11 நவம்பர் 2015

சங்கரன் கோயிலில் ஒரு கசப்பான அனுபவம்: நான் ஏன் மதம் மாறக் கூடாது....?

                                  நேற்றைய சங்கரன் கோயில் பயணம் மிகவும் வெறுப்பைத் தருவதாகவும், வருத்தப் படச் செய்வதாகவும் அமைந்தது. கோவில் வாசலில்  இறங்கிய உடனே, இருவர் எங்களை மறித்து செருப்புகளை இவ்விடத்தில் (A1 திவ்யா பேக்கரி மற்றும் A1 திவ்யா ஸ்வீட்ஸ் க்கு நடுவில் இருக்கும் கடை) இலவசமாகப் பாதுகாத்துத் தருகிறோம் என்றும், உள்ளே காலணிகள் பாதுகாக்கும் இடம் இல்லை என்றும் கூறி, டோக்கன் வாங்கிக் கொள்ள கூறினர்.




அதற்குப் பின் தான், அவர்களின் விளையாட்டு ஆரம்பித்தது. அர்ச்சனை தட்டில் ஒரு தேங்காய் வைத்தால் 40 ரூபாய் என்றும்,  தேங்காய் வைத்தால் 80 ரூபாய் என்றும் கூறி எத்தனை தேங்காய் வைக்க வேண்டும் எனக் கேட்டார். நானும் ஒரு தேங்காய் போதும் என்றேன். அடுத்தடுத்து, பன்னீர் பாட்டில், பழம் மற்றும் இதரப் பொருள்களை வைத்து, ஒரு மாலையா இரண்டு மாலையா எனக் கேட்டார். நானும், ஒரு மாலை போதும் என்றேன். உப்பு மிளகு மற்றும் சிறிய பாம்பு தேள் தகடுகள் வேண்டுமா என்றார். நான் உப்பு மிளகு மட்டும் போதும் என்று கூறி, மொத்தம் எவ்வளவு விலை என்றேன். கணக்குப் பார்த்து 210 ரூபாய் என்றார். அதிர்ச்சியோடு 210 ரூபாய் கொடுத்துவிட்டு, உள்ளே காலணிகள்  இடம் ஒன்று கூட இல்லையா என்றேன். அவர் என்னை நிமிர்ந்து பார்த்து ஒன்றும் கூறாமல், எனக்கு மீதம் பணத்தைக் கொடுத்தார். நான் சற்று கோபமாகவே, உள்ளே வேறு ஏதாவது காலணிகள் பாதுகாக்கும் இடம் இருந்தால், உங்களிடம் கோபப் படுவேன் என்று கூறினேன். உடனே அவர், இதெல்லாம் வியாபரத்திற்காகத் தான் சார் என்றார். நான், இப்படியெல்லாம் ஏமாத்தாதிர்கள் என்று வருத்ததோடு சொன்னேன். மீண்டும் அவர், முன்னர் கூறியதையே கூறினார். நாங்கள் ஏமாற்றப் பட்டோம் என்பதையும், ஏமாந்தோம் என்பதையும் வருத்தத்தோடு நினைத்து நொந்து கொண்டு கோயிலுக்கு உள்ளே சென்றோம்.
             உள்ளே, எல்லா கோயிலிலும் இருப்பது போல, இலவச தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் (10 ரூபாய் தரிசனம்) வரிசை. கோபத்தோடும் அதற்கு மேலே வருத்தத்தோடும் இருந்ததால், இலவச தரிசன வரிசையிலேயே நின்றோம். உள்ளே, அர்ச்சனைக்கு ஐயரிடம் 210 ரூபாய் அர்ச்சனை தட்டை கொடுத்துவிட்டு காத்திருந்தோம்.




             கடவுளிடம், விளக்குப் பிடித்து மணி ஆட்டிவிட்டு  தட்டை எங்களிடம் கொடுத்துவிட்டு சைகையில் பணம் கேட்டார். 10 ரூபாய் கொடுத்தோம். அவர் இரண்டு என்று சைகையில் 20 ரூபாய் கேட்டார். வருத்தம் மேலோங்க போட்டு விட்டு வந்தோம்.
           செருப்பைக் கழட்டியத்தில் இருந்து....இலவச மற்றும் சிறப்பு தரிசன வரிசைகளை பார்த்து உள்ளே சென்று ஐயருக்கு 20 ரூபாய் போட்டு விட்டு வந்தது வரை உஎன் மனதிற்குள்ளே ஒரே ஒரு கேள்வி மட்டும் சுழன்றடித்துக் கொண்டிருந்தது: நான் ஏன் மதம் மாறிவிடக் கூடாது? நான் அறிந்து, அனைத்து இந்து கோவில்களிலும் இப்படித்தான் நடக்கிறது - சபரி  மலை, திருச்செந்தூர் போன்ற கோவில்கள் உள்பட.  கோவிலுக்கு வெளியே இருந்து உள்ளே கர்ப்ப கிரகம் வரை ஏமாந்து போகிறோம் அல்லது ஏமாற்றப் படுகிறோம். மன நிம்மதிக்காகவோ அல்லது மகிழ்ச்சிக்காகவோ அல்லது வேறு எதற்காகவோ கோவிலுக்கு சென்றால், அது கிடைக்கிறதா என்றால்.... அது நிச்சயமாகக் கிடைப்பதில்லை. வருத்தமும், ஏமாற்றமும், கோபமும் தான் மிஞ்சுகிறது.



 குடும்பத்தோடு செல்லும் போது மேற்கூறிய மூன்றையுமே வெளி காண்பிக்க முடிவதில்லை. ஏதோ ஒன்று தடுக்கிறது.
            ஏமாந்து, வருத்தப்பட்டு, கோபப்பட்டு..... எதற்காக சென்றோமோ அதுவும் கிடைக்காமல் கோவிலை விட்டு வெளியே வருவதற்கு பதிலாக, கோவிலுக்கே செல்லாமல் இருந்துவிட்டால் என்ன என்றே தோன்றுகிறது. சரி, இந்த அவமானங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு, கோவிலுக்கு சென்று கோவில் வரலாறையோ, பூஜை புனஸ்கார  முறைகளையோ, சாமி கும்பிடுவதன் அவசியத்தையோ, வேதங்களின் செய்திகளையோ தெரிந்து கொள்வோம் என்றால், அதுவம் முடிவதில்லை. அங்கு இருப்பவர்களுக்கும் தெரிவதில்லை. இச்சமயத்தில்தான், சிறுபிள்ளைகளை ஏன் கோவிலுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. நமக்கு, கோவில் விசயங்கள் தெரிவதில்லை. கோவிலில் இருக்கும் மேதாவிகளுக்கும் அது தெரிவதில்லை.
           இப்படி, எதுவுமே தெரிந்து கொள்ள முடியாத ஒரு இடத்திற்கு, எதுவுமே எனக்கு கிடைக்க முடியாத ஒரு இடத்திற்கு, எதுவும் தெரியாத கூட்டம் இருக்கும் ஒரு இடத்திற்கு நான் ஏன் செல்ல வேண்டும்? சம்பிரதாயத்திற்கா.....? எனக்கு வேண்டியதை, நான் தெரிந்து கொள்ள வேண்டியதை எனக்குத் தெரியப் படுத்த முடியாத ஒரு மதத்தை நான் ஏன் சார்ந்து இருக்க வேண்டும்? சம்பிரதாயத்திற்கா....?
           இக்கேள்விகள் மனதை அறுக்கின்றன. குழப்பம்தான் மிஞ்சுகிறது. எதை சார்ந்து இருக்க.... எதை தழுவ.....எதிலிருந்து தெரிந்து கொள்ள....? எதுவும் தெரியவில்லை. மதம் இல்லா ஒரு மதம் இருக்கிறதா....? எல்லாரையும் சமமாகப் பாவிக்கும் ஒரு மதம் இருக்கிறதா....? நல்ல விசயங்களை - ஒழுக்கங்களை சொல்லித் தரும், அதை கடைபிடிக்கும் ஒரு கோயில் இருக்கிறதா....? அது மதமாக இல்லாவிடினும்,  ஏதோவொரு "இசமாக" இருந்தாலும் அதை ஆரத் தழுவி கொள்ளலாம் என்றே தோன்றுகிறது. இந்துத்துவமும் இதைதான் எதிர்பார்க்கிறதோ....?





          பவுத்தமும், இஸ்லாமும் இதைத் தருமோ என்ற கேள்வியும் எஞ்சுகிறது. கிறித்துவம் அதைப் புதைத்து விட்டதை உணர்ந்தே இருக்கிறேன் - முக்கியமாக இந்தியக் கிறித்துவத்தில்.



நான் ஒருவன் மதம் மாறினால், இதெல்லாம் சரியாகி விடுமா.....? நான் ஒருவன் மதம் மாறுவதாகக் கூறினால் அவர்கள் எல்லாம் சரியாகிவிடுவார்களா என்றால், உண்மையில் அதற்கான விடை எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. நான் இவ்விசயத்தில் ஒரு அழிக்க  முடியாத ஆரம்பப் புள்ளியாக இருப்பேன். நான் இடும் இப்புள்ளி, கோடாக மாறி, அதி விரைவில் மிகப் பெரிய மாற்றத்திற்கான பாதையாக உருப்பெறும்!!!!



                    நான் ஏன் மதம் மாறக் கூடாது.....மதம் இல்லா மதத்திற்கு?

          

21 கருத்துகள்:

kaviswa சொன்னது…

கோயில்களில் மட்டும் அல்ல சங்கர் எல்லா வழிபாட்டுத் தலங்களிலும் இதே நிலை தான்.
நாகூர் தர்காவில் இதே அனுபவத்தை பெற்றேன். .
எல்லாம் வியாபார மயமாகி விட்டது. .
ஏமாற்றுவது வியாபார தந்திரம் என புகழப்படுகிறது. .
பணம் மட்டுமே பிரதானமாக இருக்கிறது. .
அடுத்தவன் பணம் மட்டும் அல்ல கற்பனை, திறமை என அனைத்தும் உறிஞ்சிக் கொள்ளப்படுகிறது. .
பணம் மட்டுமே பிரதானமாக இருக்கிறது. .
மதம் மாறுவதால் ஒரு பிரயோசனமும் இல்லை. .
தமிழனுக்கு ஏது கடவுள்.
இயற்கை தான் கடவுள். .

kaviswa சொன்னது…

கோயில்களில் மட்டும் அல்ல சங்கர் எல்லா வழிபாட்டுத் தலங்களிலும் இதே நிலை தான்.
நாகூர் தர்காவில் இதே அனுபவத்தை பெற்றேன். .
எல்லாம் வியாபார மயமாகி விட்டது. .
ஏமாற்றுவது வியாபார தந்திரம் என புகழப்படுகிறது. .
பணம் மட்டுமே பிரதானமாக இருக்கிறது. .
அடுத்தவன் பணம் மட்டும் அல்ல கற்பனை, திறமை என அனைத்தும் உறிஞ்சிக் கொள்ளப்படுகிறது. .
பணம் மட்டுமே பிரதானமாக இருக்கிறது. .
மதம் மாறுவதால் ஒரு பிரயோசனமும் இல்லை. .
தமிழனுக்கு ஏது கடவுள்.
இயற்கை தான் கடவுள். .

theerppavan சொன்னது…

மிகச் சரி கவி.... அதனால்தான் சொல்கிறேன், மதம் இல்லா மதத்திற்கு மாறிவிடலாம் என்று.

Munna சொன்னது…

You would encounter the same in every religion you go. Only the way they cheat will differ.

Solution is very simple. Become agnostic or atheist.

பெயரில்லா சொன்னது…

அன்புள்ள திரு சங்கர் அவர்களுக்கு இவற்றிலிருந்து தப்பிக்க ஒரு வழி உண்டு அது எல்லா மதத்திலும் இறைவனை இரண்டு வகைபடுத்துகின்றனர் ஒன்று மிகுந்த சக்தி வாய்ந்தவர் இரண்டு சக்தி வாய்ந்தவர் நீங்கள் இனி சக்தி வாய்ந்தவரிடம் சென்றால் எது எதுவும் தேவையில்லை அங்கே மக்கள் கூடமும் குறைவாகவே இருக்கும் ஆகம விதிகள் அழகாக பின்பற்றப்படும் நன்றி , சுரேந்திரன் குண்டூர்

பெயரில்லா சொன்னது…

Dear Brother
Please read Quran

பெயரில்லா சொன்னது…

Try , Church of flying spaghetti monster.


http://www.venganza.org/

You will love this religion.

பெயரில்லா சொன்னது…

Dear Shankar,

I felt the same in all the temples in south India. specially Madurai, Thiruchendur. end of the day there are no peace in mind, just get anger and comeback with frustration.


Jayakumar Chandrasekaran சொன்னது…

மதம் மாறவேண்டாம். ஒரு அரசியல் வாதியாகி விடுங்கள். பூர்ண கும்பத்துடன் உங்களை வரவேற்ப்பார்கள்.

--
Jayakumar

Julian Christo சொன்னது…

Dear Friend, Try JESUS not Christianity.

Christo

பெயரில்லா சொன்னது…

Do not know about Islam. ...but Christian also same in Europe like Germany and Italy church tax almost 10% percent you have to which church you are belongs too. Monthly based ....it may deduct from salary mostly. Apart from this if you sell or buy any assets special taxes also there for church.

Due to this very larger people start thinking for exit from church connection or Christian group.

Seshan

பெயரில்லா சொன்னது…

nice

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

இதற்காகவெல்லாம் நீங்கள் மதம் மாறுவதாக இருந்தால், ஒவ்வொரு மதமாக, மாறி மாறி, வந்து கொண்டே இருக்க வேண்டியதுதான். கோயில் நுழைவு வாயிலிலேயே, செருப்பு வைக்கும் இடம் எது என்று கேட்டு இருக்கலாம்.

kovaivenkat சொன்னது…

திருவள்ளுவரைக் கடவுளாகவும், திருக்குறளை புனித வேதமாகவும் ஏற்று, திருக்குறள் நெறிமுறைகளை நூற்றுக்கு நூறு கடைப்பிடித்து கேரளத்தில் ஒரு பிரிவினர் வழிபாடுகள் நடத்தி வருகிறார்கள் என்றால் அதிசயமாகத்தான் இருக்கும். இந்த நம்பிக்கையாளர்கள் பின்பற்றும் மதம் - திருவள்ளுவர் மதம் - என்றும் அழைக்கப்படுகிறது.

திருவள்ளுவரை "பகவான் ஆதி திருவள்ளுவர்' என்று இவர்கள் அழைக்கிறார்கள். திருவள்ளுவரை தரிசிக்கும், வணங்கும் ஆலயத்தை "பகவான் ஆதி திருவள்ளுவர் ஞான மடம்' என்று பெயரிட்டுள்ளார்கள். கேரளத்தின் கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மாவட்டங்களின் பகுதிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மடங்கள் செயல்படுகின்றன. பகவான் ஆதி திருவள்ளுவர் மடங்களில், மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை மந்திரமாக ஏறக்குறைய சுமார் 60 ஆயிரம் பேர் ஓதி, வள்ளுவரைத் தெய்வமாக தியானித்து கும்பிட்டு வருகிறார்கள். திருவள்ளுவருக்கு, திருக்குறளுக்கு உலகில் எந்த மூலையிலிருந்தும் கிடைக்காத அங்கீகாரம், பெருமையை கெüரவத்தை கேரளம் தந்திருக்கிறது.

வள்ளுவர் மதத்தைக் கேரளத்தில் ஸ்தாபித்திருப்பவர் மூவாற்றுபுழாவைச் சேர்ந்த சிவானந்தர்.

ஆரம்பத்தில் சிவானந்தன் என்று அழைக்கப்பட்டவர், தனி மனிதராக நின்று, உடல் பொருள் ஆவி, குடும்பத்தை மறந்து, திருவள்ளுவரின் போதனைகளைப் பரப்பி, திருவள்ளுவர், திருக்குறள் பக்கம் அறுபதாயிரம் கீழ்த்தட்டு மக்களைக் கொண்டு வந்ததினால், அந்த அறுபதாயிரம் பேர்களால் மதிப்பு மரியாதையுடன் சிவானந்தர் என்று அழைக்கப்படுகிறார்.

கார்த்திகை மாதம் 41 நாட்கள் விரதமிருந்து, தலைமை ஞானமடமான கூர்மலையில் உள்ள மார்பளவு திருவள்ளுவர் சிலையை பூக்களால், விளக்குகளால் அலங்கரித்து வழிபடுகிறோம்.

திரு ஓணம் பண்டிகை எல்லா மதத்தினருக்கும் பொதுவானது. திரு ஓணம் பண்டிகையின் போது, எல்லா ஞான மடங்களிலும் வண்ண வண்ண பூக்களால் பூக்களம் என்னும் மலர்க் கோலங்கள் போடப்படுகின்றன. வள்ளுவரை வணங்கினாலும், கேரள மண்ணின் வாசனையை வள்ளுவருக்கு வழங்குகிறோம். ஆண்டு விழா அன்று, அதிகாலையில் செண்டை மேளங்கள் மங்கலமாய் முழங்க, ஞான மடத்தின் கொடி ஏற்றம் நடக்கும்.

கொடியேற்றம் நடந்து முடிந்ததும், திருவள்ளுவர் வழிபாடு. மலையாள திருக்குறள்கள் ஜெபிக்கப்படும். திருவள்ளுவர், திருக்குறள் பற்றி பக்தர்கள் உருவாக்கிய பாடல்கள் பாடப்படும்.


ஞான மடத்துடன் இணைந்தவர்கள் பல ஜாதியைச் சேர்ந்தவர்கள் ஞான மடத்தில் சேர்ந்த பிறகு, இவர்களுக்கிடையில் இருந்து வந்த ஜாதி, மத வேறுபாடு, அடையாளங்கள் தொலைந்து போயின'' என்கிறார்.
-Thanks Dinamani

theerppavan சொன்னது…

ஆமாம் தமிழ் இளங்கோ சார். கேட்டிருக்கலாம். ஆனால், நாங்கள் கேட்பதற்கு முன்னரே, அவர்கள் பதில் சொல்லிவிட்டனரே....உள்ளே இடம் இல்லை. இங்குதான் காலணிகளை கழட்டி வைக்க வேண்டும் என்று. ஒன்று செய்திருக்கலாம்; அவர்களின் அந்த பேச்சை நாங்கள் நம்பாமல் இருந்திருக்கலாம். நம்பியது தவறுதான். இனிமேல் கோவிலுக்கு செல்வதாய் இருந்தால், மிகச் சுதாரிப்பாக வேண்டும்.

theerppavan சொன்னது…

கோவை வெங்கட் சார், திருவள்ளுவர் மதம் தான் "மதம் இல்லா மதமோ" ....?

theerppavan சொன்னது…

jk22384, அது சரி....

பெயரில்லா சொன்னது…

Pls Check
https://www.facebook.com/ibrahim737?fref=ts

பெயரில்லா சொன்னது…

https://www.facebook.com/halaalSL/photos/a.475547062635.254085.339967432635/10153212653737636/?type=3&theater

Tamizhan சொன்னது…

How many of us go to temples with a free mind, seeking peace?. Don't we all go there with a specific personal 'business deal'?. So in that case, the temple turns into a business centre. Saying should i convert is very extreme. You can always say a big NO to all this. But we won't. Why cry about it?

theerppavan சொன்னது…

Thiru.Tamizhan, For many of us entering in to the temple is replication of entering in to hospital; to get cure from the diseases. Can u imagine the mindset of people who visit the doctor / worship the GOD? Will he be in a position to analyse the things? Certainly not; he / she'll be in a position to execute the things which is said to. This is the place our ignorance is used for business. And, I'm not talking about GOD but the so called religions.