13 ஜூன் 2011

கோவில்பட்டி புதிய பேருந்து (நிலையம்) நிறுத்தம்.

கோவில்பட்டி புதிய பேருந்து (நிலையம்) நிறுத்தம்.


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சியில், இதற்கு முந்தைய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் செல்வி. ஜெயலலிதா அவர்களால் அடிக்கல் நாட்டப் பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய பேருந்து நிலையம் தற்போது பொது மக்களுக்கு சற்றும் பயன் படாத வகையில் பெரும் சிரமத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் சாலையோரப் பேருந்து நிறுத்தமாகவே உள்ளது.


இங்க நாம சொல்லுறது வெறும் விளையாட்டான விஷயம் இல்லைங்க. உண்மையிலயே இந்த பேருந்து நிலையத்துக்குள்ள இப்போ ஒரு பேருந்தும் வர்றதில்ல. எல்லா பேருந்துகளும் நிலையத்துக்கு வெளியவே நின்னு பயணிகளை ஏத்திகிட்டு இறக்கி விட்டுட்டு போயிகிட்டு இருக்கு. இதுல ரொம்ப ஆபத்தான காரியம் என்ன நடந்துகிட்டு இருக்குதுனா, பேரு வாரியான பேருந்துகள் நிலையத்துக்கு பக்கத்துல இருக்குற "அணுகு சாலையில" (சர்விஸ் ரோடு) வர்றது இல்ல. மெயின் ரோட்ல தான் வருது. இதுலதான் பேராபத்தே இருக்குது. எப்படினா, திருநெல்வேலி பக்கம் பயணம் போகப் போற ஒருத்தரு, அணுகு சாலையில இருந்து ஒரு பிரதான சாலைய(திருநெல்வேலி-மதுரை) கடந்து மேலும் அடுத்த பிரதான சாலைக்கு போயி பஸ் ஏறனும். இந்த சமயத்துல, முதல் பிரதான சாலைய கடக்கும் போது, விபத்து நடக்குரதுக்கான வாய்ப்புகள் ரொம்ப அதிகம். நிறைய விபத்துகள் நடந்துகிட்டு இருக்குது. இந்த பேருந்து நிலையத்துக்கு தென் வடப் புறங்கள்ள மேம்பாலங்கள் இருக்கின்றன. ஆக ரெண்டு பக்கம் இருந்து வர்ற பேருந்துகளும் இதர வாகனங்களும் அதிக வேகத்துலதான் வருதுங்க. அணுகு சாலையில இருந்து பிரதான சாலைக்கு வர்றவுங்க ரெண்டு புறமும் கவனிக்காம (மேல இருக்குற படத்தப் பாருங்க) வந்தாங்கனா விபத்து நிச்சயம். பிரதான சாலையில வர்ற பேருந்த, எங்க நாம தவற விட்ட்ருவோமோ ன்ற பதட்டத்துல பெரும்பான்மையான நேரங்கள்ல ரெண்டு புறமும் கவனிக்கத் தவறீர்றாங்க. விபத்துல சிக்கிர்றாங்க. உயிர் சேதம் நடக்குற அளவுக்கு கூட விபத்து நடந்துருக்கு.


இப்ப சொல்லுங்கங்க, இப்படி மோசமான நெலமையில இருக்குர பொது மக்களுக்கு ஆபத்த ஏற்படுத்துற இந்த மாதிரி ஒரு பேருந்து நிலயத்த எப்படிங்க பேருந்து நிலையம்னு சொல்ல முடியும்? இத பேருந்து நிருத்தம்னுதானே சொல்லணும்?


இந்த பேருந்து நிலயத்த முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியாததுக்கு பல காரணங்கள் சொல்லப் பட்டாலும், (இடையில கொஞ்ச காலம் இந்தப் பேருந்து நிலையமும் முழுப் பயன்பாட்டுல இருந்துச்சு) காரணமா இருந்தாலும், அத எல்லாத்தையும் நிவர்த்தி செஞ்சுட்டு, இந்த நிலயத்த முழுப் பயன்பாட்டுக்கு கொண்டுவரணும்.


என்னதான், மக்கள் அரசாங்கத்தின் அடிமையா இருந்தாலும், அவிங்களோட உசுரும் முக்கியம் தானே...? உங்க உசுர மட்டும் ஒசரத்துல வச்சு பாக்கும் போது, அவிங்க உசுர மட்டும் மசுரு மாதிரி நெனைக்கிறது கொஞ்சமும் நல்லா இல்லையில...?


நாங்க கேக்குறது எல்லாம் ஒன்னுதாங்க, ஒன்னு, அந்தப் பேருந்து நிலயத்த முழுப் பயன்பாட்டுக்கு (பழையப் பேருந்து நிலயத்த கிழக்க மற்றும் வடகிழக்கு பக்கம் போகுற பேருந்துகளுக்கான தாவும், புதிய பேருந்து நிலயத்த தெற்கு மற்றும் வடக்குப் பக்கம் போகுற பேருந்துகளுக்கான நிருத்தமாவும் வைக்கலாம்) கொண்டு வாங்க, இல்லையினா அத மொத்தமா இடிச்சுப் போட்டுருங்க. எங்கள ஏமாத்திக்கிட்டே மட்டும் இருக்காதிங்க. நாங்களும் பாவந்தான...?


கருத்துகள் இல்லை: