06 ஜூலை 2011

தலையணையும் வாழ்க்கையும்....சிந்திக்க சில நிமிடங்கள்!!!

தலையணையும் வாழ்க்கையும்... சிந்திக்க சில நிமிடங்கள்!!!

நிறைய காதல் கவிதைகள்ல/கதைகள்ல/திரைப் படங்கள்ல தலையணையை காதலியா / காதலனா / மனைவியா / கணவனா நெனச்சுகிட்டு கட்டிபிடிச்சுத் தூங்குறதா வரும். தலையணையை, காதலியாவோ / மனைவியாவோ / காதலனாவோ / கணவனாவோ நெனச்சுகிட்டு கட்டிப்பிடிச்சுத் தூங்கலாம். ஆனா, காதலியவோ / மனைவியவோ / காதலனையோ / கணவனையோ தலையணையா நெனச்சுகிட்டு கட்டிப் பிடிச்சுகிட்டுத் தூங்கக் கூடாது. இது ரொம்ப முக்கியம்.

உயிர் இல்லாதத, உயிர் உள்ள ஒண்ணா நெனச்சு அது மேல அன்பு செய்யிறது நம்மளோட பெருந்தன்மையைக் காமிக்கும். ஆனா, அதே நேரத்துல, உயிருள்ள ஒரு அற்புதமான ஜீவன உயிரில்லாத ஒரு ஜடமா நடத்துனா, அது நம்மள ஒரு ................ ஆ காமிக்கும்.

வாழ்க்கைய ரொம்ப ஜாக்கிரதையா வாழனும் எனதருமை தோழர்களே, தோழிகளே!!!

01 ஜூலை 2011

நான் ஆண்!

நான் ஆண்!

அகங்காரத்தின் ஆட்சியில்

ஆணவத்தோடு அலைந்து கொண்டிருக்கும்

திமிர் பிடித்த

சதைத் திரட்சி நான்.

வெளி மைதானத்தில்

நான்

வீறுகொண்டு எழுவதாய்

உனக்குப் புலப்படலாம்.

வெற்றி

எப்பொழுதும் எனதாக

வெறிகொண்டலையும் வேங்கையாக

நான்

உனக்குத் தெரியலாம்.

உன் உணர்ச்சிகளைத்

தூண்டிவிடும்

உல்லாச குருவியாக

என்னை

நீ உணரலாம்.

உன் உரிமைகளை

உருத்தெரியாமல் அழித்தொழிக்கும்

விசத் திராவகமாக

நான்

உனக்கு உணரப்படலாம்.

உன் சுயமரியாதையை

சுக்கு நூறாக

உடைத்தெறியும் சுத்தியாக

நான்

உன்னைப் பயமுறுத்தலாம்.

உன் கண்ணாடிக்

கனவுக் கோட்டையில்

கல்லெறியும் கயவனாகவும்

நான்

அறியப்படலாம்.

உன் மேல்

என் கண்களை மேயவிட்டு

உன்னை ருசிக்கத் துடிக்கும்

குள்ள நரியாக

நான்

உனக்குத் தெரியலாம்.

ஆனால்...

நான் ஆண்.

பெண்மையை உள் புதைத்து

ஆண்மையை வெளி நீட்டி

கால் பரப்பி கை வீசி

வீதிகளில் அலையும்

வெற்றுடம்பு

ஆண் நான்.