தமிழ்நாடு அரசு குளிர் சாதனவசதிப் பேருந்து...
கடைசி வரிசை இருக்கைகள்...
நானும் என்னோட நண்பர்கள் 2 பேரும், திருநெல்வேலியில இருந்து கோவில்பட்டி வர்றதுக்காக திருநெல்வேலி புது பஸ் ஸ்டாண்ட்ல நின்னுக்கிட்டு இருந்தோம். இங்க எப்படினா, வாரக் கடைசி நாட்கள்ல கோவில்பட்டிய கடந்து போற பஸ்ல கோவில்பட்டி டிக்கெட் ஏத்தமாட்டாங்க. மத்த நாட்கள்ல, கூவி கூவி டிக்கெட் ஏத்துவாங்க. நாங்க நின்னுக் கிட்டு இருந்ததும் ஒரு வாரக் கடைசி நாள்தான். அந்த நேரத்துல, ஒரு தமிழ்நாடு அரசு குளிர் சாதனவசதிப் பேருந்து சென்னைக்கு கிளம்பிகிட்டு இருந்தது. எங்களுக்கும், அதுல பயணம் செய்யலாம்னு ஆசை வந்து, அந்த கண்டக்டர்கிட்ட கேட்டோம். அவரும் ஏரிக்க சொல்லிட்டாரு. ஆனா, பயண சீட்டு கேட்ட உடனே, கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சிட்டோம். திருநெல்வேலியில இருந்து கோவில்பட்டிக்கு அந்த பஸ்ல பயண சீட்டு விலை 60 ரூபா. சாதாரண பஸ்ல 21 ரூபா தான். நாங்க யோசிச்சுகிட்டு இருக்கும் போதே, பஸ் நகர்ந்துகிட்டு இருந்துச்சு. ஒரு வழியா மனச தீத்திகிட்டு, அந்த பஸ்லயே ஏறிட்டோம். அந்த பஸ்குள்ள, நாங்க மூணு பேரு மட்டும் தான் மாணவர்களா இல்லாத பயணிகள். மொத்தமே, 36 இருக்கைகள் உள்ள அந்த பஸ்ல, ஒரு இருபதுல இருந்து இருபத்தஞ்சு பேரு இருந்திருப்போம். எங்க மூணு பெற தவிர மத்த எல்லாரும் அநேகமா கல்லூரி மாணவர்கள்தான்.
சரி.... இப்போ நமக்கு அதுவா முக்கியம்... விசயத்துக்கு வருவோம்... அதுதான் முக்கியம்....
நாங்க மூணு பெரும், கடைசி வரிசை இருக்கைக்கு (2 இருக்கைகள் + ஒரு பெட்டி + 2 இருக்கைகள்) முன்னாடி இருந்த 2 வது இருக்கைல வலப்பக்கம் ரெண்டு பெரும், இடப்பக்கம் நானும் உக்காந்தோம். கடைசி வரிசை இருக்கைலதான் ரெண்டு பேரு உக்காந்து இருந்தாங்க. (உக்காந்து இருந்துச்சுங்க....?) அந்த ரெண்டு பெரும் மாணவர்கள்.... ஆணும் பெண்ணும்.....
பஸ்ல, ஏ சி எபெக்ட் உண்மைலயே சூப்பரா இருந்தச்சு. எங்களுக்கு பின்னாடி உக்காந்து இருந்த அந்த ரெண்டு பெரும் பண்ணுன அசிங்கத்த என்னான்னு சொல்ல...
(இப்போ டைம் ஆச்சு........ மிச்சத்த அப்புறம் எழுதுறேன்....)
இங்க திரும்பவும் தொடர்றேன்.....
என்ன என்னமோ பண்ணுறானுங்க... (இத எல்லாம் நீ என்ன ......க்கு பாக்குற... ஒன்னோட வேலை ..... ர பாத்துகிட்டு போக வேண்டியதுதான... அப்படின்னு நீங்க கேப்பிங்க..?) முடியலங்க. ஏன்னா... நாங்க மூணு பேரும், இந்த பஸ்ல இப்படிலாம் நடக்கும். நாம போயி ஓசில படம் பாத்துட்டு வரலாம்னு, அந்த பஸ்ல ஏறல. அன்னைக்கு அந்த பஸ்ல ஏறுனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது... இந்த மாதிரி பஸ்ல இப்படியும் ஒரு படம் பாக்கலாம்னு.
எனக்கு என்ன பன்னுரதுன்னும் தெரியல... என்கிட்டே "ஜூனியர் விகடன்" புக் இருக்குல... அதோட நம்பர் இருந்துச்சு. அந்த நம்பருக்கு முயற்சி பண்ணிப் பார்த்தேன். அந்த நம்பருக்கு லைன் கெடைக்கல. என்னோட நண்பர்களும் வேண்டாம் வேண்டாம் னுட்டாங்க. எந்திருச்சு போயி அவிங்க பக்கத்துல உக்காந்துரலாமான்னு கூட தோணுச்சு. (அநாகரிகத்துக்கு எதிரான இன்னொரு அநாகரிகமா இருக்குமேன்னு... அப்படி பண்ணல) இப்போ யோசிச்சா... அப்படிக்கூட பன்னிருக்கலாமோன்னு தோணுது. பெறகு எப்படிதாங்க இதுக்கெல்லாம் நம்மோட எதிர்ப்ப காட்டுறது?
அப்படியே..... நாங்க இறங்க வேண்டிய இடமும் வந்துருச்சு. அதாங்க... கோவில்பட்டிக்கு பஸ் வந்துருச்சு. அவிங்கள ஏதாவது செய்யணுமேன்னு தோணிகிட்டே இருந்துச்சு. நாங்க மூணு பேரும் பஸ்ஸ விட்டு கோவில்பட்டில இறங்கும் போது, அந்த ரெண்டு பேருக்கிட்டயும் போயி, "கோவில்பட்டில இருந்து ஒரு பத்தாவது நிமிசத்துல "நள்ளி" னு ஒரு ஊரு வரும். அங்க ஒரு போலிஸ் செக் போஸ்ட் இருக்கு. அங்க போலிஸ் வந்து இந்த பஸ்ஸ ரைடு பண்ணுவாங்க... ஜாக்கிரதையா இருங்க" ன்னு சீரியசா சொல்லிட்டு வந்துட்டேன். அந்தப் பையன் என்னைய ஒருமாதிரி பாத்தான். சொல்லிட்டு நாங்க இறங்கி வந்துட்டோம்.
இதுல என்னனா... அந்த பொண்ணு அவ்வளவு ஒன்னும் ரொம்ப அழகா இல்லங்க. (ரொம்ப அழகா என்ன... சுமாராக் கூட இல்ல....). இந்த அழகுங்குற visayaத்தப் பத்திப் பேசும் போது, ரெண்டு விசயத்த ரொம்ப ஆழமா சிந்திக்க வேண்டி இருக்குது.
1. காதலுக்குத்தான் அழகு முக்கியமோ...?
2. காமத்துக்கு அழகு முக்கியமே இல்லையோ...?
ஏதாவது சொல்லுங்க....
4 கருத்துகள்:
Avangaley Vandi Last seat freeya irruku eri-irukaanunga... Nee eenda anga poi mooka nolachey :)
ஹா ஹா ஹா..... அது இல்லடா ஜே.பி. .... நாங்க வெளியில சூடா இருக்குன்னு ஏ சி பஸ்சுக்குள்ள போனா... அங்கயும் இந்த மாதிரி வெப்பத்த உண்டாக்குனா... எப்படி டா....? இந்த மாதிரி ஆளுங்கல்லாம் வாய்ப்பும் இடமும் தேடி அலையுறாங்க... காச பத்தி, சுத்தி இருக்குரவுன்கலப் பத்தி எல்லாம் ஒரு மசுரும் யோசிக்கிறது இல்ல.
Sir, Neenga Poyi mooka nolachaal, ivanala mudiyala adhukkuthaan ippadi pesuraanuu solluvaanga. Ooru remba kettu pochu, kaasu kuduthaal edhuvum seivaanunga. BASTARDS.
நீ சொல்லுறது ரொம்ப சரி ரங்கா... காசக் கொடுத்தா எந்த எல்லைக்கும் போயி எதுவும் செயவாய்ங்க. இங்க காசுக்கும்.... சுகத்துக்கும்..... பெரிய வித்தியாசத்த பாக்க முடியல. சுகம் கெடைக்கும்னா எந்த இடம்ன்லாம் பாக்றது இல்ல. நீ சொன்னது மாதிரி, இது மற்றும் இவிங்க... "தே....." தான்.
கருத்துரையிடுக