உங்க ரெண்டு பேருக்கும், உங்க பெயரோட முதல் எழுத்து "எஸ்" தானா ..... இன்சியல் கூட ஓரே மாதிரி தானா ..... அட பாருடா, ராசி நட்சத்திரம் கூட ஒரே மாதிரியா..... அதெப்படிங்க நீங்க கல்யாணம் கட்டிக்கிட்டிங்க..... பிரச்சனை இல்லாம சந்தோசமா இருக்கீங்களா..... இப்டி எவ்ளோ கேள்விகள நாம சந்திச்சிருக்கோம், இந்த 21 வருசத்துல.....? எல்லோரோட, எல்லா இந்த மாதிரியான கேள்விகளுக்கும் நம்மகிட்ட இப்பவும் எப்பவும் இருக்குற ஒரே பதில் "ஆமா" தான. இதெல்லாம் முடிஞ்ச பின்னாடி, அடுத்த கேள்வி வரும்.... அப்டினா, நீங்க ரெண்டு பேரும் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டிங்களா...... அதுக்கு பதில், "மேரேஜ் பண்ணோம், லவ் பண்றோம்".
அப்போ, கல்யாணம் ஆனதுல இருந்து நீங்க ரெண்டு பேரும் அப்பிடியே தான் இருக்கீங்களான்னு கேட்டா, இல்லைனு தான் சொல்லணும். நெறய மாறிட்டோம்..... மாறிருச்சு. அதிகமாவும் ஆகிருக்கு, குறைஞ்சும் போயிருக்கு.
ஆனா, அந்த லவ் தான், நம்மள்ல யாரோ ஒருத்தர், எத்தனையோ தடவ, தெரிஞ்சோ தெரியாமலோ, தள்ளிவிட்டோ தூக்கி எறிஞ்சோ கீழ விழுந்து நொறுங்க போகுதுங்கிற கடைசி நொடில, நம்மளோட நாலு கைகள்ல ஒரு கை சட்டுனு நீண்டு, கப்புனு பிடிச்சு, அப்டியே அலேக்கா தூக்கி வச்சுருது.
ஒருத்தர ஒருத்தர் முழுசாலாம் புரிஞ்சுக்கல..... புரிஞ்சுக்க ட்ரை பண்றோம். அதுதான், எல்லாநேரத்துலயும் அக்சப்ட்னஸ அதிகமாக்க வச்சுருக்கு..... நீயும் நானும் எப்டியோ, அப்டியே ஏத்துக்க வச்சுருக்கு. கூடுறதையும், கொறையுறதையும் புரிஞ்சு ஏத்துக்க வச்சுருக்கு.
நாம வேற வழியில்லாமலாம் சேர்ந்து இருக்கல.... வேற வழிலாம் தேவையில்லன்னு தான் இப்டி சேர்ந்திருக்கோம். இப்டியே இருப்போம். இன்னமும் அந்த புரிதல் அதிகமாகட்டும். வருஷம் கூட கூட இதுதான் தேவைன்னு நம்புறேன்.
இறுதிவரை இணைந்திருந்தே வாழ்வோம். இல்லாதுபோனால், இணைந்திருந்ததை நினைந்தே வாழ்ந்திருப்போம்.
வா.... 22வது வருச மண வாழ்க்கையையும் ஒரு கை பாத்துருவோம்..... நம்மக்கிட்டதான் "காதல் எனும் பேராயுதம்" இருக்கே!!!
#திருமண நாள் #சங்கீமாகாதல் #நவம்பர்4 #weddinganniversary #நீயும்நானும்நாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக