13 செப்டம்பர் 2010

கீழ முடி மன்னார் கோட்டை

கீழ முடி மன்னார் கோட்டை

கீழ முடி மன்னார் கோட்டை தான் எங்க சொந்த ஊரு. எங்க அப்பா அம்மா பிறந்த ஊரு. இந்த ஊரு, ராமநாதபுரம் மாவட்டத்துல கமுதி தாலுகால இருக்குற ஒரு கிராமம். ரொம்ப நாளுக்கு அப்புறம் அந்த ஊருக்கு போயிருந்தோம். ரொம்ப நாளுன்னா, ஒரு ஆறு வருசத்துக்கு மேல ஆயிருச்சு. கடைசியா, எங்க அப்பா தாத்தா இறந்ததுக்கு போனது. அப்போ எங்க மகனுக்கு (முகிலன்) ஒன்னே முக்கால் வயசு இருக்கும். அப்ப போனது.
இப்போ, ஊரு ரொம்ப மாறி போயிருச்சு. மண் தெருவெல்லாம் சிமென்ட் தெருவாகிருச்சு. கணிசமான எண்ணிக்கையில மாடி வீடுகள் வந்திருச்சு. எல்லாரும் படிக்க ஆரம்பிச்சுட்டாங்க. முக்கியமா.... எல்லாருமே டீச்சர் ட்ரைனிங் படிக்க ஆரம்பிச்சுட்டாங்க. எங்க ஊருல பெரும்பாலும் டீச்சர் வேலை பாக்குரவுங்கதான் ரொம்ப அதிகம்.
ரொம்ப வருசத்துக்கு அப்புறம் ஊருக்கு போனது சந்தோசமா இருந்துச்சு. நாங்க எல்லாரும், நான், சங்கீதா, முகி, செந்தி, அம்மா, இங்க கோவில்பட்டில இருந்து போனோம். அப்பா மதுரைல இருந்து வந்துட்டாரு. சேசு சித்தப்பா திருச்சில இருந்து வந்திருந்தாரு. செலிமா சித்திதான் வர்ரேன்னு சொல்லிட்டு வரல.
இந்த தடவ போனதுக்கான நோக்கம் என்னானா... ஊருல எங்களுக்கு கொஞ்சம் வீடு நெலம்லாம் இருக்கு. எங்களுக்கு ரெண்டு வீடு இருந்துச்சு. ஒன்னு பெரிய கார வீடு. இன்னொன்னு ஒட்டு வீடு. அந்த கார வீடு உண்மைலயே பெரிய வீடுதான். அநேகமா, அது எங்க பாட்டி இறக்குறதுக்கு முன்னாடியே கொஞ்சம் கொஞ்சமா இடிய ஆரம்பிச்சிருச்சு. எங்க பாட்டி இறக்கும் போதெல்லாம் அந்த வீட்ல பிரேதத்த வைக் முடியல. ஒட்டு வீட்லதான் வச்சு இருந்தோம். எங்க தாத்தா இறந்த போது அவரு பிரேதத்த வைக்க அந்த ஒட்டு வீடு கூட இல்ல. அதுவும் இடிஞ்சு போயிருச்சு. கார வீடு இருந்த இடத்துல, மரத்தடியில தான் வச்சு இருந்தோம்.
இப்போ, அந்த வீட்டு இடம் அது போக இன்னும் கொஞ்சம் இடமெல்லாம் என்ன நிலைமைல இருக்குதுன்னு பாத்துட்டு அத யாராருக்கு எந்த எந்த இடம்னு பிருசுக்கிரலாம்னு போயிருந்தோம். எல்லா இடத்தையும் அளந்து பாத்துட்டு குறிச்சுகிட்டு வந்துருக்கிறோம். ஓரளவுக்கு யாராருக்கு எந்த எந்த இடம்னு முடிவு பண்ணியாச்சு. அந்த இடத்துகெல்லாம் பட்டாவோ, பத்திரமோ எனக்கு தெரிஞ்சு ஒன்னும் இல்ல. இனிமேதான் அதெல்லாம் ரெடி பண்ணனும். இனிகோ அக்கா மாப்பிள்ளைகிட்ட (கருப்பசாமி மாமா) அத பத்தி விசாரிச்சுட்டு வந்தோம். அவரு வீ ஏ ஓ வா இருக்காரு.
இந்த தடவை போனப்ப சாரதா அக்கா ஊருல இல்ல. பெரியம்மா மட்டும் தான் இருந்தாங்க. அங்க போயிதான், நாங்க கொண்டு போன சாப்பாட்ட சாப்பிட்டுட்டு அங்க கொஞ்ச நேரம் இருந்து பேசிட்டு வந்தோம். பெரியம்மா வீட்ல பிள்ளைங்க ரெண்டு பேரும் நல்லா விளையாண்டாங்க. கெளம்பும் போது, ரெண்டும் நல்லா குளிச்சுட்டு குதியாட்டம் போட்டுட்டு வந்தாங்க. சங்கீதாவும் நல்லா பிரீயாதான் இருந்தா. அவளுக்கு அந்த வீடு புது வீடுதான. எங்க கல்யாணத்துக்கு அப்புறம் எங்க தாத்தா இறந்ததுக்கு போனப்போ பெரியம்மா வீட்டுக்கு போனது. அதுக்கப்புறம் இப்பதான். எங்க பெரியப்பா (சாரதா அக்கா அப்பா) இறந்ததுக்கு கூட போகல.
இந்த பயணத்துல யாருக்குமே நோ ஹார்ட் பீலிங்க்ஸ் னு நான் நினைக்கிறேன்.
இனிகோ அக்கா வீடு வந்து ஒரு தொட்ட வீடு. சுத்திலும் தோட்டம் இருக்கும் நடுவுல வீடு இருக்கும். ஒரு நல்ல இடம். கொஞ்ச நேரம் அங்கயும் இருந்தோம். முகிக்கும் செந்திக்கும் அது நிச்சயமா ஒரு வித்தியாசமான அனுபவம்தான். முகி, அங்க ஒரு சின்ன நாய் குட்டி இருந்துச்சு. அதை தூக்கிகிட்டே திரிஞ்சான். நல்லா என்ஜாய் பண்ணுநாங்க.
கொஞ்சம் போட்டோலாம் எடுத்தோம். முக்கியமா நாங்க திரும்பி வரும்போது அருப்புகோட்டைக்கு அப்புறம் நல்ல மழை. அந்த மழையில ரோட்டையும் அதுல வர்ற வண்டிகளையும், கார் கண்ணாடில பட்ட மழை துளிகளையும் அந்த மழை துளிகளை காரோட வைப்பர் துடைக்கிரதையும் போட்டோ எடுத்தோம். அத நீங்களும் பாருங்களேன்.

கருத்துகள் இல்லை: