ஒருவரைக் குறிப்பிட்டு அழைக்கப் பயன்படும் பெயரில் என்ன இருக்கிறது? பெயரின் பொருள் பலனளிக்குமா அல்லது பெயரை உருவாக்கும் எழுத்துகள் பலனளிக்குமா?
இன்று, மிகப்பிரமாண்டமான தொலை தொடர்பு சாதனமான தொலைகாட்சியில் கூட பெயருக்கான பலனை ஆராய்ந்து, ஏற்கனவே இருக்கும் பெயரை மாற்றி அமைத்து நமது வாழ்வை வளமாக்க, ஏகப்பட்ட வல்லுனர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள். ஆனால் அங்கு, அவர்கள் வாழ்க்கை மட்டுமே வளமாகிறது. நமது நேரம் வீணாகிறது. அனைத்துப் புத்தகக் கடைகளிலும் நியுமராலஜி சம்பத்தப்பட்ட புத்தகங்கள் ஒன்றாயினும் கிடைக்கும் நிலை இன்று உள்ளது.
நியுமராலஜி. இந்த வார்த்தையில் இருப்பது என்ன? என்னைப் பொறுத்த வரை இதற்கு ஏமாற்று வேலை என்றே பொருள் கொள்ளலாம்.
காரணங்கள்:
(1) ஒருவரின் நடத்தையாலும் நற்செயல்களாலும் அவரின் பெயருக்கு பெருமையா அல்லது அவரின் பெயரால் அவருக்குப் பெருமையா?
(2) பிறந்தவுடன் ஒருவருக்கு பெயர் பலன், ராசி பலன் பார்த்து அவரைக் கேட்ட சவகாசங்களுடன் வளர்த்தோமானால், அவரை, அவருக்கு இட்டப் பெயர் உயர்த்துமா?
(3) மேலும், நியுமராலஜி என்பது ஆங்கில எழுத்துகள் 26க்கு மட்டுமே, 1,2... என்று எண் மதிப்புகளை இட்டு அவற்றை கூட்டி பலன் சொல்லும்.
இதில், நமது அழகிய தமிழ் பெயரை ஆங்கிலத்தில் எழுதி அதற்கு பலன் காண வேண்டும். என் இந்த நிலை? ஆங்கிலத்தில் 26 எழுத்துகளுக்கு எண் மதிப்புகளை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது சுலபம். அதே சமயத்தில், தமிழின் 247 எழுத்துகளுக்கும் எண் மதிப்புகளை ஞாபகத்தில் வைப்பது என்பது சற்றே கடினமான செயல். எனாவேதான், தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வதற்காக நியுமராலஜிச்டுகள் அடுத்தவரின் பெயரில் விளையாடுகின்றனர்.
எனவே, நமது பெயர், நமக்கு அழகு சேர்க்கும், பெருமை சேர்க்கும் என்பதை மறந்து நமது நடத்தையால் நமது நற்செயல்களால் நமது அழகுப் பெயருக்குப் பெருமை சேர்க்கலாம் என்பதை நினைவில் கொள்வோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக