12 ஜூன் 2011

அரசுப் பேருந்துகளைப் புறக்கணித்தால் என்ன...?

அரசுப் பேருந்துகளைப் புறக்கணித்தால் என்ன...?



போன வாரத்துல ஒருநாள், கோவில்பட்டில இருந்து திருநெல்வேலிக்கு அரசு விரைவு பேருந்துல பயணம் செய்ய வேண்டிய ஒரு மோசமான் சூழ்நிலை எனக்கு வந்தது. கோவில்பட்டி புது பஸ் ஸ்டாப்ல (அத புது பஸ் ஸ்டாண்ட் னு சொல்ல முடியாது. ஏன்னா, அந்த பஸ் ஸ்டாண்டுக்குள்ள எந்த பஸ்சும் வராது. வெளியிலயே எல்லா வேலையையும் முடிச்சுட்டு
அப்படியே போயிரும்.) இருந்து அரசு விரைவு பேருந்துல ஏறி உக்காந்தோம். கோவில்பட்டி-திருநெல்வேலி அந்த பேருந்துல 35 ரூபா கட்டணம். சுமார் காலை 9.15 மணிக்கு கோவில்பட்டில பஸ் ஏறினோம். திருநெல்வேலிக்கு காலை 10.36 மணிக்கு போயி சேந்தோம். ஏறக்குறைய 80 நிமிஷம் ஆகிருக்கு, 60 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க.
இதே அறுபது கிலோ மீட்டர் தூரத்த "பை பாஸ் ரைடர்" பஸ்ல 25 ரூபா குடுத்துக் கடக்க 55 நிமிஷம் மட்டும் தான் ஆகுது("பை பாஸ் ரைடர்" கோவில்பட்டில நின்னு ஆள் ஏத்திக்கிட்டு போகும். ஆனா, திருநெல்வேலில இருந்து கோவில்பட்டிக்கு ஆல் ஏத்திக்கிட்டு வர மாட்டாங்க.). சாதாரண "சூப்பர் பாஸ்ட் சர்விஸ் " பஸ்ல 21 ரூபா குடுத்துக் கடக்க 60 நிமிசம்தான் ஆகுது.
ஆனா, அரசு விரைவு பேருந்துல இதே அறுபது கிலோ மீட்டர் தூரத்த முப்பத்தஞ்சு ரூபா குடுத்துக் கடக்க எவ்வளவு நேரம் ஆகுதுன்னு கவனிச்சிங்களா? அன்னைக்கு, எங்களோட நெலம கூடப் பரவா இல்ல. நாங்க கோவில்பட்டில இருந்து திருநெல்வேலிக்கு தான் அந்த பஸ்ல பயணம் செஞ்சோம். அதே பஸ்ல, சென்னைல இருந்து பிரயாணம் செஞ்சுகிட்டு வந்தவங்களும் இருந்தாங்க. ரொம்ப பாவமா இருந்துச்சு. அவங்கெல்லாம், முந்துன நாள் நைட்டு 7 மணிக்கு பஸ் ஏறி இருக்காங்க. ஏறக்குறைய 15 மணி நேரம் பயணம் செஞ்சு திருநெல்வேலிக்கு வந்தாங்க. உண்மையிலயே, 12 மணி நேரத்துக்குள்ள சென்னைல இருந்து திருநெல்வேலிக்கு வந்துரலாம்.
சரி, பயண நேரத்த விடுங்க. ரொம்ப பாதுகாப்பா நம்மள கொண்டு வந்து விடுராங்கன்னு வச்சுக்கிறலாம்(இதுதானா ஒங்க பாதுகாப்பு....). மத்த வசதிகள்... கிழிஞ்சு நாறிக்கிட்டு இருக்குற இருக்கைகள், அந்து தொங்கிகிட்டு இருக்குற லைட்டுகள், அழுக்காகி தொங்கிகிட்டு இருக்குற ஜன்னல் திரைத் துண்டுகள்... இப்படி இன்னும் ஏராளமான முறையான பராமரிப்பு இல்லாத ஏகப்பட்ட வசதிகள். இதை எல்லாத்தையும் அனுபவிக்க நாம வழக்கத்த விட அதிகமான கட்டனத்தக் குடுத்து இந்த பஸ்ல பயணம் செய்யணும். என்ன கொடும சார் இது....?
இந்த விசயத்தக் கொஞ்சம் ஆழமா கவனிச்சுப் பாத்தீங்கனா, அதிகார வர்க்கத்தோட ஒரு சூழ்ச்சியப் புரிஞ்சுக்கலாம். அது என்னானா, கொஞ்சம் வசதி உள்ள மேல்தட்டு மக்களும், உயர் நடுத்தர வகுப்பினரும், இன்னும் அதிகமான பணம் கொடுத்து தனியார் ஆம்னி பஸ்ல போயிர்றாங்க; பல வசதிகளோட. அந்த மாதிரி பஸ்லாம் நல்லா சுத்தமாவே இருக்கு.



ஆனா, வசதி குறைவான, ஏழைகள் மற்றும் கீழ் நடுத்தர மக்களும் (அரசுப் பேருந்துல பயணம் செஞ்சா என்னானுக் கேக்குற நாங்களும்தான்...) 99% அரசாங்கப் பேருந்தைத் தான் பயன்படுத்துறாங்க. இவுங்களுக்கு, அரசாங்கம் என்ன வசதிகள செஞ்சு குடுத்துருக்கு. அரசாங்கத்துக்கு வருமானம் வர்றதுக்கு ஏற்பாடு செஞ்சு தர்ற இந்த மாதிரி மக்களுக்கு விரைவான, பாதுகாப்பான, வசதியான பயணம் ஒரு கேள்விக்குறியாத்தான் இன்னமும் இருக்கு. பணம் குடுக்குற அவங்கள, (எங்களையும் தான்) எந்த வசதியும் செஞ்சு குடுக்காம அல்லது, அந்த வசதிகள முறையா, ஏமாத்தத் தானே செய்யுறாங்க...?



ஏழைக்கு ஒரு நியாயம் பணக்காரனுக்கு ஒரு நியாயமா...? இது கொஞ்சமும் சரி இல்லாத ஒரு செயல் தான...? அரசுப் பேருந்த முறையாப் பயன்படுத்தாததுக்கு என்ன காரணமா இருக்கலாம்...? என்னையக் கேட்டா, இதுக்கு சோம்பேறித் தனமும், எனக்கென்ன வந்துச்சு அப்படிங்கற விட்டேத்தியான மன நிலையம் தான் காரணம்னு சொல்லுவேன்.



இதுக்கெல்லாம் என்னதான் தீர்வு சொல்லுறது? ஒருமுறை, இந்தக் கட்டுரையின் தலைப்பை படியுங்க. அதுபடியே முயற்சி செஞ்சு பாத்தாதான் என்ன?. இது கஷ்டமான விஷயம் தான். ஆனாலும் அடிக்க அடிக்க அம்மியும் நகரும்தானே...?


செய்யனுங்க. செஞ்சு பாக்கணும். அப்பத்தான், இவிங்களுக்கும் அறிவு வரும்.

கருத்துகள் இல்லை: