12 ஆகஸ்ட் 2010

இது தப்பா...அது தப்பா... (குடும்பக் குத்து விளக்குகள்)

இது தப்பா...அது தப்பா... (குடும்பக் குத்து விளக்குகள்)
நம்ம ஊர்ல, குடும்பக் குத்து விளக்குனா... அது பொண்ணுங்கதானே... அதப் பத்தி, ரெண்டு நாளைக்கு முன்னாடி, எனக்கு ஒரு பார்வர்டட் மெயில் வந்துச்சு. அத அனுப்பினது என்னோட ஒரு நண்பன். அந்த மெயில்ல ஒரு... ஏழு பொண்ணுங்க சேந்து தண்ணி அடிக்கிற மாதிரி போட்டோ இருந்தது. மொத்தம் மூணு போட்டோ இருந்தது. எல்லா போட்டோலயும் எல்லா பொண்ணுங்களும் நல்லா ஜாலி மூட்ல இருந்தது பதிவாகி இருக்குது. முதல் போட்டோல எல்லா பொண்ணுங்களும், ஒரு குவார்டர் பாட்டில கைல பிடிச்சுக்கிட்டு இருக்காங்க. (எல்லாத்துக்கும் சேத்தே ஒரு குவார்ட்டர் பாட்டில் தான்). அடுத்த படத்துல குவார்ட்டர் பாட்டிலோட சேந்து சைடு டிஷ்-ஊறுகாயும், மிக்சிங்க்க்கு fanta வும் இருக்குது. கடைசி படத்துல காலியான குவார்ட்டர் பாட்டிலும் ஒரு ரெண்டு பொண்ணுங்களும் இருக்காங்க.
இந்த மெயில் எங்க குருப் மைலுக்கு பார்வர்ட் ஆகி இருந்தது. அந்த மெயில் வந்த அன்னைக்கே, எங்களோட இன்னொரு நண்பன் அந்த மெயில் க்கு கண்டனம் தெரிவிச்சு ஒரு மெயில் அனுப்பி இருந்தான். அதுல அவன், இந்த மாதிரி மெயில் எல்லாம் இனிமே அனுப்பாதிங்க... ஏன்னா, இந்த மாதிரி விஷயம் எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி, ஒரு சந்தோசத்துக்காக பொண்ணுங்க பண்ணுறது ; இதெல்லாம் அவுங்க பண்ணலாம். அப்படின்னு எழுதி இருந்தான். அதோட, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, இப்படி வந்த ஒரு மெயில் ல கொஞ்சம் காலேஜ் பொண்ணுங்க பார்ட்டில டான்ஸ் ஆடிக்கிட்டு இருந்த மாதிரி ஒரு படம் வந்திருந்தது; அரை நிர்வானமாத்தான்; இந்த மெயில் பார்வர்ட் ஆக ஆரம்பிச்ச கொஞ்ச நாள்ல அந்த படத்துல இருந்த ஒரு பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டான்னு எழுதி இருந்தான். அதுனால இந்த மாதிரி மெயில் எல்லாம் பார்வர்ட் பண்ணாதிங்க. இது பொண்ணுங்க வாழ்க்கைய பாதிக்கும்னு சொல்லி இருந்தான். இன்னைக்கு அது சம்பந்தமா வந்த இன்னொரு மெயில் ல, இத ஆதரிச்சு இன்னொரு நண்பன் எழுதி இருந்தான். அதோட கூட, முதல்ல பார்வர்ட் செய்யப்பட்ட அந்த மெயில், ஒரு பொண்ணோட ஐடி ல இருந்து வந்திருக்குன்னு கூடுதல் தகவல் தந்திருந்தான்.
இந்த விசயத்த எப்படி பாக்குறது....? பொண்ணுங்க இப்படிலாம் பண்ணலாம்; அது சும்மா ஒரு சந்தோசத்துக்காக, அப்படின்னு கேசுவலா விட்டுறலாமா...? இல்லேன்னா, பொண்ணுங்களோட இந்த மாதிரி நடவடிக்கைலாம், ரொம்ப தப்பானது...இது கலாச்சார சீர் கேடுக்கு ரொம்ப பெரிய வழி வகுக்கும்... அப்படின்னு போர்க்கொடி தூக்கலாமா...?
ஒருவேள, நம்ம போர்க்கொடித் தூக்குரோம்னு வைங்க.... நம்மக்கிட்ட இருக்குற பெண்ணியவாதிகள், இப்ப கலாச்சாரம் இதுனால மட்டும் தான் கேட்டு போகுதா.... நீங்க ஏன் சார் எல்லாத்தையும் தப்பாவே பாக்குறிங்க... ஒங்க வீட்டு பொண்ணுங்கல்லாம் சரியாத்தான் இருக்காங்களா.... அப்படி சரியாத்தான் இருக்காங்கன்னு நீங்க சொன்னிங்கன்னா, உங்க கண்காணிப்பு நடவடிக்கைள ஏதோ தப்பு இருக்கு. அவுங்க அவுங்க... அவுங்க வீட்டு விசயத்த மட்டும் பாருங்க... அடுத்த வீட்டு பொண்ணு என்ன செய்யுதுன்னு, ஓட்டை வழியா பாக்காதிங்க ன்னு எதிர் குரல் எழுப்புவாங்க.
என்ன செய்யறதுன்னு தெரியல.
இன்ன ஒரு மாதிரி யோசிச்சோம்னா, ஆம்பள பசங்க இத விட மோசமாவே பண்ணுறாங்க. அதெல்லாம், இந்த மாதிரி "போஸ்டர்" ஆக மாட்டேங்குது. அப்படியே ஆனாலும், அது அவிங்களோட திறமையின் வெளிப்பாடாத்தான் காட்டப்படுது. என்ன சார் நியாயம்..... அவிங்க பண்ணுனா சரி... அதே இத இவிங்க பண்ணுனா தப்பு. என்ன கொடும சார் இது...? ஒருவேள, இது..இது இவிங்க பண்ணுனா சரி... அதே இத அவிங்க பண்ணுனா தப்பு... அப்படின்னு எதுவும் பாராளு மன்றத்துல புதுசா சட்டம் இயற்றிட்டான்களோ...? இருந்தாலும் இருக்கும். யாரு கண்டது.
லஞ்சம் தேசிய மயமாக்கப்பட்ட நாடுகள்ள நம்ம நாடும் ஒண்ணுதானே...?
மொத்ததுல, என்னதான் சொல்ல வர்ரிங்க...? பொண்ணுங்க தண்ணி அடிக்கிறது தப்பா....இல்லைனா, பொண்ணுங்க தண்ணி அடிக்கிற மாதிரி இருக்குற போட்டோவ பார்வர்ட் செய்யறது தப்பா.....?
எது தப்பு.... எது சரி..... ஏதாவது எங்களுக்கு புரியற மாதிரி சொல்லுங்களேன்....

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

yaarumae pinnoottam yelutha maattaenguraanga....

karthik,EEE சொன்னது…

Cultural development ? / excess of money at their very short age.Vaname alai.

karthik
EEE

theerppavan சொன்னது…

பரவா இல்லைங்க...
இதுலயும் /வானமே எல்லை/ நாம பொண்ணுங்கள சேத்துக்கிறோம்...