29 ஏப்ரல் 2011

சுதந்திர அடிமைகள்!

சுதந்திர அடிமைகள்!
அடிமைகள்.
நாங்கள் அடிமைகள்!
அச்சுறுத்தும் ஆழிப்பேரலைகள்
ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும்
மகா சமுத்திரத்தின்
நடுவில் இருக்கும்
கரடு முரடான
மலையின் உச்சியில்
தங்கக் கூண்டில்
நாங்கள் சுதந்திரமாய்
உலாவிக் கொண்டிருக்கிறோம்.
எங்கள்
கரங்களும் கால்களும்
கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.
திறந்து விடப்பட்டிருக்கும்
எங்கள் கூண்டின்
கதவுகளில்
கட்டுவிரியன் பாம்புகளும்
கூறியப் பற்களோடு ஓநாய்களும்
காவலுக்கு நிற்கின்றன.
நாங்கள் அடிமைகள்.
சுதந்திரமாய் சுற்றித் திரிய
அனுமதிக்கப் பட்டிருக்கும்
சிறந்த அடிமைகள்.

19 ஏப்ரல் 2011

என்னான்னு சொல்ல....?

மனைவி ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும்போது அந்த வேலையில் உதவ தோன்றுகிறது. அம்மா வேலை செய்து கொண்டிருக்கும்போது வேடிக்கைப் பார்க்கத் தோன்றுகிறது. எங்கே கற்றுக் கொண்டேன் இதனை....? அனைத்து ஆண்களுக்கும் இது பொருந்துமோ....? பொருந்தும் என்றுதான் தோன்றுகிறது. ஒருவேளை பெரும்பான்மையானவர்கள் மீசையில் மண் ஒட்டாமல் பார்த்துகொள்பவர்களாக இருக்கலாம். இதெல்லாம் வாழ்க்கையில் சகஜம்தானே...!!!!