19 ஜனவரி 2011

இதயத்தை இடம் மாற்றுவாயா...?

கவனிப்பாரற்று கிடந்த
என் இதயம்
சட்டென்று ஒரு நாள்
சற்றும் யோசியாமல்
சரேலென்று வெளியேறியது.
இடப்பாக வெற்றிடத்துடன்
இதயம் தேடி அலைந்தேன்.
என் இதயத்தின்
இருப்பிடம் பற்றி
இம்மியளவும் தகவலில்லை.
இதயம் மறந்து
இலக்கியம் தேடி புறப்பட்டேன்.
இலக்கியம் கண்டேன்.
கவனிப்பாரற்று கிடந்த
என்னிதயம்
இலக்கியத்தில்
இறுமாப்பாய் அமர்ந்திருக்கிறது.
என்
இதயத்தை
எனக்கு
இடம் மாற்றுவாயா...?
ப்ளீஸ்...?

5 கருத்துகள்:

Sundar சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Sundar சொன்னது…

நல்ல முயற்சி நண்பா, ஆனால் இந்த அழகு தமிழ் குழந்தைக்கு தேவை இல்லா குடல் 'வால்' எதற்கு-
-சுந்தர்

theerppavan சொன்னது…

நன்றிடா சுந்தர்! அது ஒன்னும் இல்லடா. கவிதைக்கு அழகு சேக்குரதுக்காக இந்த மாதிரி சில வார்த்தைகள சேத்துக்ரலாம்.

Viji சொன்னது…

நல்லா இருக்கு

Sundar சொன்னது…

அழகு? அப்ப 'OK'