வாங்கடா வாங்க
இது எங்கள் கல்லூரி (அருள்மிகு கலசலிங்கம் பொறியியல் கல்லூரி கிருஷ்ணன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) நண்பர்களின் வருட சந்திப்பு நிகழ்ச்சி. ஒவ்வொரு வருடமும் மே மாதம் நண்பர்கள் அனைவரும் ஏதாவது ஒரு ஊரில் சந்தித்து கொள்வது வழக்கம். இந்த நிகழ்வை, நாங்கள் எங்கள் கல்லூரி இறுதிஆண்டு முதல் இப்பொழுது வரை ஒவ்வொரு வருடமும் ஏற்பாடு செய்து வருகிறோம். முதல் நிகழ்வு 1998 ல் கல்லூரியில் நடந்தது. அதனைத் தொடர்ந்து மதுரையில் இரண்டு வருடங்கள், பெங்களுருவில் இரண்டு வருடங்கள், கொடைக்கானலில் ஒரு வருடம், கோயம்புத்தூர் ல் ஒரு வருடம், சென்னை ல் ஒரு வருடம், மற்றும் இந்த வருடம் (2010) மூன்றாவது முறையாக மீண்டும் பெங்களுருவில் நடைபெற்றது. இந்த ஒன்பது தடவையும் குறைந்த பட்சம் 15 பேர் அதிகபட்சம் 25 பேர் கலந்து கொண்டிருகின்றனர். இவ்வருடத்தோடு நாங்கள் கல்லூரி படிப்பை முடித்து 12 வருடங்கள் முடிந்துவிட்ட நிலையில் நாங்கள் ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு ஊரில் திட்டமிட்டு சந்தித்தும் (ஒன்பது முறை) மீதம் உள்ள மூன்று வருடங்கள் ஏதாவது நண்பர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து சந்தித்து கொண்டுள்ளோம். அவ்வாறாக, மகாராஜன், சுரேஷ் (பொள்ளாச்சி) மற்றும் ராஜன் கல்யாணத்தில் சந்தித்து கொண்டோம். இவ்வாறு திருமணத்தில் சந்தித்து கொள்வது குறைந்த பட்சம் மூன்றில் இருந்து அதிகபட்சம் எட்டு பேர் வரை அமையும்.
இங்கு நான் நண்பர்கள் என்று கூறுவது, எங்கள் கல்லூரியின் ஒரே வகுப்பில் உள்ள நண்பர்களையோ அல்லது ஒரே வருடத்தில் உள்ள நண்பர்களையோ மட்டும் குறிக்காது. இந்த நண்பர்கள் குழுவில், அனைத்து துறையை சார்ந்த நண்பர்களும், எங்களுக்கு அடுத்த வருடம் படித்து முடித்த நண்பர்களும் அடங்குவர்.
இது விளையாட்டாக ஆரம்பித்த ஒன்றுதான். வேறு சிறப்பு நோக்கம் எதுவும் இன்றி, வருடா வருடம் சந்தித்து கொள்வது என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான். ஆனால் அடுத்த அடுத்த வருடங்களில் இவ்வாறு சந்தித்து கொள்வது என்பது வேறு சில நல்ல நோக்கங்களை உருவாக்கி தந்தது. மிக முக்கியமாக, ஆரம்பத்தில் வேலை இல்லாமல் இருந்த நண்பர்களுக்கு சிறு வேலைகள் சில கிடைப்பதற்கு உதவியது. அலுவலக மற்றும் சொந்த விசயங்களை பகிர்ந்து கொள்ள உதவியது. இன்று வரை உதவி வருகிறது.
இதன் வாயிலாக ஒரு பலமான நட்பு பாலம் கட்டப்பட்டுவருகிறது என்றே நான் நம்புகிறேன்.
எங்களின் இந்த சந்திப்பை பற்றி நான் வேலை பார்க்கும் இடத்திலும், உறவினர்களிடமும் மற்றும் வேறு இடங்களிலும் சொல்லும் போது "12 வருடங்களாக தொடர்ந்து சந்தித்து வருகிறீர்களா" என்று ஆச்சரியப்பட்டுகிறார்கள். நான் அறிந்து, வேறு எந்த நண்பர்கள் குழுவும், இவ்வாறு வருடா வருடம் சந்தித்து கொள்வது இல்லை என்றே கூறுவேன். அவ்வாறு எந்த குழுவாவது இருப்பின், எங்களுக்கு தெரியபடுத்துங்கள். நாங்களும் அவர்களை தொடர்பு கொண்டு இவ்வாறான சந்திப்பின் நோக்கங்களை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்கிறோம்.
2 கருத்துகள்:
Very Good Shankar! PP
GREAT JOB.
with luv & Affection
P.MUTHUKUMAR
கருத்துரையிடுக