கோவில்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் " ஒரு நிரந்தர கோடையை சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது" . கடந்த சில வருடங்களாகவே இப்பகுதியில் தேவையான அளவு மழை பெய்யவில்லை. நிலத்தடி நீர் மட்டம் மிக அதிகமான அளவுகுறைந்து கடுமையான தண்ணீர் பஞ்சம் வந்துவிடுமோ என்ற ஒருவிதமான அச்சம் எங்கள் அனைவரின் மனதிலும் வந்துவிட்டது. இருக்கும் தண்ணீரையும் எப்படி சிக்கனமாகப் பயன்படுத்துவது என்ற விழிப்புணர்வும் இல்லை.
இன்னும் ஓரிரு நாள்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் "வட கிழக்குப் பருவ மழை" யும் பொய்த்துவிடும் பட்சத்தில் நிச்சயமான ஒரு பஞ்சத்தை நாங்கள் சந்திப்போம் என்பது உறுதி.
எங்களோடு சேர்ந்து நீங்களும் பிரார்த்தியுங்கள்... மழை க்காகவும், தண்ணீர் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு க்காகவும்.
வறண்ட மனதோடு....மழையை எதிர்நோக்கி........