"வீரம்" படத்துல, சந்தானம் சொல்லுற ஒரு டையலாக் "சம்சாரத்தோட ஜல்சா பண்ணவேண்டிய நேரத்துல, சாவு மோளம் அடிக்கிரவன எல்லாம் கூப்டு வச்சுகினு சாங்கு பாடிகினு இருக்குறாரு". இதுல, சந்தானம் சொல்லுற "சாவு மோளம்" ங்கறது "தப்பு" னு சொல்லுற "பறை" யதான?
"சாவு மோளம் அடிக்கிறவன்" ங்கறது "பறை அடிக்கிறவங்க" தான? "பறை" னா என்னான்னு தெரியாம இப்படி ஒரு டையலாக்க இப்படி ஒரு லீடிங் காமெடியன் சொல்லுறத ஒத்துக்குரவே முடியல. இது போக, பறை வாசிக்கிரவுங்கள சாவு மோளம் அடிக்கிரவுங்க னு சொல்லுறதையும் ஏத்துகிரவே முடியல. ஒருவேள, அவரு, இதுல என்னங்க தப்பு இருக்குனு கேட்டாலும்......, சாவு மோளம் அடிக்கிரவுங்கள கூப்ட்டுவச்சு பேசிகிட்டு இருந்தா என்ன தப்பு? "சண்டாளன்" ங்கற வார்த்தைய சொல்லி ஒருத்தன திட்ட கூடாதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் போது, சந்தானம் இப்படி சொல்லுறதுக்கு முன்னாடி நல்லா யோசிச்சு சொல்லணும். சினிமாங்குரது, எல்லாரும் ஒரு ரெண்டரை மணி நேரம் சந்தோசமா இருக்குறதுக்கு தான. அத பாத்துட்டு, யாரவது ஒருத்தரு மனசு வருத்தப் பட்டாருணா அது நல்லா இருக்குமா சந்தானம் சார்? கொஞ்சம் யோசிச்சு ஒங்க வார்த்தைகள உதிருங்க சந்தானம் சார். ஒருத்தரு சிரிக்கனுங்க்ரதுக்காக, இன்னொருத்தன அழ வைக்காதிங்க திரு.சந்தானம் சார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக