23 அக்டோபர் 2015

அறிவாளி

என்னை விட நீ குறைவாக அறிந்திருக்கிறாய் என்பதற்காக மட்டுமே நான் அறிவாளியாகப் பார்க்கப்படுவது எந்த ஊர் நியாயம் எனத் தெரியவில்லை. என்ன உலகமடா இது....!!!!????

19 அக்டோபர் 2015

மருந்து

உணவே மருந்து... உடலுக்கு.
மௌனமே மருந்து... மனசுக்கு.

14 அக்டோபர் 2015

சொல்லட்டும்....

 சொல்லட்டும்....
நாம் முட்டாள்களாய் மட்டும்  அல்ல...
கிறுக்கர்களாகவும் அறியப்படுவோம்.
பைத்தியங்களாகவும் பார்க்கப்படுவோம்.
அவர்கள் கூறட்டும்...
அவர்கள் பார்க்கட்டும்....
நாம் 
மண் பயனுற செய்து மகிழ்வோம்.
நாம்  
திக்கெட்டும் தென்றல் வீசச் செய்து திருப்திகொள்வோம்.

03 அக்டோபர் 2015

நீ விழை... நான் விரும்புகிறேன்...

நீ விழை... நான் விரும்புகிறேன்...
மழை விழைந்தாய்.
தருவித்தேன்!
நனைந்து கொண்டே
வெயில் வேண்டினாய்.
மழை துரத்தி வெயில் கொணர்ந்தேன்!
வெயில் காய்ந்தே
தென்றல் தேடினாய்.
தேகம் சிலிர்க்க
தென்றல் தந்தேன்!
தென்றல் தவிர்த்து
வேகம் வேண்டி
புயல் கேட்டாய்.
தேகம் தடுமாற
திடுமென உரு மாற்றினேன்!
மின்னல் காண
விழிகள் விழித்தாய்.
கரங்கள் உரசி மின்னல் வெட்டினேன்!
மின்னல் ஒளியில்
இடியும் இரைந்தாய்.
இமயம் பிளந்து
இடி இசைத்தேன்!
நட்சத்திரங்கள் கோர்த்து
மாலை கேட்டாய்.
விண்ணை வீழ்த்தி
உன்னை நிறைத்தேன்!
இன்னும் இன்னும்...
நிறைய நிறைய....
வேண்டும் வேண்டும்
என்றாய்.
நானும்
திகட்டத் திகட்டத்
தந்தேன்.
என்னைத் தவிர.
நீயும் விழையவில்லை.
நானும் விரும்பவில்லை!!!

25 செப்டம்பர் 2015

ஊர் கூடி மரம் வளர்ப்போம்!
ஊருக்கே மழை பெறுவோம்!!
புன்னகைப் பூக்கட்டும்!!!

மரம் வளர்க்க கரம் கோர்ப்போம்!
மழை பெற்று மனம் குளிர்வோம்!!
மனிதம் போற்றி உறவை வளர்ப்போம்!!!

07 செப்டம்பர் 2015

மதுரை

இன்று....மீண்டும் மதுரை பயணம்.....மீண்டும் ஆனந்தம்.....மீண்டும் மகிழ்ச்சி....மீண்டும் மீண்டேன்...இம்முறை இன்னும் அதிகமாக, மனதுக்கு பிடித்தமானவளுடன்...விரல்கள் கோர்த்து...கரங்கள் சேர்த்து....காதலோடு....மதுரை வீதிகளில்....பேருந்து பயணத்தில்....இது போதும் இப்போதைக்கு....இன்னும் கொஞ்ச நாளைக்குத் தாங்கும்.....

06 செப்டம்பர் 2015

 நான் தான் விளையாடுகிறேன்.
ஆனால் 
நீ ஜெயித்துக் கொண்டிருக்கிறாய்!!!