ரொம்ப உண்மை சரவணா!!!!
ஆனால், கஜினியின் விசயத்தில், அவனின் போராடும் குணமே போற்றப்படுகிறது. வலியவனை வென்ற எளியவனின், விடா முயற்சியில் பெற்ற, வெற்றியே பேசப்படுகிறது.
அலெக்ஸ்சாண்டர் மாவீரன் தான். புருசோத்தமனும் அலெக்ஸ்சாண்டரை விட எவ்விதத்திலும் குறைவில்லாத மாவீரன்தான். ஆனால், அலெக்ஸ்சாண்டரின் பரவலான பார் வெற்றியையே உலகம் உற்று கவனிக்கிறது. புருசோத்தமன், நம் மண்ணின், ஈடு இணையற்ற மாவீரன் என்பதில் சந்தேகமில்லை. புருசொத்தமனைப் பொருத்தவரை, அப்போர், சரித்திரத்துடன் மோதிய ஒரு சம்பவம். அச்சம்பவம், அலெக்ஸ்சான்டரின் சரித்திரத்தில் இடம்பெற்றது. நம் மனதில் போரஸ் நிற்கிறான்.
வ.உ.சி., குமரன் போன்ற இன்னும் பல இந்திய போராளிகள் சாத்வீக போராளிகள். சேகுவேரா போன்ற போராளிகள் ஆயுதம் தாங்கி போராட்டத்தை முன்னெடுத்தவர்கள். வென்றவர்கள். மனித இயல்பு, எப்பொழுதுமே, பரபரப்பையே விரும்புகிறது, வேகத்தையே விழைகிறது. இன்னும், நம் மண்ணின் போராளிகள் (இதில் அனைத்து போராளிகளும், கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் மற்றும் இன்னும் பல போராளிகளும்) பெரும்பாலும் ஜாதிகளால் அடையாள படுத்தப்படுகிறார்கள். பகத்சிங் போன்றோர்கள் இதில் விதிவிலக்கு.
நாம், ஐயா முத்து ராமலிங்கத்தையும் மறக்கவில்லை, பெரியாரையும் மறக்க வில்லை. இருவரும் வெவ்வேறு களங்களில் வெவ்வேறு (சிறந்த) கொள்கைகளுக்காக வெவ்வேறு மக்கள் குழுக்களுக்காக போராடியவர்கள். மநு சாஸ்திரத்தின் படி நிலைகளை தகர்க்க முன்நின்றவர்கள். அவர்கள் என்றும் நம் மனதில் வாழ்கிறார்கள். ஆனால் என்ன..... ஐயா முத்து ராமலிங்கத்தை, ஜாதியால் குறுக்கியதுதான் பெருஞ்சோகம். அவர் ஜாதிக்குள் அடைபடமுடியாதவர் என்பது என் கருத்து.
உயர்ந்து நிற்பது என்றுமே ஆச்சர்யம் தான். இதில் மனிதனும், மனிதனால் உருவாக்கப் பட்டதும் விதி விலக்கல்ல. ஈபிள் டவரும் விதிவிலக்கல்ல. மேலும், தஞ்சை பெரிய கோவில் வெளிநாட்டவரால் புகழப் படுகிற ஒரு அதிசயமாகவே இன்றும் உள்ளது.
மொத்தத்தில், சுருக்கமாக, இக்கரைக்கு அக்கரை பச்சை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக