எங்களுக்கு சரி....அடுத்தவுங்களுக்கு தப்பு....
நாங்க எல்லாரும் எங்க குடும்பத்தோட, மதுரை போத்திஸ்ல துணி எடுக்கிறதுக்காக போய் இருந்தோம். நான், என் பொண்டாட்டி, என் சகலை, என் மதினி, எங்க பிள்ளைகள், என் மச்சினன் எல்லாரும் போயிருந்தோம். அங்க சுடிதார் செக்சன்ல பர்ச்சேஸ் பண்ணிக்கிட்டு இருக்கும் போது, எங்க பக்கத்துல ஒரு கொஞ்ச வயசு லேடியும் அதுக்கு தேவையான துணிகள எடுத்துக்கிட்டு இருந்துச்சு. அப்ப எங்க குரூப்ல ஒருத்தரு, அந்த லேடி செலெக்ட் பண்ணி வச்சிருந்த டிரஸ்கள பாத்து... இது பெரிய ஆளுங்களுக்கா இல்ல சின்ன பிள்ளைங்களுக்கான்னு எங்ககிட்ட கேட்டாரு. அதுக்கு நாங்க எங்களுக்குள்ள பேசிச் சிரிச்சிக்கிட்டு, அந்த ஆளுகிட்டே அங்க இருந்த இன்னொரு டிரெஸ்ஸ காமிச்சு "உன்னோட மனைவிக்கு அந்த மாதிரி டிரஸ் வாங்கி குடுன்னு" சொல்லி கமன்ட் அடிச்சிக்கிட்டு இருந்தோம். சிரிச்சுக்கிட்டு இருந்தோம். இத அந்த லேடி தப்பா புரிஞ்சுகிருச்சு போல... பக்கத்துல அந்த லேடியோட அம்மாவும் இருந்தாங்க. அவுங்க கைல ஒரு சின்ன பாப்பாவும் இருந்துச்சு. அந்த பாப்பா, அந்த லேடியோட குழந்தையா இருக்கும்னு நினைக்கிறேன். இந்த கான்வர்சேசன் நடந்து கொஞ்சம் நேரம் கழிச்சு அந்த லேடியோட அம்மா... எங்க ஆளு ஒருத்தரு கொஞ்சம் தள்ளி தனியா வேற ஒரு துணிய பாத்துக்கிட்டு இருக்கும் போது, "என்ன இது... ஆம்பள பசங்க தனியா வந்தாத்தான் இப்படி கேலி பண்ணி விளையாடுவாங்கன்னு பாத்தா... நீங்க குடும்பத்தோட வந்து இப்படி மோசமா பேசுறிங்க..." அப்படின்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க. எங்க ஆளுக்கு கொஞ்ச நேரம் ஒன்னும் புரியல. அதுக்கு அப்புறம், கொஞ்சம் நிதானத்துக்கு வந்து, அந்த அம்மா பேசுறது கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எங்களுக்குள்ள நடந்த கான்வேர்சேசனப் பத்தின்னு புரிஞ்சுக்கிட்டாங்க. இவுங்களும், அந்த கான்வேர்சேசன் அந்த லேடிய பத்தி இல்லன்னு புரிய வைக்க ட்ரை பண்ணுனாங்க. அதுக்குள்ள அந்த அம்மா, வருத்தத்தோட கோபமாவும் பேச ஆரம்பிச்சிட்டாங்க. அந்த லேடியும் சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க. எங்க ஆளுக்கும், கோபம் வந்துருச்சு. இவுங்களும் கோபத்துல விரல எல்லாம் சொடுக்கி, நீட்டி சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க. நீங்க ஒன்னும் கமன்ட் அடிக்கிற அளவுக்கு இல்லையேன்னு... அந்த லேடியோட அழகைப் பத்தி எல்லாம் பேச ஆரம்பிச்சிட்டாங்க. அவுங்களும் பதிலுக்கு எங்க குடும்பத்த ரவுடி குடும்பம்னும், எங்க சைடு சத்தம் போட்டவர ரவுடின்னும் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. நடுவுல வேற ஒருத்தரு வேற வந்து, பொம்பளை ஆளுங்க எடுக்குற டிரெஸ்ஸ பத்தி ஆம்பளை ஆளுங்க எதுக்கு பேசனும்... அப்படின்னு நியாயம் சொல்லிட்டுப் போனாரு. அதுக்குள்ள அந்த லேடி, யாருக்கோ அதோட செல் போன்ல இருந்து கால் பண்ணி, அவர வர சொல்லிருச்சு. அவரும் வந்தாரு. அவருமே, கொஞ்ச வயசு ஆளுதான். அவரு, அவரு பங்குக்கு நியாயத்தக் கோபத்தோடக் கேட்டாரு. அவருகிட்டயும், கொஞ்சம் நிதானமா (பட படப்போடதான்...) விசயத்த விளக்கவும்.... சரி சரின்னுட்டு கொஞ்சமும் திருப்தி இல்லாம, அவுங்க எல்லாத்தையும் அந்த பக்கமா கூட்டிக்கிட்டு போனாரு. நாங்களும் கிளம்பி வந்துட்டோம்.இதுல பாத்திங்கனா, நாங்க பேசுனது எங்களுக்கு தப்பா படல. ஆனா பக்கத்துல இருந்தவுங்களுக்கு, அவுங்களைப் பத்திதான் பேசுறோம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்கள்ள... ஒருவேளை, இந்த நிகழ்ச்சில, அந்த லேடி இடத்துல நாம இருந்திருந்தோம்னா... நமக்கும் அப்படித்தான இருக்கும். சங்கடமாத்தான இருந்திருக்கும். அதோட... அவுங்க கோபப் பட்டு பேசுனாலும், நாம எதுக்கு கோபப் படனும்...? எதுக்கு விரல நீட்டி, சொடக்கு போட்டு, சத்தமாப் பேசனும்...? அமைதியா, ஒரு சாரி சொல்லிட்டு, அந்த எடத்த விட்டு வந்திருக்கலாமே...? அதுக்கு ஏனோ, நம்ம உடன் பட விருப்பப் படாம இருக்கோம்.
சண்டை போடாம... சண்டைய விட்டு விலகி வர்றதுதானே புத்திசாலித்தனம்...
என்ன சொல்றிங்க...?
5 கருத்துகள்:
konjam yosika vendiya vishyam than..athu sari..unga groupla antha aalu yaru??bharathi thana?
antha lady kovapattathu o.k. antha vayathaana lady nithaanama peciyerukkalamillaiya.
nee entha "antha aala" kaekkura....?
coment adicha aalayaa....? illainaa... kobapatta aalaiyaa....?
correct.... antha old lady konjam illa.... rombavae nithaanamaa paesi irukkalaam.
but, ithai ellaam kaaranamaa solli... namma sandai poda koodaathula....
பொது இடங்களில் நாகரிகம் கருதி நிதானமாகப் பேசி இருக்கலாம்:▶
கருத்துரையிடுக