பேருந்துக் கட்டணம், பால் விலை, மின்சாரக் கட்டணம் உயர்வு போன்ற இன்னும் பல உயர்வுகளைப் பற்றி மாநிலம் முழுவதும் போர்க் குரல்களும், போராட்டங்களும் வெடித்துக் கொண்டு இருக்கின்றன. இப் போராட்டங்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு உயிரோடு இருக்கும் என்றே தெரியவில்லை. இதே போன்ற எத்தனை விலை உயர்வை நாம் சந்தித்திருக்கின்றோம். அப்பொழுதெல்லாம் இதே போல் தான் போராட்டங்கள் நடத்தினோம். சில வாரங்களோ, ஒரு மாதமோ கழித்து வேறொரு பிரச்சனை பேசுவதற்கு கிடைக்கும் அதைப் பற்றி பேச ஆரம்பித்து விடுவோம். இந்தப் போராட்டங்களின் உச்சகட்டமாக, நாம் என்ன பேருந்தில் போகாமலா இருக்கப் போகின்றோம், ஆவின் பால் வாங்கி குடிக்காமலா இருந்துவிடப் போகின்றோம், வீட்டில் மின்சாரத் தேவையைத்தான் குறைத்துக் கொள்ளப் போகிறோமா....? இது எதுவுமே நடக்கப் போவதில்லை..... பிறகு என்ன .......க்கு இந்தப் போராட்டம்லாம்....? எத்தன தடவ நம்மளோட பிரதம மந்திரி-பொருளாதார நிபுணர் உயர் திரு. மண்மோகன் சிங் பெட்ரோல் டீசல் விலைய எத்திருக்காறு....அப்பெல்லாம் நாம என்ன செஞ்சோம்..... பேசிகிட்டே ஊத்திகிட்டும் ஓட்டிகிட்டும் தானே இருந்தோம்.....
முதல்வரின் கவனத்திற்கு: நீங்க ஒன்னும் கவலைப் படாதிங்க மேடம். இந்தப் பொதுமக்களே இப்படித்தான். உங்க டிவி சேனல் தவிர மத்த எல்லா சேனல்லையும் கட்டண உயர்வுக்கு எதிரா பேசிக்கிட்டேதான் இருப்பானுங்க. எவ்வளவு நாளைக்குதான் பேசுவானுங்க...? இவிங்களைஎல்லாம் கண்டுக்கிட்டு நீங்க விளக்க அறிக்கை எல்லாம் குடுத்து ஒங்க நேரத்த வேஸ்ட் பண்ணாதிங்க..... நீங்க ஏத்த வேண்டியது இன்னும் எவ்வளவு இருக்கு....??? அத ஏத்துங்க மேடம்.... இவிங்களுக்கு எல்லாமே இலவசமா தரனும், அதே சமயத்துல விலையையும் ஏத்தக் கூடாது....... என்ன நியாயம் மேடம் இது...... நீங்க எல்லாத்துலயும் நல்லா ஏத்துங்க மேடம்..... இவிங்க என்ன செஞ்சு கிளிச்சுருவானுங்கன்னு பாப்போம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக