கோ - மூ - கொ - வீ லே - கோ. -1
தலைப்பு வித்தியாசமா இருக்கனுமேன்னு நெனச்சேன். (இல்லைனா படிக்க மாட்டேங்குரிங்கள்ள... எல்லாத்துலயும் வித்தியாசத்த எதிர் பாக்குறிங்க.) அதான், இந்த மாதிரி முதல் எழுத்துகள தலைப்பா வச்சுட்டேன்.
இந்த இடுகை, ஒரு பயணக் கட்டுரை. ஜாலியான பயணக் கட்டுரை. தலைப்ப கடைசில விரிச்சு எழுதுறேன். (நீங்க முடிஞ்சா கண்டுபிடிங்க...)
எங்க டிபார்ட்மென்ட் மூணாவது வருஷ மாணவர்களோட இந்த வருஷம் நான் ஐ வி (தொழிற்சாலை சந்திப்பு (சுத்தமா தமிழ்படுத்தினா... இப்படிதான் வருது - அதாங்க... Industrial Visit) போயிருந்தேன். மொத்தம் நாங்க 55 பேரு (53 பசங்களும் நாங்க 2 வாத்தியாருங்களும்) போயிருந்தோம். மொத்தம் 3 நாளு. முறைப்படி பாத்தோம்னா... ஒவ்வொரு நாளும் ஒரு இண்டஸ்ட்ரி பாக்கணும். ஆனா, நாங்க மொத ரெண்டு நாள் தான் இண்டஸ்ட்ரி பாத்தோம். மொத நாளு மூனார்ல ஒரு டீ இண்டஸ்ட்ரி (கண்ணன் தேவன் டீ இண்டஸ்ட்ரி) ரெண்டாவது நாளு கொச்சின்ல ஒரு இண்டஸ்ட்ரி (கேரளா எலெக்ட்ரிகல்ஸ் அன்டு அலைடு சர்விசஸ் லிமிடட் - KEL) மூணாவது நாளு பாக்கவேண்டிய இண்டஸ்ட்ரி என்னான்னு தெரியுமா....? அதுதான் வீகா லேன்ட் (காமெடியா இல்ல....?).
செப்டம்பர் 15 ஆம் தேதி நைட்டு ஒரு பத்தரை மணி வாக்குல காலேஜ்ல இருந்து கெளம்பினோம். பஸ் காலேஜா விட்டு வெளிய வந்ததுதான் தாமதம்.... பசங்க ஒரே ஆட்டம் தான் (பசங்கிகளும்தான்). அது என்னானே தெரியலங்க... டூர் அப்படினாலே பஸ்ல ஆட்டம் போடணும்... கத்தணும் ங்கறது ஒரு சம்பிரதாயமா ஆகிருச்சு போல. (இப்போலாம் பஸ்சுக்கு உள்ளதான் பசங்க ஆடுறாங்க.... நாங்க டூர் போகும்போதுல்லாம் பஸ்சுக்கு வெளியவும் ஆடுவோம். - இது ஒரு தொட்டு தொடரும் ஆட்டம் அமர்க்களம் போல...). ஆனா இவ்வளவு ஆட்டத்துலயும், ஒரு க்ரூப் ஒரு ரியாக்சனும் காட்டாம சும்மா ஒக்காந்து இருப்பாங்க. அவுங்களுக்கு எல்லாம் ஆடத் தெரியாதா.... இல்லைனா ஆடத் தெரியுமா... இந்த எடத்துல ஆடக்கூடாதுன்னு நெனைக்கிராங்களா.... ஆடுறது தப்புன்னு நெனைக்கிராங்களா...? ஒன்னும் புரியாது. அது அவுங்க அவுங்க சொந்த விருப்பத்த பொறுத்தது. நாம ஒன்னும் சொல்லக் கூடாது.
அன்னைக்கு நைட்டு முழுசும் தூங்க முடியல. காலைல ஒரு 6.30 மணி வாக்குல மூனாறு போயி சேந்தோம். நாங்க போயிதான் லாட்ஜ் காரங்களையே எழுப்பினோம். இந்த பசங்க தங்குறதுக்கு எல்லாம் நல்லா ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. ஒரு ரூமுக்கு நாளு பேரு ங்கற கணக்குல 14 ரூம் புக் பண்ணிருந்தாங்க. என்னோட ரூம்ல என்கூட ஒரு மூணு பசங்க தங்கி இருந்தாங்க. (இந்த பிளான் எல்லாம் நல்லாத்தான் பண்ணுறாங்க. ஆனா, குடுக்குற காசுக்கு சரியான வசதி கெடைக்குதான்னு பாக்க மாட்டேங்குராங்கலோன்னு தோணுது. - பொதுவா இந்த மாதிரி லாட்ஜ் ல எல்லாம் துண்டு, சோப்பு, எண்ணெய் லாம் தருவாங்க. ஆனா, இந்த லாட்ஜ்ல அந்த மாதிரி எதுவும் தரள. - லாட்ஜ் காரங்க தர மறந்துட்டாங்களா.... மறந்துட்ட மாதிரி இருந்துட்டாங்களா... பசங்க கேக்கலையா... கேட்டு தர மாட்டேன்னு சொல்லிட்டாங்களா.... பசங்க இந்த விசயத்துல இன்னும் கொஞ்சம் கவனமா இருந்தா நல்லதுன்னு தோணுது - ஒரு வேள அவுங்க சம்பளம் வாங்கும் போது அதிக கவனமா இருப்பாங்களோ...?). அந்த லாட்ஜ்லயே ரேச்ட்டாரன்ட்டும் இருந்துச்சு. அன்னைக்கு ( 16.09.2010) காலைல அங்கையே சாப்டுட்டோம். நல்லாதான் இருந்துச்சு. கொஞ்சம் அதிக விலையோன்னு தோணுச்சு. அப்புறம் பேசிகிட்டு இருக்கும் போது, கீதா மேடம் சொன்னப்பதான் புரிஞ்சது - கோவில்பட்டிலயே ஒரு தோசை 20 ரூபா க்கு விக்கும்போது... ஒரு டூரிஸ்ட் இடத்துல 25 ரூபாங்குறது ஒன்னும் அதிகம் இல்ல னு.
அப்புறம் அன்னைக்கு காலைல டீ இண்டஸ்ட்ரி பாத்துட்டு, அதுக்கு அப்புறம் சாயந்தரம் நாலு மணி வரைக்கும் மூனாருல இருக்குற இடத்த எல்லாம் சுத்திப் பார்த்தோம். அப்படியுமே, எல்லா இடத்தையும் பார்க்க முடியல. பொதுவா என்னைய பொறுத்த வரைக்கும், மூனாருங்குறது, கேரளா ல இருக்குற ஒரு குட்டி தமிழ்நாடு. அந்த அளவுக்கு அங்க தமிழ் ஆளுங்க இருக்குறாங்க. தமிழ் பேசுறவுங்க இருக்குறாங்க. அப்புறம், மூனாருல அங்க இருக்குற டீ எஸ்டேட்டும், கிளைமேட்டையும் தவுர ஒன்னும் இல்ல. அந்த கிளைமேட்டுதான் அவ்வளவு பேர அங்க இழுக்குது. உண்மைலேயே மூனாறு கிளைமேட் அவ்வளவு சூப்பர். அன்னைக்கு நைட்டு வேற எங்கயாவது போயி சாப்பிடலாம்னு நெனச்சு வெளிய கெளம்புனா... ஒரே மழை. வேற வழி இல்லாம அங்கையே சாப்ப்டுட்டோம். அன்னைக்கு நைட்டு "முகாம் தீ" ( அதாங்க... camp fire) ஏற்பாடு பண்ணிருந்தாங்க. மழை வேற பேஞ்சுகிட்டு இருந்துச்சு. ஆனாலும் விடல... முகாம் தீ ய பத்த வச்சு... ஆட ஆரம்பிச்சுட்டாங்க.
இந்த மாதிரியான முகாம் தீ நிகழ்ச்சி, மழை வாசச்தலங்கள்ள மட்டும் தான் நடக்குது. இதுக்கு ஒரு காரணம் இருக்குதுன்னு நினைக்கிறேன். என்னான்னா... நைட்டு தூங்கும் போது, குளிர் அதிகமா நம்மக்கிட்ட பிரச்சன பன்னக்கூடாதுங்குரதுக்காக, தீய்ய சுத்தி நின்னு ஆடி உடம்புல உஸ்ணத்த ஏத்திக்கிறது. அந்த தீ ஒரு வெப்பத்தைக் கொடுக்கும். ஆடுரதுனால, நம்ம உடம்புல இருந்து வெளியேர்ற சக்தி ஒரு விதமான உச்னத்தக் கொடுக்கும். இது, குளிர் பிரதேசங்கள்ள, நல்லா ராத்திரி உறக்கத்தைக் கொடுக்கும்.
பசங்க நல்லா என்ஜாய் பண்ணுனாங்க. பொண்ணுங்களும் ஒரு லிமிட்டோட நல்லா என்ஜாய் பண்ணுனாங்க. ஒரு சில பசங்க... அவுங்க சந்தோசத்தைத் தாண்டி, சுத்தி இருக்குரவுங்கள இம்ப்ரஸ் பன்னனுங்குரதுக்காக மட்டுமே ஆடுனாங்க. முக்கியமா, பொண்ணுங்கள இம்ப்ரஸ் பண்ணுறதுக்காக. விழுந்து விழுந்தெல்லாம் ஆடுனாங்க. இவ்வளவு வெறித்தனமா அவுங்க ஆடுனாலும், சுத்தி நின்னு பாத்துக்கிட்டு இருந்தவுங்களுக்கு அது ஒரு காமெடியாத்தான் இருந்துச்சு.
புதையல் வேட்டை மாதிரி ஒரு கேமும் வச்சிருந்தாங்க (அந்த கேம்... ஊத்திக்கிச்சு...). அப்புறம் என்ன... ஒரு பத்தரை மணி வாக்குல தூங்க போயிட்டோம். அடுத்த நாளு காலைல சீக்கிரமா எந்திரிச்சு கொச்சின் கிளம்பனும்னுட்டு.
அடுத்த நாளு (17.09.2010) காலைல சீக்கிரமா எந்திருச்சு, ஒரு 6.15 மணிக்கெல்லாம் மூணார விட்டுக் கெளம்பிட்டோம். இடைல, கொஞ்ச நேரம் நிப்பாட்டி டீ குடிச்சிட்டு கெளம்பினோம். காலை சாப்பாடுக்கு, இடமலி னு ஒரு ஊருல வண்டிய நிப்பாட்டி சாப்ப்டுட்டு கெளம்பிட்டோம். எங்கள 1.30 மணிக்கு KEL க்கு வர சொல்லி இருந்தாங்க. நாங்க கொசின்குள்ள போகுறதுக்கே 11.45 க்கு மேல ஆகிருச்சு. அதுனால நேர லாட்ஜுக்கு போகாம, பக்கத்துல மலை அரண்மனை க்குப் (Hill Palace) போயிட்டு அப்புறமா இன்டஸ்ட்ரிக்கு போனோம். அந்த மலை அரண்மனை, கொச்சின் ராஜ குடும்பத்துக்கு சொந்தமா இருந்ததாம். இப்போ அத அரசாங்கம் எடுத்துக்கிட்டு, அருங்காட்சியகமா மாத்தி இருக்காங்க. நல்ல வேலைப்பாடுள்ள நெறையா பொருள்கள் வச்சு இருந்ந்தாங்க. ஒன்னே முக்கால் கிலோல ஒரு தங்க கிரீடம் வச்சு இருந்தாங்க. அந்த தங்க காட்சியகத்துக்கு மட்டும் தனியான போலீஸ் பாதுகாப்பு குடுத்து இருந்தாங்க.
அப்புறம், இண்டஸ்ட்ரி (மின் மாற்றி தயாரிப்பு கம்பெனி) பாத்துட்டு, லாட்ஜுக்கு போக அந்த இந்தான்னு, ஒரு ஆறு மணி ஆகிருச்சு. லாட்ஜுக்கு வர்ற வழியிலயே மதிய சாப்பாட ஒரு சுமாரான ஹோட்டல்ல முடிச்சுட்டோம். லாட்ஜுக்கு வந்து ரெப்ரெஷ் ஆகிட்டு, கடைத்தெருவுக்கு கெளம்புனோம். எல்லாரும் அவுங்க அவுங்களுக்கு தேவையான, விருப்பமான பொருள்கள வாங்குனாங்க. கொச்சின்ல, காலணிகள் (சூ, செருப்பு), பைகள் விலை குறைவா கிடைக்கும் போல. இங்க காலேஜ்ல... கான்பரன்ஸ், செமினார், வொர்க்ஷாப் நடத்துரப்ப பார்டிசிபன்ட்சக்கு தர்றதுக்காக வாங்குற பேக் 200 ரூபாக்கு மேல ஆகுது. ஆனா, இதே பேக் கொச்சின்ல 130 ரூபாக்கு கெடைக்குது.
நான், முகிக்கு ஒரு சூ வாங்கினேன். செந்திக்கு ஒரு டிரஸ் வாங்கினேன். நைட்டு சாப்பாட ஆர்ய பவன் ல முடிச்சுட்டு வந்துட்டோம். கடை தெருவுல எங்க க்ரூப்ல ஒரு பொண்ணு, அவளோட மொபைல ஒரு கடைல வச்சுத் தொலைச்சுட்டா. நல்ல வேலையா அந்த மொபைல் அதே கடைலயே இருந்துச்சு. அடுத்த நாள் வீகா லேன்ட் போகணும்ன்னு பிளானோட எல்லாரும் தூங்க போயிட்டோம்.
வீகா லேன்ட் அனுபவத்த, அடுத்த இடுகைல எழுதுறேன்.
7 கருத்துகள்:
sir chanceless ..i dontருத்துரையை வழங்குக
expect this from u...really amazing and fabulous sir....you not only a good teacher and photographer but also proved as a good writer sir...and one small correction if u dont mistake me sir..the boy u mention dance very hardly is not to impress anybody..he like and love that song very very much..In hostel too he dance like that only ....so dont mistake him
sir..sorry if i say anything wrong sir...
oru kutti tea break novel padicha maathiri erunthathu... :)
sir! you have added value to our IV through your writings...........
Thank you!!!!!!!!!
more inquisitive
no maya... really i don't mistake him. But, I hope u didn't watch the watchers during that time....
thanx Mahendra....
thanx Muthulakshmi...
பெயரில்லா...
is it...? it's more inquisitive....?
கருத்துரையிடுக