18 நவம்பர் 2011

கொலை செய்யத் துடிக்கும் கூடங்குளம்.....

கொலை செய்யத் துடிக்கும் கூடங்குளம்.....
மின்சார சிக்கனமும், மின்சார சேமிப்பும் இருந்தாலே, நாம் தற்போது உற்பத்தி செய்து வரும் மின்சாரம் நமது அனைத்து மின்சாரத் தேவையையும் செவ்வனே பூர்த்தி செய்யும்.
நம்மில் எத்தனை பேர் இருக்கையை விட்டு எழுந்து வரும் போது, நம் தலைக்கு மேலே சுற்றி கொண்டிருந்த மின் விசிறியை அனைத்து விட்டு வருகிறோம்...? டியுப் லைட்டை அனைத்து விட்டு வருகிறோம்.....? நம் ஒரே ஒருவருக்காக மட்டுமே ஏ. சி. யை இயங்க விட்டிருப்போமே...? நம் ஊரில், எத்தனை சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகள் மின்சாரத்தைத் திருடுகின்றன....? வீட்டிற்கு வழங்கப் படும் மின்சாரத்தை அவர்களின் தொழிர்சாலைக்காக பயன்படுத்துகின்றனர்....?
இது வீட்டில் மட்டும் அல்ல, அலுவலகத்திலும் நடைபெறுகிறது தானே...? இவ்வாறு விரயமாகும் மின்சாரத்தை சேமித்தாலே நாம் மின்சாரத்தில் தன்னிறைவு அடைந்து விடுவோம்.
இவ்வாறு நாம் உரிய வகையில் மின்சாரத்தைப் பயன்படுத்தி மின்சாரம் விரயமாகாமல் தடுக்கவில்லைஎனில் நம் எதிர்காலமும் நம் சந்ததியரின் எதிர்காலமும் இருண்ட காலமாகவே அமையும்.
கூடங்குளத்தின் குதியாட்டம் நம்மையும் நம் சந்ததியையும் வேரோடு கருக்கவே செய்யும்.
கீழே இருக்கும் லிங்க்கை சொடுக்குங்கள்:
*** http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17435&Itemid=139
***http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17276&Itemid=139
மேலே உள்ள இணைப்புகள் உங்களுக்கு மேலும் பல தகவல்களைத் தரும்.

கருத்துகள் இல்லை: