22 ஜூன் 2010

உனக்கு...?

முன் சென்ற உன்னை
பின் வளைத்து நான் தந்த
முத்தத் தருணங்கள்...
அதில்
நீ காட்டிய
கோபச் சிரிப்புகள்...
என் கவனம் ஈர்க்க
எனக்காக மட்டும்
வெளியே தலை காட்டிய
உன் உள்ளாடைகள்...
என்னைத் திரும்பிப் பார்க்கச்
செய்ய
இசையாக நடந்த
உன் கொலுசுக் கால்கள்...
வெட்கமாய்
நீ உதிர்த்த
ச்சீ ... போடா... க்கள் ...
காதலை காதலுடன்
பேசிய
உன் கண்கள்...
அத்துனையும்
ஈரம் காயாமல்
இன்னும் என்னுள்.
நீ...
உனக்கு...?

3 கருத்துகள்:

Piku சொன்னது…

என் கவனம் ஈர்க்க
எனக்காக மட்டும்
வெளியே தலை காட்டிய
உன் உள்ளாடைகள்...
"வார்த்தை உபயோகம் அருமை சார்"

theerppavan சொன்னது…

காதல்....

theerppavan சொன்னது…

காதல்....