க மூணு பேரும், இந்த பஸ்ல இப்படிலாம் நடக்கும். நாம போயி ஓசில படம் பாத்துட்டு வரலாம்னு, அந்த பஸ்ல ஏறல. அன்னைக்கு அந்த பஸ்ல ஏறுனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது... இந்த மாதிரி பஸ்ல இப்படியும் ஒரு படம் பாக்கலாம்னு.

எனக்கு என்ன பன்னுரதுன்னும் தெரியல... என்கிட்டே "ஜூனியர் விகடன்" புக் இருக்குல... அதோட நம்பர் இருந்துச்சு. அந்த நம்பருக்கு முயற்சி பண்ணிப் பார்த்தேன். அந்த நம்பருக்கு லைன் கெடைக்கல. என்னோட நண்பர்களும் வேண்டாம் வேண்டாம் னுட்டாங்க. எந்திருச்சு போயி அவிங்க பக்கத்துல உக்காந்துரலாமான்னு கூட தோணுச்சு. (அநாகரிகத்துக்கு எதிரான இன்னொரு அநாகரிகமா இருக்குமேன்னு... அப்படி பண்ணல) இப்போ யோசிச்சா... அப்படிக்கூட பன்னிருக்கலாமோன்னு தோணுது. பெறகு எப்படிதாங்க இதுக்கெல்லாம் நம்மோட எதிர்ப்ப காட்டுறது?

அப்படியே..... நாங்க இறங்க வேண்டிய இடமும் வந்துருச்சு. அதாங்க... கோவில்பட்டிக்கு பஸ் வந்துருச்சு. அவிங்கள ஏதாவது செய்யணுமேன்னு தோணிகிட்டே இருந்துச்சு. நாங்க மூணு பேரும் பஸ்ஸ விட்டு கோவில்பட்டில இறங்கும் போது, அந்த ரெண்டு பேருக்கிட்டயும் போயி, "கோவில்பட்டில இருந்து ஒரு பத்தாவது நிமிசத்துல "நள்ளி" னு ஒரு ஊரு வரும். அங்க ஒரு போலிஸ் செக் போஸ்ட் இருக்கு. அங்க போலிஸ் வந்து இந்த பஸ்ஸ ரைடு பண்ணுவாங்க... ஜாக்கிரதையா இருங்க" ன்னு சீரியசா சொல்லிட்டு வந்துட்டேன். அந்தப் பையன் என்னைய ஒருமாதிரி பாத்தான். சொல்லிட்டு நாங்க இறங்கி வந்துட்டோம்.

இதுல என்னனா... அந்த பொண்ணு அவ்வளவு ஒன்னும் ரொம்ப அழகா இல்லங்க. (ரொம்ப அழகா என்ன... சுமாராக் கூட இல்ல....). இந்த அழகுங்குற visayaத்தப் பத்திப் பேசும் போது, ரெண்டு விசயத்த ரொம்ப ஆழமா சிந்திக்க வேண்டி இருக்குது.

1. காதலுக்குத்தான் அழகு முக்கியமோ...?

2. காமத்துக்கு அழகு முக்கியமே இல்லையோ...?

ஏதாவது சொல்லுங்க....

05 செப்டம்பர் 2010

ஏர் டெல்லா... ஏமாத்து டெல்லா...?

ஏர் டெல்லா... ஏமாத்து டெல்லா...?
நானும் என் மனைவியும் ஏறக்குறைய ஒரு 5 வருசமா ஏர் டெல் சிம் கார்டு பயன்படுத்திக்கிட்டு வர்றோம். போன வாரத்துல ஒரு நாள், என் மனைவியோட சிம் கார்டோட சேவை திடீர்னு நிறுத்தப்பட்டது. சிக்னல் இல்ல, கால் பண்ண முடியல, கால் ரிசீவ் பண்ண முடியல. மொத்ததுல, மொபைல் போன் வேலை செய்யுது...ஆனா சிம் கார்டு வேலை செய்யல. ஏர் டெல் கஸ்டமர் கேர் நம்பருக்கு (121,198) போன் பண்ணி கேட்டப்போ, நீங்க உங்களோட அட்ரஸ் பரூப் மற்றும் போட்டோ குடுத்து இருக்க மாட்டிங்க இல்லேன்னா நீங்க குடுத்த டாகுமென்ட்ஸ் எங்கையாவது மிஸ் ஆகியிருக்கும், அதுனால நீங்க அருகில் இருக்கும் ஏர் டெல் டீலர்கிட்ட போயி தேவையான டாகுமென்ட்ஸ் குடுத்திங்கனா இந்த பிரச்சினை சரி ஆகியிரும்னு சொன்னங்க. (சிம் கார்டு வாங்கும் போதே இந்த எல்லா டாகுமெண்ட்சும் கொடுத்தாதான் சர்விஸ் ஆக்டிவேட் பண்ணுவாங்க...இது நம்ம எல்லாருக்கும் நல்லாவே தெரியும்னு நெனைக்கிறேன்). நானும், கோவில்பட்டியில இருக்கிற டீலர்கிட்ட போயி இந்த பிரச்சினைய சொன்னேன். அவுங்க என்னோட நம்பர அடிச்சு பாத்துட்டு இந்த நம்பரே இல்லைன்னு சொன்னாங்க. உங்களோட சிம் கார்டு ரிஜக்ட் ஆகிருச்சுன்னு சொன்னங்க. எப்படிங்கன்னு கேட்டேன். அது எங்களுக்கு தெரியாது, நீங்க வேணா ஏர் டெல்லுக்கே போன் பண்ணி கேளுங்கன்னு சொல்லிட்டாங்க. இதே நம்பர்ல வேற ஒரு டூப்ளிகட் சிம் கார்டு வாங்கிகிரலாமான்னு கேட்டேன். நம்பரே இல்லாதப்ப, அந்த நம்பர்ல எப்படிங்க இன்னொரு சிம் கார்டு தரமுடியும்ன்னுட்டாங்க. அப்ப என்னங்க பண்ணுறதுன்னு கேட்டப்போ, நீங்க கேஸ் போடுங்கன்னாங்க. கொஞ்சம் பொறுமையா விசாரிச்சப்பத்தான் தெரியுது... ஏமாந்த சோணகிரி நான் மட்டும் இல்ல... என்னைய மாதிரி இன்னும் நெறைய பேர் இருக்காங்கன்னு.
திரும்பவும், கஸ்டமர் கேர் நம்பருக்கு போன் பண்ணி, இந்த விசயத்த சொன்னேன். அவுங்களும் இந்த தடவை செக் பண்ணிட்டு, ஆமா ஆமா உங்க சிம் கார்டு ரிஜக்ட் ஆகிருச்சுன்னு சொன்னாங்க. ஏன்னு கேட்டா அவுங்கள்ட்டையும் பதில் இல்ல. உண்மைய சொன்னா, என்னோட அந்த கால் ல அட்டென் பண்ணுனவுங்களுக்கு (அது ஆணா... பொண்ணானு குரலை வச்சு கண்டுபிடிக்க முடியல) பதில் தெரியல. அப்போ அவுங்க என்ன சொன்னங்கன்னா, உங்களுக்கு ஒரு எஸ் எம் எஸ் இப்போ வரும் அதுல சொல்லியிருக்கிற படி நீங்க செய்யுங்க அப்படின்னு சொன்னாங்க. அந்த எஸ் எம் எஸ்ல *121# காண்டக்ட் பண்ண சொல்லியிருந்தாங்க. (இது ஒன்னும் நம்ம யாருக்கும் தெரியாத புது விஷயம் இல்ல). இந்த பதிலும் என்னோட பிரச்சினைக்கு சரியான தீர்வ சொல்லல. திரும்பவும், எங்க ஏரியா டீலர்கிட்ட போயி இந்த பிரச்சினைய சொன்னேன். அவுங்களும், சார் இந்த பிரச்சினைக்கு நாங்க ஒன்னும் செய்ய முடியாது. நீங்க வேணா மதுரை ஏர் டெல் ஆபிஸ்ல இத பத்தி கம்ப்ளைன்ட் பண்ணுங்கன்னு சொன்னாங்க. இல்லைனா, திரும்பவும் கஸ்டமர் கேர் நம்பர்லயே பேசுங்கன்னு சொன்னாங்க.
நானும் சளைக்காம, திரும்பவும் கஸ்டமர் கேர் நம்பருக்கு பேசுனேன். இந்த தடவ அவுங்க என்னோட அட்ரஸ் டீடைல், எந்த வருஷம் சிம் கார்டு வாங்குனேன், எவ்வளவு நாள் பயன்படுத்தாம வச்சு இருந்தேன்னு எல்லா விபரங்களும் கேட்டாங்க. நானும் எல்லாம் சொன்னேன். இந்த சிம் கார்ட ரொம்ப நாளா பயன் படுத்தாம வச்சு இருந்திங்களான்னு கேட்டாங்க. நான் இந்த சிம் கார்ட ஏறக்குறைய 5 வருசமா தொடர்ந்து பயன் படுத்திகிட்டு வர்ரேன். சர்விஸ் கட் ஆன நாளைக்கு மொத நாள் ராத்திரி வரைக்கும் இந்த சிம் கார்ட பயன் படுத்திக்கிட்டு வந்து இருக்கேன்னு சொன்னேன். அப்புறம், என்னோட அட்ரஸ் டாகுமெண்ட செக் பண்ணிட்டு... நீங்க சொன்ன அட்ரஸ் தப்பா இருக்குன்னாங்க. உணமையில, இந்த சிம் கார்ட நான், பாளையங்கோட்டைல இருக்கும் பொது வாங்குனேன். இப்போ கோவில்பட்டில இருக்கோம். இடையில ஒரு 3... 4... மாசத்துக்கு முன்னாடி, என் மனைவியோட மொபைல் போன் தொலஞ்சு போனப்ப... டூப்ளிகட் சிம் கார்டு பழைய நம்பர்லயே வாங்குனோம். அப்போ கொடுத்த அட்ரஸ் ப்ரூப் டாகுமேன்ட்ல இப்ப இருக்குற கோவில்பட்டி அட்ரஸ் இருக்குது. இதுதான் பிரச்சினையே. மொத தடவ சிம் கார்டு வாங்குனப்பவும், டூப்ளிகட் சிம் கார்டு வாங்குனப்போ கொடுத்த அட்ரஸ் பரூப் டாகுமேன்ட்ல வேற வேற அட்ரஸ் இருந்ததுனால எங்க சிம் கார்ட ரிஜக்ட் பண்ணிட்டாங்களாம். இதையும் ஏர் டெல் பண்ணலாம். டிராய் (TRAI) தான் செஞ்சாங்களாம். இதுக்கு நாங்க ஒன்னும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க.
நான் அவுங்ககிட்ட திரும்ப கேட்டேன், என்னாங்க இது.... வீடு மாறுனா மாறுன அட்ரசதான கொடுக்க முடியும். இதுக்காக, நாங்க பொய்யான அட்ரசயா கொடுக்க முடியும்... அப்படின்னு கேட்டேன். உண்மையிலே ரொம்ப கஷ்டமா இருக்குதுங்கன்னு சொன்னேன். இந்த மாதிரி ஒரு பதிலா ஏர் டெல்ல்கிட்ட இருந்து நான் எதிர் பாக்கல்ல்ன்னு சொன்னேன். அதுக்கு அந்த பக்கம் இருந்து பேசுனவரு (இந்த தடவ பேசுனது ஆம்பள ஆள் தான்), சார் இதுக்கும் ஏர் டெல்லுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எந்த சர்விஸ் புரவைடரும், அவுங்ககிட்ட இருக்கிற கஸ்டமர லூஸ் பண்ணனும்னு நெனைக்க மாட்டாங்க சார்ன்னு சொன்னாரு.
எனக்கு இன்ன ஒரு சந்தேகம் வந்து, அப்படினா இப்போ நான் வச்சு இருக்கிற இன்னொரு ஏர் டெல் நம்பரும் இதே மாதிரி ஒரு நாள் ரிஜக்ட் ஆகிருமான்னு கேட்டேன். அவரும் அதுக்கு நேரடியா பதில் சொல்லாம, டிராய் அமைப்பு பழைய நம்பர்ல இருந்து கொஞ்சம் கொஞ்சமா இத வெரிபை பண்ணிக்கிட்டு இருக்காங்க சார்... உங்களோட இன்னொரு நம்பருக்கும் அட்ரஸ் பரூப் கேப்பாங்க... அப்போ நீங்க உங்கள் அருகில் உள்ள டீலர்கிட்ட இத பத்தி பேசுனிங்கனா உங்களுக்கு ஏதாவது ஏற்பாடு செயுவாங்கன்னு சொன்னாரு. உடனே நான் கேட்டேன், என்னைய கூடிய சீக்கிரம் வேற ஒரு நல்லா சர்விஸ் புரவைடர்க்கு மாற சொல்லி நீங்க இப்பவே வார்னிங் பண்ணுரிங்களா ன்னு கேட்டேன். அவரு அவசர அவசரமா.... அத நான் சொல்ல முடியாது சார்னு சொல்லிட்டாரு.
இந்த தடவ அந்த கஸ்டமர் சர்விஸ் ஆளு ரொம்ப பொறுமையா சரியான தகவலை சொன்னாரு. நான் அவர்கிட்ட என்னோட வருத்தத்தையும் சங்கடத்தையும் அவுங்களோட மேல் அதிகாரிகள்ட்ட சொல்ல சொன்னேன். அவுங்களோட மெயில் டி யும் கேட்டு வாங்கிகிட்டேன். அவர்கிட்டயே.... நான் இத பத்தி, என்னோட எல்லா நண்பர்கள்கிட்டையும் முடிஞ்ச வரைக்கும் சொல்லுவேன்... அதோட என்னோட ப்ளாக் ளையும் எழுதுவேன்னு சொன்னேன்.
அவர்கிட்ட இருந்து ஒரு 'சோகமான சரி' பதிலா வந்தது.
எனக்கு என்ன புரியலைனா நண்பர்களே...
* சொந்த வீடு வச்சு இருக்குறவங்க மட்டும் தான் மொபைல் போன் சர்விஸ் பயன் படுத்த முடியுமோ...?
* சொந்த வீடோ... வாடகை வீடோ.... வீட்ட மாத்திட்டோம்னா வச்சு இருந்த சிம் கார்ட தூக்கி போட்டுற வேண்டியது தானா...? அதுல எவ்வளவு பேலன்ஸ் வச்சுருந்தாலும்.... (கடைசியா, எங்க சிம் கார்ட்ல 120 ரூபா பேலன்ஸ் இருந்தது)
* எல்லா சர்விஸ் புரைவைடருக்கும் இந்த மாதிரி பிரச்சனை டிராய் அமைப்புக்கிட்ட இருந்து வரும் தானே. அப்படினா, இன்னமும் எல்லாரும் சேர்ந்து ஏன் இதுக்கு ஒரு நல்லா முடிவ எடுக்க மாட்டேங்குறாங்க....?
* ஒரு வேளை, இது ஏர் டெல்லே தவறுதலா செஞ்சுட்ட ஒரு காரியமோ...? அந்த தவற மறைக்கிறதுக்கு, டிராய் மேல பழிய போடுறாங்களோ...?
எது என்னமோங்க... கடைசியா பாதிக்கபடுறது நம்மள மாதிரி (உங்களையும் சேத்துகிரலாம்ல...) சாதரனமானவங்கதான... என்ன பண்ணுறதுன்னு தெரியல...
ஏதாவது செய்யணும்ங்க...
நான் ஏதாவது செஞ்சேன்னா உங்களுக்கு சொல்லுறேன். நீங்க ஏதாவது செஞ்சிங்கனா என்கிட்டே சொல்லுங்க. நாம எல்லாரும் சேந்து செய்யுவோம்.
எல்லாரும் நல்லா இருக்கணும். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கணும். அதுக்கு யாரு என்ன செஞ்சாலும் அவுங்களோட சேந்துக்கிற வேண்டியதுதானே...
செய்வோங்க.... வாங்க...