நேத்து சாயங்காலம் வீட்ல இருந்து கோவில்பட்டி போகும் போது (முகிலன பாட்டு கிளாஸ்ல விட போனேன்) பை பாஸ் பால எறக்கத்துல, போலிஸ்காரங்க கொஞ்ச பேரு நின்னு போற வர்ற வண்டிகள நிப்பாட்டி லைசன்ஸ், மத்த டாகுமென்ட்ஸ் எல்லாம் இருக்குதான்னு செக் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அதுல ஒரு வண்டிய நிப்பாட்டி வழக்கமான விசாரணைகள் நடத்த ஆரம்பிச்சாங்க. அந்த வண்டிக்கு சொந்தகாரர், அந்த ஏரியா கிராம பஞ்சாயத்து தலைவர். போலீஸ்காரங்கல எகிற ஆரம்பிச்சார் பாருங்க... நான் யாருன்னு தெரியுமா...ஆள் தெரியாம வண்டிய நிப்பாட்டிடிங்க...என்கிட்டயே லைசன்ஸ் கேக்குறிங்களா...நான் ஒரு கட்சிக்காரன் (ஆளுங்கட்சி) என்னையே நிப்பாட்டுறிங்கலான்னு ஒரே சத்தம் போட்டார். அங்க டூட்டில இருந்தது, அந்த வண்டிய நிப்பாட்டினது ஒரு லேடி போலிஸ். அவுங்களும் விடல... நீங்க யாரு என்னனு பாத்து வண்டிய நிப்பாட்டல. எல்லா வண்டிய நிப்பாட்டுன மாதிரிதான் உங்க வண்டியையும் நிப்பாட்டினேன். ஒரு டாக்குமெண்டும் இல்லாம என்னென்னமோ பேசுறிங்க...அப்படி இப்படின்னு இவுங்களும் வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாங்க.
உண்மையிலயே, அந்த லேடி போலிஸ் ரொம்ப ஸ்ட்ரிக்டாதான் இருந்தாங்க. ஆனா அந்த பஞ்சாயத்து தலைவர் (கட்சிகாரர்)தான் அவரோட பவர ரொம்பவே மிஸ் யூஸ் பண்ண ஆரம்பிச்சாரு.
ஒரு விசயத்த நல்லா கவனிச்சு பாத்தோம்னா ஒரு நெடு நாளைய உண்மை இங்க புரியும். என்னானா, வேல செய்யற அதிகரிங்கள வேல செய்ய விடாம தடுக்குறது... இந்த மாதிரி அரசியல் வாதிகள்தான். என்ன செஞ்சு இதையெல்லாம் சரி பண்ணுறதுன்னு தெரியல.
ஒரு பக்கம் பயமா இருக்கு. இன்னொரு பக்கம் அவுங்கள அடிக்கனும்னு ஆத்திரமாவும் இருக்கு. இந்த மாதிரியான விசயங்களுக்கு ஒரு நல்லா தீர்ப்பு கெடச்சா எல்லாருக்கும் சந்தோசம்தான். பாப்போம், என்னைக்காவது ஒரு நாள் விடியாமலா போயிரும்...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக