16 ஜூன் 2010

மலரும் மோகப் பூக்கள்

மலரும் மோகப் பூக்கள்
உன்னைக் கண்டு
என் கண்களில் மோகப்
பூக்கள் பூக்கும்.
உன் உதடுகளில்
மோகனப் புன்னகை மலரும்.
உச்சி முதல் பாதம் வரை
உள்ளபடியே உன்னை
உள்வாங்கிக் கொள்வேன்.
என் கண்களின்
பயணத்தில்
உன் உடல் சிலிர்க்கும்.
உன் உதட்டுப் புன்னகை
உதிரத் தொடங்கும்.
அதை நான்
என் இதழ்களில் ஏந்துவேன்.
வேறெந்த தித்திப்பும்
என் புத்திக்கு எட்டாது.
உனக்கும்.
இரு சோடி கால்கள்
தரையில் அலையும்
இரு சோடி கைகள்
சுவரில் அலையும்.
விரல்கள் விரைந்து அலைந்து
விளக்கை விலக்கும்.
இருளில்
உன் முகம் மூடியிருக்கும்
கரங்கள் பிரிக்கின்றேன்.
என் கண்கள் கூசுகின்றன.
நீ இதழ் பிரித்து சிரிக்கின்றாய்.
நான் என் கண்கள் மூடி
உன் இதழ்கள் மறைக்கின்றேன்.
இரண்டே நொடியில்
இரு சோடி இதழ்கள் வழியே
இதயம் இடம் மாறுகிறது.
அனைத்துக்கும் நடுவே
அணைப்பும் அரங்கேறுகிறது.
உடைகள் கசங்கி
உடல் பிதுங்கி
உதறி பிரியும்போது
ஏதோவொரு உன்னதம்.
இரு உடல்களும்
உடைகள் துறக்கின்றன.
கதவுகள் திறக்கின்றன.
உடல் பிசைந்து
இறுகத் தழுவி
இதயம் நொறுங்க இயங்கி
இவ்வுலகைக் கடந்து....
இரண்டாம் முறை
உடல் பிரிந்து
போர்வைக்குள் உடல் மறைத்து
உள்ளங்களை உடைத்து
வார்த்தைகளை உதிர்க்கின்றோம்.
உனக்குப் பேச்சும்
எனக்கு செயல்களும் நிறைய
போர்வைக்குள் சில நேரம்
என் கரங்கள்
மலைகள் மூடுகின்றன
பள்ளம் மறைக்கின்றன.
உன் வெட்கப் புன்னகை...
காதல் பார்வை...
என்னை கிறங்கச் செய்கிறது.
இருவரும் மல்லார்ந்து பார்த்தால்
காற்றாடி சுழன்று கொண்டிருக்கிறது.
சுழற்சி தொடங்கிய
இடத்திலேயே முடிகிறது
முடிந்த இடத்திலேயே தொடங்குகிறது.
மீண்டும் மீண்டும்....


2 கருத்துகள்:

Piku சொன்னது…

மீண்டும் மீண்டும்..
படிக்கவும் தூண்டுகிறது!!!!

theerppavan சொன்னது…

மீண்டும்... மீண்டும்....☺☺