முயன்றுதான் பார்ப்போமே...
- ஆள் இல்லாத இடங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் மின்சார உபகரணங்களை (பேன், லைட்) அணைத்துவிடுவோம்.
- பயன்பாடு இல்லாமல் தண்ணீர் வீணாவதை முழுவதுமாகத் தவிர்ப்போம்.
- குறைந்தபட்சம் வீட்டிற்கு ஒரு மரக்கன்று ஒவ்வொரு வருடமும் நட்டு வளர்ப்போம்.
- நடந்து செல்ல முடிகின்ற இடங்களுக்கு நடந்தே செல்வோம் - பெட்ரோல், டீசல், கேஸ் போன்ற எரிபொருள்களை சிக்கனமாகப் பயன்படுத்துவோம்.
- சமையல் எரிபொருள்களை சிக்கனமாகப் பயன்படுத்துவோம்.
- பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் காகிதங்கள், பிளாஸ்டிக் தம்ளர்கள் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்ப்போம்.
- பொது இடங்களில் எச்சில் துப்புவதை, குப்பைகள் போடுவதை நிறுத்துவோம்.
- சுத்தமாக இல்லாத பொது கழிப்பிடங்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்போம் - அதிகாரிகளிடம் தெரிவிப்போம்.
- வயதில் மூத்தவர்களை எல்லா சமயங்களிலும் மரியாதையாக பேசுவோம், மரியாதையாக நடத்துவோம்.
- வயதில் சிறியவர்களுக்கு நல்லா விசயங்களை மட்டும் சொல்லிக் கொடுப்போம். அவர்களிடம் அன்பாக அணுகுவோம்.
- பெரியோரை மதிப்போம், சிறியோரை அன்பாய் அணைப்போம், இயற்கையை பாதுகாப்போம், மனித நேயம் வளர்ப்போம். நல்லா சமுதாயம் படைப்போம். வலிமையான நாட்டை உருவாக்குவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக