14 ஜூன் 2011

மார்கங்கள் (மதங்கள்) - ஒரு பார்வை.

மார்கங்கள் (மதங்கள்) - ஒரு பார்வை.

ராமர் இருந்தாரா இல்லையா ங்கறது விசயமே இல்ல. ராமரா உருவகப் படுத்தப்பட்ட ஒன்னு ஏதோ ஒரு விசயத்த சொல்லிட்டு போயிருக்குல... அந்த நல்ல விசயத்த நாம எடுத்துகிரதுல என்ன தப்பு இருக்கு....? ரொம்ப நல்லா ஆழமா எல்லா வேதத்தையும் வாசிச்சுப் பாத்தோம்னா, ஒன்னு புரியும், "எந்த நோக்கத்தோட வேதத்த வாசிக்கிறோமோ அதுவாவே நாம மாறுவோம்". இஸ்லாத்துல உதாரணம்: தீவிரவாதம் பண்ணி அழிஞ்சு போன ஒசாமா பின் லேடனும், இன்னமும் நமக்குப் பக்கத்துல யாரோ ஒரு சிலருக்கு அவுங்களால முடிஞ்சா உதவிய அமைதியா செஞ்சு வாழ்ந்துகிட்டு இருக்குற ஒரு இஸ்லாமிய நண்பனும். இந்துயிசத்துல உதாரணம்: கடவுள் பெயரால் மக்களை ஏமாத்திகிட்டு இருக்குற நம்ம ஊரு போலி சாமியார்களும், இன்னமும் நமக்குப் பக்கத்துல யாரோ ஒரு சிலருக்கு அவுங்களால முடிஞ்சா உதவிய அமைதியா செஞ்சு வாழ்ந்துகிட்டு இருக்குற ஒரு இந்துயிசத்த பின்பற்றிகொண்டு மற்றவர்களைப் பற்றி குறை சொல்லாத நம்ம நண்பனும். இந்த மாதிரி, இருக்குற இந்த உலகத்துல இருக்குற இன்னும் பல பல இசங்களில் இருந்து உதாரணம் சொல்லலாம். சுருக்கமா சொன்னோம்னா, எந்த இசமும் மக்களை நாசமா போங்கனு சொல்லல; நாமவேனா அப்படி புரிஞ்சு நடந்துக்கலாம். எல்லா இசங்களும் மக்களுக்கு நல்ல விசயங்கள்தான் சொல்லியிருக்கு.

எந்த மார்கங்களும், அப்பன் ஆத்தாளுக்கு சோறு போடாதேன்னு சொல்லியிருக்கா...? கஷ்டப்படுரவன்கிட்ட இருந்து திருடி நீ சந்தோசமா இருன்னு சொல்லியிருக்கா...?

எல்லா மார்க்க விசயங்களையும், நம்ம மண்ணோட, கலாச்சாரத்தோட, பண்பாடோட, சூழ்நிலையோட பொருத்தி பாத்து புரிஞ்சு நடந்துக்கிரனும். அரேபியாவுல, இருக்குற மாதிரியே இங்கயும் இருக்க வேண்டிய அவசியம் இல்ல. ராமஜென்ம பூமியில, ராமர் பிறந்தப்போ இருந்த மாதிரியே இப்பவும் தமிழ்நாட்டுல இருக்குற கரிச்சாம்பட்டியிளையும் இருக்கணும்னு அவசியம் இல்ல. புத்த கையா ல புத்தருக்கு ஞானம் பிறந்தப்போ எப்படி எல்லாரும் இருந்தாங்களோ அப்படியே இப்பவும் இருக்கணும்னு தேவை இல்ல.

அப்படித்தான் இருக்க உங்களுக்குப் பிடிக்கும்னா அப்படியே இருந்துக்கோங்க. அதனால வர்ற விளைவுகளையும் பயன்களையும் நீங்களே அனுபவிங்க.

உங்களுக்கு எந்த மார்கங்கள் மேலையும் நம்பிக்கை வரலையா, அதுமேல நம்பிக்கை இருக்குறவங்கள கேவலப் படுத்தாதிங்க. நீங்க திருக்குறளைப் படிச்சு அதன் படி வாழ முயற்சி பண்ணுங்க. திருக்குறள்ள சொல்லியிருக்குரதுக்கும், வேதங்கள்ள சொல்லி இருக்கிறதுக்கும் வித்தியாசம் இல்லை. அதுலயும் நல்லா வாழுங்கன்னுதான் சொல்லி இருக்கு. இதுலயும் நல்லா வாழுங்கன்னு தான் சொல்லியிருக்கு. அடுத்தவங்கள கெடுக்காதீங்க னுதான் சொல்லியிருக்கு.

கருத்துகள் இல்லை: