மையத்தில் அமர்ந்திருந்தேன்.
மதிஎங்கும் அலைகழிப்புகள்.
இரு புறமும் என்னை அமர்த்திப் பார்த்தேன்.
இருபுறமும் மாறி மாறி
தங்களை நிரூபித்தன.
அகமும் புறமும்
கருப்பும் வெள்ளையுமாகவே இயங்கின.
வளத்தின் மீதான அலட்சியம்
சில நிகழ்வுகளால்
அதன் மேல் பயத்தைத் தந்தது.
சிந்தை சிதறி
எதுவும் சிறை படவில்லை.
ஆனாலும்
என் மனம் அரற்றிக் கொண்டேஇருந்தது...
நான் கடவுள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக