14 ஆகஸ்ட் 2015

இக்கரைக்கு அக்கரை பச்சை

ரொம்ப உண்மை சரவணா!!!! 
           ஆனால், கஜினியின் விசயத்தில், அவனின் போராடும் குணமே போற்றப்படுகிறது. வலியவனை வென்ற எளியவனின், விடா முயற்சியில் பெற்ற, வெற்றியே பேசப்படுகிறது. 
           அலெக்ஸ்சாண்டர் மாவீரன் தான். புருசோத்தமனும் அலெக்ஸ்சாண்டரை  விட எவ்விதத்திலும் குறைவில்லாத மாவீரன்தான். ஆனால், அலெக்ஸ்சாண்டரின் பரவலான பார் வெற்றியையே உலகம் உற்று கவனிக்கிறது. புருசோத்தமன், நம் மண்ணின், ஈடு இணையற்ற மாவீரன் என்பதில் சந்தேகமில்லை. புருசொத்தமனைப் பொருத்தவரை, அப்போர், சரித்திரத்துடன் மோதிய ஒரு சம்பவம். அச்சம்பவம், அலெக்ஸ்சான்டரின் சரித்திரத்தில் இடம்பெற்றது. நம் மனதில் போரஸ்  நிற்கிறான்.
           வ.உ.சி., குமரன் போன்ற இன்னும் பல இந்திய போராளிகள் சாத்வீக போராளிகள். சேகுவேரா போன்ற போராளிகள் ஆயுதம் தாங்கி போராட்டத்தை முன்னெடுத்தவர்கள். வென்றவர்கள். மனித இயல்பு, எப்பொழுதுமே, பரபரப்பையே விரும்புகிறது, வேகத்தையே விழைகிறது. இன்னும், நம் மண்ணின் போராளிகள் (இதில் அனைத்து போராளிகளும், கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் மற்றும் இன்னும் பல போராளிகளும்) பெரும்பாலும் ஜாதிகளால் அடையாள படுத்தப்படுகிறார்கள். பகத்சிங் போன்றோர்கள் இதில் விதிவிலக்கு.
           நாம், ஐயா முத்து ராமலிங்கத்தையும் மறக்கவில்லை, பெரியாரையும் மறக்க வில்லை. இருவரும் வெவ்வேறு களங்களில் வெவ்வேறு (சிறந்த) கொள்கைகளுக்காக வெவ்வேறு மக்கள் குழுக்களுக்காக போராடியவர்கள். மநு சாஸ்திரத்தின் படி நிலைகளை தகர்க்க முன்நின்றவர்கள். அவர்கள் என்றும் நம் மனதில் வாழ்கிறார்கள். ஆனால் என்ன..... ஐயா முத்து ராமலிங்கத்தை, ஜாதியால் குறுக்கியதுதான் பெருஞ்சோகம். அவர்  ஜாதிக்குள் அடைபடமுடியாதவர் என்பது என் கருத்து.
          உயர்ந்து நிற்பது என்றுமே ஆச்சர்யம் தான். இதில் மனிதனும், மனிதனால் உருவாக்கப் பட்டதும் விதி விலக்கல்ல. ஈபிள் டவரும் விதிவிலக்கல்ல. மேலும், தஞ்சை பெரிய கோவில் வெளிநாட்டவரால் புகழப் படுகிற ஒரு அதிசயமாகவே இன்றும் உள்ளது. 
                    மொத்தத்தில், சுருக்கமாக, இக்கரைக்கு அக்கரை  பச்சை. 

10 ஆகஸ்ட் 2015

நீ இருப்பதால் நானும் இருக்கிறேன்!!!

உன் புன்னகையில்
நான் பூக்கிறேன்.
உன் உறக்கத்தில்
நான் உயிர் பிரிகிறேன்.
உன் கொட்டாவியில்
நான் இமை பிரிக்கிறேன்.
உன் பார்வையில்
நான் களவாடப் படுகிறேன்.
உன் பிடிவாதத்தில்
நான் தளர்ந்துவிடுகிறேன்.
உன் வேலைகளில்
நான் இயங்குகிறேன்.
உன் நடையில்
நான் நிலைகுலைகிறேன்.
உன் பாடலில்
நான் பாடுகிறேன்.
உன் "போங்க" க்களில்
நான் இருந்தே விடுகிறேன்.

அட என்னமோ போமா.........

நீ இருப்பதால்
நானும் இருக்கிறேன்.

# செல்லம்மா!!!





02 பிப்ரவரி 2015

I U V nd THEY

I'm nt u...u're nt me...
I'm nt n u...u're nt n me...
I'm nt fr u...u're nt fr me...
But....
They say... v r...

Whom fr v meet....
Whom fr v unite....
Whom fr v talk....
If none for....
Whom fr v part.....

I'm nt right to u.....
U r nt right to me....
But...
Still v r....

I don't see u....
U don't see me....
But...
Still, V think....

I say NO...
U too say NO...
But...
They think...V say YES...


I know... they watch...
U know...they watch...
But...
They think... v don't...


I hide...
U hide...
But...
They think... V expose...


I know tht u know...
U know tht I know...
But...
They thnk v don't know...


I stare at u...
U stare at me...
But...
They think...v r nt...


I'm stone hearted...
U r also stone hearted...
V r friends...
But, they feel v r not...


I'm imprtnt to u.
U r imprtnt to me.
But...
They think... v don't feel...


I say, then....
U say, then....
Then, it continues...


I'm yet another to u
U r yet another to me
But....
they feel....
V r fr each other....


I know, u do
U know, I do
But,
They feel, v don't.
.
.
.
.
.
Of course, v prove it...


I know, u do
U know, I do
But,
They feel, v don't.
.
.
.
.
.
Of course, v prove it...


I'm ur dear...
U r my dear...
But,
They think...
V r not.


I know u watch
U know I watch
But..
They don't know,
How v hide.


I thought I'm k
They thought u feel I'm k
But, aftr all v r human beings...


I know... U leave
U know...I leave
But,
They think.... V won't.


I expect... u don't do.
U expect... I dint do.
But,
They feel...
V expect... V do...


I don't lke Wht u lke..
U don't lke Wht I lke..
But,
They feel v both lke same.


I thought, v happy...
U thnk, I happy....
But,
They thnk, v play....


U thought.... u r invited
I thought.... u r insulted
But, 
they feel.... v r revenged


I knw....u r nt reading us
u knw....I'm writing on us
Bt...
they don't knw....
v knw both.....


I know u r not so stable, as i believe
u know i'm not so mad, as u believe
but, 
they thnk, v r.


u bhve as u wish....
i bhve as i wish...
they thnk, v behve as v wish....


I'm not......
u r not......
But, they thnk... v r....


I knw wht u say...
U knw wht i ask...
Bt, they thnk....
v don't....



they send...
U stop....
I receive....

But, v hide....

U r mine..
I'm nt urs..
Bt, they thnk..
V both r...

I knw, U won't say...
U knw, I won't ask...
Bt, they don't knw..
V'll knw...



19 ஜனவரி 2014

"சந்தானமும் சாவு மோளமும்" - வீரம்.



















"வீரம்" படத்துல, சந்தானம் சொல்லுற ஒரு டையலாக் "சம்சாரத்தோட ஜல்சா பண்ணவேண்டிய நேரத்துல, சாவு மோளம் அடிக்கிரவன எல்லாம் கூப்டு வச்சுகினு சாங்கு பாடிகினு இருக்குறாரு". இதுல, சந்தானம் சொல்லுற "சாவு மோளம்" ங்கறது "தப்பு" னு  சொல்லுற "பறை" யதான?

"சாவு மோளம் அடிக்கிறவன்"  ங்கறது "பறை அடிக்கிறவங்க" தான? "பறை" னா  என்னான்னு தெரியாம இப்படி ஒரு டையலாக்க  இப்படி ஒரு லீடிங் காமெடியன் சொல்லுறத ஒத்துக்குரவே  முடியல. இது போக, பறை வாசிக்கிரவுங்கள சாவு மோளம் அடிக்கிரவுங்க னு  சொல்லுறதையும் ஏத்துகிரவே  முடியல. ஒருவேள, அவரு, இதுல என்னங்க தப்பு இருக்குனு கேட்டாலும்......, சாவு மோளம் அடிக்கிரவுங்கள  கூப்ட்டுவச்சு பேசிகிட்டு இருந்தா என்ன தப்பு? "சண்டாளன்" ங்கற  வார்த்தைய சொல்லி ஒருத்தன திட்ட கூடாதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் போது, சந்தானம் இப்படி சொல்லுறதுக்கு முன்னாடி நல்லா  யோசிச்சு சொல்லணும். சினிமாங்குரது, எல்லாரும் ஒரு ரெண்டரை மணி நேரம் சந்தோசமா இருக்குறதுக்கு தான. அத பாத்துட்டு,  யாரவது ஒருத்தரு மனசு வருத்தப் பட்டாருணா அது நல்லா இருக்குமா சந்தானம் சார்? கொஞ்சம் யோசிச்சு ஒங்க வார்த்தைகள உதிருங்க சந்தானம் சார். ஒருத்தரு சிரிக்கனுங்க்ரதுக்காக, இன்னொருத்தன அழ வைக்காதிங்க திரு.சந்தானம் சார்.
   

24 நவம்பர் 2013

நுரை படுத்தும் பாடு

 
"நுரை" ங்கற  ஒரு விசயம், எப்படிலாம் சந்தோஷ படுத்துது பாருங்களேன். கொஞ்சம் ஆழமா யோசிச்சு பாத்தோம்னா, நுரை, நம்மள சின்ன வயசுல இருந்தே குதூகலப் படுத்திக்கிட்டே தான் இருக்குது. திருவிழாவுக்கு போகும்  போது கூட, நுரையாய் இருக்கும் சோப்பு தண்ணிய வாங்கி முட்டை விடுறதுல நமக்கு ஒரு ஆர்வம் இருக்கத்தானே செஞ்சுச்சு. பால் பொங்கி நுரையா வரும் போது  ஒரு சந்தோசம்..... நல்லா ஆத்துன மோர் ல மேல நுரை இருக்கும்... அதை குடிக்கும் பொது ஒரு மகிழ்ச்சி..... சின்ன குழந்தைகளுக்கு, பால், காபி. டீ இல்லேன்னா வேற ஏதாவது பானங்கள் குடுக்கும் போது நுரையோட குடுதோம்னா ஒரு குதூகலத்தோட அத குடுச்சுட்டு அதுனால ஓதட்டு மேல வர்ற மீசைய நம்மகிட்ட காட்டி பயமுருத்துவாங்கள்ள......அது ஒரு ஆனந்தம். மகிழ்ச்சியான எல்லா நேரங்கள்ளையும் நுரை ஒரு அங்கமாவே இருக்கு பாருங்களேன். பிறந்த நாள் விழாக்கல்ல இப்போ நுரை அடிச்சு விளையாட ஆரம்பிச்சுட்டோம்ல?  குளிர்பானங்கள் நுரையோடு திறக்கபடுவதைத் தானே நாம் எதிர்பார்க்கிறோம். வெற்றியையும், சந்தோசத்தையும் பகிர்ந்துகொள்ளும் எல்லா தருணங்களிலும் நுரை பொங்கும் பீர் பாட்டில் களுக்குதானே போட்டா போட்டி நடக்குது.

     
             சோப்பு போடும் போது நுரை வரலைன்னு வச்சுகோங்க, குளிச்ச திருப்தியே வராதுல. தலைல ஷாம்பூ போடும் போது நுரை வரலைன்னு வச்சுகோங்க, ஒரு நிம்மதியே வராதுல. முகச் சவரம் செய்யும் போதும் நுரை தேவப் படுதுல. பல்லு வெலக்கும்போது வாயில நுரை வரணும்ல (இது அந்த நுரை இல்லைங்க. பேஸ்ட்டு  நுரை.).
             ஆக, நுரை ங்கற  ஒரு விசயம் நம்ம வாழ்க்கையில மகிழ்ச்சிக்கான ஒரு தூண்டுகோலாவே ஆகிருச்சு பாருங்களேன். 
              இந்த ஒரு விசயத்ததாங்க, எல்லா தயாரிப்பாளர்களும் (சோப்பு, ஷாம்பூ  கிரீம், பானங்கள் மற்றும் இதர பொருள்கள் தயாரிக்கும்) பயன்படுத்திகிட்டாங்க. ரசாயனப் பொருள்கள பயன்படுத்தி தயாரிக்கிற எல்லாத்தையும் நம்ம கிட்ட பயன்படுத்த சொல்லி விளம்பரப்  படுத்துறாங்க. நாமளும், தலைக்கு சிகைக்காயயையும் , உடம்புக்கு மூலிகைப் பொடியையும், பல்லுக்கு சூரனத்தையும் விட்டுட்டு, சோப்பையும், ஷாம்பூவையும், டூத் பேஸ்ட்டையும் தூக்கிகிட்டு ஆரோக்கியத்த அம்போன்னு விட்டுட்டு அலையுறோம். நமக்கு என்னமோ நம்ம கவுரவம், நம்ம பெருமை தான முக்கியம்......
             ஒரு பழமொழி ஞாபகத்துக்கு வருதுங்க : பெருமைக்கு, ஒருத்தன் என்னமோ பண்ணுனானாம்.....
                   .இதெல்லாம் அழிவுக்குத்தான்.

16 நவம்பர் 2013

டண்டணக்கா.......ஹே.......டணக்குணக்கா.............

மூத்தோர்களை/வயதானவர்களை/வயோதிகர்களை எடுத்தெறிந்து பேசும்/ மரியாதை குறைவாக நடத்தும் எந்த சமூகமும்/சமுதாயமும்/யாரும் வாழ்வில் முன்னேற்றத்தை காண்பது அரிதே.... அவர்களின்  சந்தோசத்தில், அப்படி என்ன நமக்கு கவலை?  அவர்கள் சந்தோசமாய் இருந்தால் நாம் எதற்கு கவலை கொள்ள வேண்டும்? உடனே, நமக்கு மற்றுமொரு கேள்வி எழலாம்: நம்மை கவலையில் ஆழ்த்தும் அளவுக்கு அவர்களின் சந்தோச நடவடிக்கைகள் இருந்தால், நாம் என்னதான் செய்வது....? அப்படி ஒருவர் நடந்து கொண்டால், அவரை வயதானவராகவோ, முதியவராகவோ, வயோதிகராகவோ கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர்கள், மனிதனாக மட்டும் கருதுங்கள். மனிதனை மதியுங்கள்.
          சக மனிதனின் / மனுசியின் உணர்வுகளை புரிந்து கொள்ள, குறைந்த பட்சம் முயற்சியாவது எடுப்போமே.
            நண்பர்களே, நண்பிகளே, தோழர்களே, தோழிகளே, உறவுகளே... முன் எப்போதோ முகநூலில் படித்த ஒரு பதிவுதான்  ஞாபகத்திற்கு வருகிறது.
                   "மனதில் பட்டதையெல்லாம் பேசி (செய்து) விடாதிர்கள். சிலர் புரிந்து கொள்வார்கள், சிலர் பிரிந்து செல்வார்கள்." அவ்வாறு பிரிந்து செல்பவர்கள், நம் அன்புக்கு உரியவர்களாய் இருந்தால்......?
                      தோழர்களே, தோழிகளே, உறவுகளே ஆணவம் அகற்றி, அகங்காரம் அழித்து, வெறியை தணித்து அன்பு செய்ய கற்றுக் கொள்வோம்.
         ரொம்ப சிம்பிளா சொன்னா......... "இன்னைக்கு செத்தா, இன்னைக்கே பாலு...." அப்பால எதுக்குப்பா இந்த ஆணவம், அகங்காரம், அகந்தையெல்லாம்.......என்னமோ போங்கப்பா.... பூமாதேவி சிரிக்கபோரா எல்லாரும் உள்ள போக போறோம்..........டண்டணக்கா.......ஹே.......டணக்குணக்கா.............




16 அக்டோபர் 2013

கோவில்பட்டியில் மீண்டும் கோடை...

கோவில்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள்  " ஒரு நிரந்தர கோடையை சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது" . கடந்த சில வருடங்களாகவே இப்பகுதியில் தேவையான அளவு மழை பெய்யவில்லை. நிலத்தடி நீர் மட்டம் மிக அதிகமான அளவுகுறைந்து கடுமையான தண்ணீர் பஞ்சம் வந்துவிடுமோ என்ற  ஒருவிதமான அச்சம் எங்கள் அனைவரின் மனதிலும் வந்துவிட்டது. இருக்கும் தண்ணீரையும் எப்படி சிக்கனமாகப் பயன்படுத்துவது என்ற விழிப்புணர்வும் இல்லை.
           இன்னும் ஓரிரு நாள்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் "வட கிழக்குப் பருவ மழை" யும் பொய்த்துவிடும் பட்சத்தில் நிச்சயமான ஒரு பஞ்சத்தை நாங்கள் சந்திப்போம் என்பது உறுதி.
            எங்களோடு சேர்ந்து நீங்களும் பிரார்த்தியுங்கள்... மழை க்காகவும், தண்ணீர் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு க்காகவும்.
                                     வறண்ட மனதோடு....மழையை எதிர்நோக்கி........