நேர்மையா... திமிரா...?
கோவில்பட்டில லக்ஷ்மி சங்கர் னு ஒரு உணவு விடுதி இருக்குது. கோவில்பட்டில இருக்குற ஒரு சில சைவ உணவகங்கள்ள இது ஒரு நல்ல உணவகம். சுவையாவும் சுத்தமாவும் எல்லா உணவும் இருக்கும். அந்த உணவகத்துக்கு ஒரு நாள் நானும் என் மனைவியும் சாப்பிட போனோம். தேவையானது எல்லாம் சாப்பிட்டு முடிச்சுட்டு பில் (பில்லுக்கு தமிழாக்கம் என்னாங்க...?) வாங்கி பாத்தேன். 42 ரூபாய் பில் வந்திருந்தது. எங்களுக்கு பரிமார்னவர்க்கிட்ட 50 ரூபாய் குடுத்தேன். பில் தொகைய்ய கல்லால்ல கட்டிட்டு, மிச்சம் 8 ரூபாவ... ஒரு 5 ரூபா காசாவும், ஒரு 2 ரூபா காசாவும் ஓரு 1 ரூபா காசாவும் கொண்டு வந்தாரு. நான், அவருக்கு 5 ரூபா டிப்ஸ் (டிப்சுக்கு தமிழ்ல என்னாங்க...?) கொடுத்தேன். ஓரு ஆச்சரியமான விஷயம் நடந்தது. என்னான்னா... நான் கொடுத்த அஞ்சு ரூபாவ திரும்பவும் என்கிட்டயே குடுத்துட்டு, என் கைல இருந்த 2 ரூபாவ மட்டும் டிப்ஸா எடுத்துகிட்டாரு. எனக்கு ரொம்ப ஆச்சரியமாவும் அதிர்ச்சியாவும் இருந்துச்சு. இப்படியும் ஓரு ஆளா...? இவரு எப்பவுமே இப்படித்தான் இருப்பாரா.... இல்ல அன்னைக்குத்தான், ஏதோ ஓரு நெனப்புல அப்படி நடந்துக்கிட்டாரா... ஒன்னும் வெளங்கல.
பொதுவாவே... இந்த மாதிரி டிப்ஸ் குடுக்குறது, அவுங்க அவுங்களோட கஞ்சத் தனத்தையும், பெருந்தன்மையையும், திமிரையும் காமிக்கும், அப்படிங்கறது என்னோட தாழ்மையானக் கருத்து (இது, குடுக்குற ஆளையும், வாங்குற ஆளையும், குடுக்கப்பட்ற இடத்தையும் பொறுத்தது).
இந்த சம்பவத்துல, இவரு என்னோட கஞ்சத்தனத்த நக்கல் பண்ணுனாரா...? என்னோட பெருன்தன்மைய அவமதிச்சாரா...? என்னோட பணத்திமிர ஓங்கி ஓரு அறை அறஞ்சாரா....? ஒன்னும் புரியல.
எனக்கு அவரு மேல ஓரு மரியாதை வந்தது. இப்படியும் ஓரு ஆளான்னு...

2 கருத்துகள்:
bill ku - "Rasithu" nu sollalamnu ninaikiren... naan sonnathu right na.. (ungaluke naan tamil solli kudukure na.. santhosam thaan..hehe)
சொல்லலாம்னுதான் நானும் நெனைக்குறேன்.... நல்லாத் தெரிஞ்சவுங்ககிட்ட விசாரிப்போம்....!!!
கருத்துரையிடுக