23 ஜூலை 2010

தண்ணீர்.......தண்ணீர்..........

தண்ணீர்.......தண்ணீர்..........
இந்த முறை, தேர்வு விடைத்தாள் திருத்துவதற்காக திருநெல்வேலி சென்றிருந்தேன். அங்கு, அரசு பொறியியல் கல்லூரியில் பணி நடைபெற்றது. நாங்கள் அங்கு சென்ற நாள் முதல் ஒரு விஷயத்தை கவனித்துக் கொண்டு வந்தேன்; நாங்கள் திருத்திகொண்டிருந்த துறை கட்டிடத்தின் ஒரு கழிப்பறையில் உள்ள ஒரு தண்ணீர் குழாயில் தண்ணீர் ஒழுகிக் கொண்டே இருந்தது. அதை யாருமே சரி செய்ய முன்வரவில்லை; அதனை அத்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவும் யாருமே முன்வரவில்லை; இது அத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் இருந்ததா எனவும் தெரியவில்லை. நான் உட்பட அதனை யாருக்கும் தெரியபடுத்தவில்லை.
ஒழுகிக்கொண்டிருந்த தண்ணீரை நான் அளந்து பார்த்தேன். ஒரு நிமிடத்திற்கு ஏறக்குறைய 1.33 லிட்டர் தண்ணீர் வீணாகிக் கொண்டிருந்தது. ஒரு நாளைக்கு 1915 லிட்டர் தண்ணீர் வீணாகிக் கொண்டிருந்தது. எல்லா நேரமும் இதே அளவில் தண்ணீர் வீணாகாது என்று எடுத்துக் கொண்டாலும், தோராயமாக 1500 லிட்டர் தண்ணீர் வீணாகிக் கொண்டிருந்தது. இதனை, ஒரு குடும்பத்திற்கான ஒரு நாள் தண்ணீர் தேவை தோராயமாக 10 லிட்டர் என கொண்டால் 15 குடும்பத்திற்கான தண்ணீர் விரயமாகிக் கொண்டிருந்தது.
என்னால் முடிந்த அளவிற்கு, இதனை எனது நண்பர்களிடம் மட்டும் தெரியபடுத்தினேன். அவர்களும் வருத்தப்பட்டார்கள். இது சம்பந்தமாக வேறு ஏதாவது செய்திருக்கலாமோ என இப்போது தோன்றுகிறது. தண்ணீரின் அவசியம் இன்னும் எனக்கு (நமக்கு) சரியாக புரியவில்லையோ என தோன்றுகிறது. அதனால்தான் இந்த அலட்சியம்.
ஏதாவது செய்ய வேண்டும். அதற்கு முதலில் தைரியம் வேண்டும்!

கருத்துகள் இல்லை: