28 செப்டம்பர் 2010

கோ - மூ - கொ - விலே - கோ - 2

கோ - மூ - கொ - விலே - கோ - 2

இது, எங்களோட வீகா லேன்ட் ட்ரிப் பத்தின என்னோட பதிவு.
எங்களோட ஓட்டுனர் முதல் நாள் இரவே எங்க எல்லாத்தையும் காலையில கொஞ்சம் சீக்கிரமாவே (ஒரு 6... 6.30 மணிக்கு) கெளம்பி இருக்க சொல்லிட்டாரு. ஏன்னா, கொச்சின்ல இருந்து காலைல லேட்டா கெளம்புனா, அதிகமான போக்குவரத்து நெரிசல்ல மாட்டிக்கிட்டு, நகரத்த (city) வெளியேர்றதுக்கே ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆகிரும். அதுனால நாங்களும் அடுத்த நாள் காலையில 6.30 மணிக்கெலாம் கிளம்பிட்டோம். ஏற்கனவே எங்க பிளான்ல, சோட்டனிக்கரை அம்மன் கோயில் போகணும்னு இருந்ததுனால, அன்னைக்கு காலைல கொச்சின்ல இருந்து கெளம்பி சோட்டனிக்கரை போயிட்டோம். சோட்டானிக்கரை, கொச்சின்ல இருந்து ஒரு 20 கிலோமீட்டர் குள்ள தான் இருக்கும். இது புகழ் பெற்ற அம்மன் கோயில்கள்ல ஒன்னு. நாங்க போன அன்னைக்கு புரட்டாசி மாதம் முதல் சனிக்கிளமைங்குரதுனால கோயில்ல நல்லக் கூட்டம். பசங்க பொண்ணுங்கல்லாம் கோயிலுக்குள்ள போனாங்க. மேடமும் போனாங்க. அந்த கோயிலுக்குள்ள போகணும்னா ஆம்பளை ஆளுங்க எல்லாரும், மேல் சட்டைய கழட்டிட்டுதான் போகணும். இந்த கட்டுப்பாடு, இந்த கோயில்ல மட்டும் இல்ல; கேரளால இருக்குற எல்லா கோயில்கள்லயும் இப்படி ஒரு காட்டுப்பாடு இருக்கு. இந்த முறையில எனக்கு உடன்பாடு இல்லைங்குறதுனால, நான் உள்ள (சந்நிதானத்துக்குள்ள) போகல. (இப்படி ஒரு காட்டுப்பாடு எதுக்குனா... 1. நாம என்ன ஜாதின்னு தெரிஞ்சுக்கிறதுக்காக (அந்த காலத்துல, தாழ்த்தப்பட்டவங்கள கோயிலுக்குள்ள விட மாட்டாங்க) 2. சாமிக்கு முன்னாடி எல்லாரும் சமம்னு உணர்த்துரதுக்காக; பள்ளிக்கூடத்துல யூனிபார்ம் போடுறது மாதிரின்னு வச்சுக்கோங்களேன். அங்க ஒரே மாதிரி கலர்ல சட்டத் துணி போட்டுருப்போம், இங்க... சாமிக்கு முன்னாடி எல்லாரும் எவ்வளவு விலை வுயர்ந்த துணிமணி போட்டுருந்தாலும் அத கழட்டிட்டு வெத்து உடம்போட இருக்கணும். (பொம்பள பிள்ளைகளுக்கெல்லாம் சாமிக்கு முன்னாடி எல்லாரும் சமம்ங்குற மாதிரியான கட்டுப்பாடெல்லாம் இல்லையானு குதர்க்கமாலாம் கேக்கக்கூடாது.) நான், முதல் காரணத்துக்காக இந்த கட்டுப்பாடுங்குரதுனால, உள்ள போகல.) ஆனா, நான் ஸ்டுடன்ட்டா இருந்தப்ப போன டூர்ல, குருவாயூர் கோயிலுக்கெல்லாம் உள்ள போயிருக்கிறேன்.
எல்லாரும் சாமி கும்பிட்டு வந்த பின்னாடி, அங்கையே காலை சாப்பாட முடிச்சிட்டோம். முடிச்சிட்டு, நேரா வீகா லேன்ட் க்கு கெளம்பிட்டோம். ஒரு 10 மணி சுமாருக்கு, வீகா லேன்ட் வந்துட்டோம். எங்களுக்கு முன்னாடியே, அங்க நல்ல கூட்டம் இருந்துச்சு. அது ஒரு சனிக் கிளமைங்க்ரதுனால நல்ல கூட்டம். பத்தரை மணிக்குதான் டிக்கட் கவுண்டர் திறந்தாங்க. எல்லாருக்கும் டிக்கட் வாங்கிட்டு, உள்ள போனோம். நாங்க உள்ள போகுறதுக்கு முன்னாடியே, பஸ்ல வச்சு, எல்லா பசங்க பிள்ளைங்ககிட்டையும் நாங்க ரெண்டு பேருமே உள்ள எப்படி நடந்துக்கிரனும், எப்படி இருக்கணும் அப்படிங்கறதெல்லாம் சொல்லிட்டோம். அது படியே எல்லாரும் நடந்துகிட்டாங்க (ஒரு சில விசயத்தைத் தவிர) ங்கறது ஆச்சரியமான விசயம்தான். எல்லாரும் ஒன்னாவே போயிட்டு வரணும்ங்க்றது மனசுல இருந்தாலும்... உள்ள அது படி இருக்க முடியல. அப்படி இருக்க முடியாதுங்க்ரதுதான் நடைமுறை உண்மை. எல்லாரும் அங்க அங்க பிரிஞ்சு போயி விளையாட ஆரம்பிச்சுட்டாங்க. முதல்ல எல்லாரும் தண்ணி இல்லாத விளையாட்டுக்குத்தான் போனாங்க. அதுதான் சரியும் கூட.
"ட்வின் பிலிப் மான்ஸ்டர்" ன்னு ஒரு விளையாட்டு... சான்சே இல்ல.... செம த்ரில்லிங். அந்த விளையாட்டுக்கு போகாம வெளிய இருந்து பாத்துக்கிட்டு இருந்த எனக்கே அவ்வளவு த்ரில்லிங்கா இருந்துச்சுனா... அதுல சுத்துனவுங்களுக்கு எப்படி இருந்திருக்கும். அப்படியே தலைகீழா ரெண்டு நொடி நிக்கிது. நாம சேர்ல உக்காந்த நெலமைல ஒரு ரெண்டு நொடி தலைகீழா அப்படியே இருப்போம். அது மட்டும் இல்லாம நாம உக்காந்து இருக்குற சேர் எல்லாப் பக்கமும் ரொம்ப வேகமா சுத்துது. அதுல உக்காந்து சுத்துனவுங்க எல்லாம் ஒரே கூக்குரல்... அது சந்தோசக் குரலா இல்ல பயத்துல கத்துராங்கலான்னு தெரியல. பயத்த வெளிய காட்டக் கூடாதுங்குரதுக்காகவும் கத்தி இருக்கலாம்... தெரியல. ஒரு பைய்யன்லாம் அதுல சுத்திட்டு வந்ததுக்கு அப்புறம் கீழ வந்து வாந்தி பண்ணிட்டான். தல சுத்தும்ல. எப்படி இருந்தாலும், அந்த விளையாட்டு பசங்களுக்கெல்லாம் ஒரு வித்தியாசமான அனுபவம்தான். அத மாதிரி இன்னும் நெறைய விளையாட்டுக இருந்துச்சு. அநேகமா பசங்க பொண்ணுங்க எல்லாரும் எல்லா விளயாட்டுளையும் விளையாண்டு இருப்பாங்க. எல்லா விளயாட்டுகள்ளையும், நோயாளிகளுக்கான எச்சரிக்கை வச்சு இருக்காங்க. ரொம்ப நல்ல விஷயம். அது போக, அந்த விளையாட்டுக்கல்ல ஏதாவது அசம்பாவிதம் நடந்துச்சுனா, அத சரி பன்னுரதுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் தயாரா வச்சு இருக்காங்க. அந்த ஏரியாவையே ரொம்ப சுத்தமா வச்சு இருக்காங்க. இதுக்குத் தனி கவனம் செலுத்துறாங்க.
இந்த மாதிரி, தீம் பார்க்ல இருக்குற ட்ரை கேம்ஸ்ல பாதுகாப்பு முக்கியம்னா... தண்ணீர் (வாட்டர் கேம்ஸ்)பாதுகாப்போட உடை கவனமும் ரொம்ப முக்கியம். இதுலதான், அதிகமான பொண்ணுங்க கவனக் குறைவா இருந்துர்றாங்க. அது அவுங்களுக்கு ரொம்ப பெரிய பிரச்சனையக் குடுத்துருது. அதுலயும், இங்க ஒரு நல்ல விஷயம் செஞ்சுருந்தாங்க... என்னான்னா... வாட்டர் கேம்ஸ் எதுலயும் யாரும் போட்டோ எடுக்கக்கூடாதுன்னு அறிவிப்பு செஞ்சுருந்தாங்க. இது ஒரு நல்ல விஷயம். இந்த மாதிரி எடத்துல போட்டோ எடுக்குறது தான பொண்ணுங்களுக்கு ரொம்ப அதிகமானத் தொந்தரவக் குடுக்குது.
இந்த விசயத்துல நெறைய பொண்ணுங்க ரொம்ப ஜாக்கிரதையா இருந்தாங்க. அவுங்க உடை உடுத்தி இருக்குற விதத்துல எந்த குறையும் இல்லாம, ரொம்ப சரியா பண்ணி இருந்தாங்க. நன்று.
இவ்வாராகத்தானே... எல்லா கேம்சுலையும் விளையாண்டுட்டு, எல்லாரையும் நாலு மணிக்கெல்லாம் வரச் சொல்லி இருந்தோம். ஆனா, எல்லாருமே "பங்க்சுவாலிட்டி புலி" ங்கறதுனால யாருமே நாலு மணிக்கு வரல. பசங்கன்னா அப்படிதான் இருப்பாங்கன்னாலும், கொஞ்சமாவது நேரத்தைக் கடைப்பிடிக்கலாம். இவங்க எல்லாரும் சரியான நேரத்துக்கு வரலைன்னதும், நானும் மேடமும் உள்ள விளையாண்டுகிட்டு இருந்தவங்க எல்லாத்தையும் போயி வர சொல்லிட்டு வந்தோம். அந்தா இந்தான்னு எல்லாரும் ஒரு வழியா வர ஆரம்பிச்சாங்க. கடைசியா எத்தனை மணிக்கு வந்திருப்பாங்கன்னு நெனைக்கிறிங்க.... ஆறு மணிக்கு வந்தாங்க. அப்பாவும் கொஞ்ச பேரு வரல. அந்த குரூப் எதுனா... ஏற்க்கனவே வந்து ரெடி ஆகி, அப்பாவும் வராதவன்கலப் போயி கூப்பிட போனது. இந்த நேரத்துல, மொதல்லயே வந்து காத்துகிட்டு இருந்த க்ரூப்ல கொஞ்ச பொண்ணுங்களுக்கு பசிக்க ஆரம்பிச்ச உடனே அவுங்க சாப்பிட போயிட்டாங்க. நியாயமான ஒண்ணுதான். கடைசியா ஒரு ஆறரை மணிக்கு வீகா லேண்ட விட்டு கிளம்பினோம். நைட் சாப்பாட போற வழியில எங்கயாவது முடிச்சுக்கிரலாம்னு நினைச்சுகிட்டு கிளம்பினோம். எல்லாரும் நல்லா பசில இருந்தோம். அதுனால, உடனடியா வர்ற ஒரு நல்லா ஹோட்டல்ல சாப்புடலாம்னு நெனச்சா... சோதனைக்குன்னு ஒரு நல்லா ஹோட்டல் கூட இல்லைங்க. நாங்க கூட நெனைச்சோம்... பார்டர்லதான் (செங்கோட்டைல தமிழ்நாடு கேரளா பார்டர்ல இருக்குற ஒரு பிரியாணி புரோட்டா கடை) போயி சாப்பிடுவோம்னு. நல்லா வேலையா அதுக்கு முன்னாடியே ஒரு ஊர்ல ஒரு நல்லா ஹோட்டல்ல சாப்பிட்டோம். அப்படியே கிளம்பி ஒரு வழியா 19 ஆம் தேதி அதி காலைல 4.30 மணிக்கு காலேஜ் வந்து சேந்தோம்.
ஒரு நல்ல டூர். சந்தோசமான பயணம். நல்ல படியா முடிஞ்சது.
அப்புறம்... கடைசியா... இந்த இடுகையோட முதல் பாகத்துல முதல் பத்தியில இந்த கட்டுரையோட தலைப்ப பத்தி எழுதியிருன்தேன்ல...? அத கண்டுபிடிச்சீங்களா....?
அது வேற ஒன்னும் இல்லங்க ... கோவில்பட்டி - மூனாறு - கொச்சின் - வீகா லேன்ட் - கோவில்பட்டி. அவ்வளவுதான்.

கருத்துகள் இல்லை: